ஒரு ஸ்டோரை ஒரு நிறுவனத்தில் குழுவாக்குதல்
ஒரு புதிய நிறுவனத்தில் ஏற்கெனவே உள்ள ஸ்டோரைச் சேர்க்கலாம் அல்லது உங்களுக்குச் சொந்தமான வேறு ஒரு நிறுவனத்தில் ஒரு ஸ்டோரைக் குழுவாக்கலாம். இரண்டு ஸ்டோர்களைக் குழுவாக்கி புதிய நிறுவனத்தையும் உருவாக்கலாம். ஸ்டோர்களை நிறுவனங்களாகக் குழுவாக்குவதன் மூலம், பகிரப்பட்ட பயனர்கள் மற்றும் மையப்படுத்தப்பட்ட அமைப்புகளுடன் பல ஸ்டோர்களை நிர்வகிக்க முடியும்.
ஏற்கெனவே உள்ள ஒரு நிறுவனத்தில் புதிய ஸ்டோரைச் சேர்க்க விரும்பினால், அதற்குப் பதிலாக ஒரு ஸ்டோரை உருவாக்கவும்.
இந்தப் பக்கத்தில் உள்ளவை
தகுதித் தேவைகள்
ஒரு நிறுவனத்தில் ஒரு ஸ்டோரைக் குழுவாக்க, அனைத்து ஸ்டோர்களும் பின்வரும் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்:
- குழுவாக்கி ஒரு நிறுவனத்தை உருவாக்க, உங்களிடம் குறைந்தது இரண்டு ஸ்டோர்கள் இருக்க வேண்டும்.
- நீங்கள் குழுவாக்க விரும்பும் அனைத்து ஸ்டோர்களுக்கும் நீங்கள் கடையின் உரிமையாளராக இருக்க வேண்டும்.
- பில்லிங் நாணயமாக INR-ஐக் கொண்டுள்ள ஸ்டோர்களில் இருந்து ஒரு நிறுவனத்தை உங்களால் உருவாக்க முடியாது.
- ஒரு நிறுவனத்திலுள்ள அனைத்து ஸ்டோர்களும் ஒரே பில்லிங் நாணயத்தைக் கொண்டிருக்க வேண்டும். உதாரணமாக, பில்லிங் நாணயமாக USD-ஐக் கொண்டுள்ள இரண்டு ஸ்டோர்களைக் கொண்டு உங்களால் ஒரு நிறுவனத்தை உருவாக்க முடியும். பில்லிங் நாணயமாக CAD-ஐக் கொண்டுள்ள எந்த ஸ்டோரும் உங்கள் நிறுவனத்தில் சேர்க்கத் தகுதிபெறாது.
- நிறுவனத்திற்கான பில்லிங் நாணயம் அமைக்கப்பட்ட பிறகு, அதை மாற்ற முடியாது.
ஸ்டோர் குழுவாக்கத்தை Shopify Plus ஸ்டோர்களால் ஏன் பயன்படுத்த முடியாது
Shopify Plus திட்டத்திலுள்ள ஸ்டோர்கள் மற்றும் நிறுவனங்கள், ஸ்டோர் குழுவாக்கத்திற்குப் பதிலாக விரிவாக்க ஸ்டோர்கள் என்ற வேறொரு நிறுவனக் கட்டமைப்பைப் பயன்படுத்துகின்றன. Plus நிறுவனங்கள், பின்வருபவை உட்பட பிரத்யேகமான அம்சங்களைக் கொண்டுள்ளன:
- ஒரே ஒப்பந்தத்தின் கீழ் மையப்படுத்தப்பட்ட பில்லிங்
- நிறுவன அளவிலான பங்குகள் மற்றும் அனுமதிகளுடன் கூடிய மேம்பட்ட பயனர் நிர்வாகம்
- ஸ்டோர் தரவை நகலெடுப்பதற்கான ஸ்டோர் நகல் அம்சங்களுக்கான அணுகல்
- உங்கள் நிறுவனம் முழுவதுமான பல ஸ்டோர்களுக்கான பகுப்பாய்வு
நீங்கள் Shopify Plus திட்டத்தில் இருந்து பல ஸ்டோர்களை நிர்வகிக்க விரும்பினால், Shopify Plus திட்டத்திலுள்ள நிறுவனங்களுக்கான விரிவாக்க ஸ்டோர்களின் கண்ணோட்டத்தைப் பார்க்கவும்.
Shopify Plus ஆதரவால் செய்யக்கூடிய உதவிகள்
நீங்கள் Shopify Plus திட்டத்தில் இருந்தால், பின்வரும் பணிகளில் Shopify Plus ஆதரவு உங்களுக்கு உதவ முடியும்:
- உங்களின் Shopify Plus நிறுவனத்தில் விரிவாக்க ஸ்டோர்களாக ஏற்கெனவே உள்ள ஸ்டோர்களைச் சேர்த்தல்
- உங்கள் ஒப்பந்தத்திற்குள் புதிய விரிவாக்க ஸ்டோர்களை உருவாக்குதல்
- ஒரு ஸ்டோரை டெவலப்மெண்டிலிருந்து புரொடக்ஷனுக்கு மாற்றுதல்
- உங்கள் ஸ்டோர்கள் விரிவாக்க ஸ்டோருக்கான நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யவில்லை எனில், பல பிராண்டு ஒப்பந்த விருப்பங்களைப் பற்றி ஆலோசித்தல்
- உங்கள் நிறுவனம் தொடர்பான ஒப்பந்தம் மற்றும் பில்லிங் கேள்விகள்
உதவி பெற, Shopify Plus ஆதரவைத் தொடர்புகொள்ளவும்.
கருத்தில் கொள்ள வேண்டியவை
புதிய நிறுவனத்திற்கு உங்கள் ஸ்டோரை மாற்றுவதற்கு முன், கருத்தில் கொள்ள வேண்டிய பின்வரும் விஷயங்களைச் சரிபார்க்கவும்:
பயனர் அனுமதி குறித்துக் கருத்தில் கொள்ள வேண்டியவை
- புதிய நிறுவனத்தில் ஒரு ஸ்டோரைக் குழுவாக்கும்போது, பயனர்கள் தங்களின் ஸ்டோர் அனுமதிகளைத் தக்கவைத்துக்கொள்கின்றனர், ஆனால் அவர்களின் நிறுவன அனுமதிகள் அகற்றப்படும். குழுவாக்கத்தை முடித்த பிறகு பணியாளர் அனுமதிகளைச் சரிபார்க்கவும்.
- புதிய நிறுவனத்தை உருவாக்கிய பிறகு, பயனர் மேலாண்மை அல்லது பில்லிங் அனுமதிகள் வழங்கப்பட்ட பயனர்களின் அனுமதிகள் அகற்றப்படலாம், ஏனெனில் அவை தற்போது நிறுவன அனுமதிகளாக உள்ளன.
பில்லிங் மற்றும் நிதி அனுமதி குறித்துக் கருத்தில் கொள்ள வேண்டியவை
- ஒரு நிறுவனத்தில் ஒரு ஸ்டோரைக் குழுவாக்கிய பிறகு, பின்வரும் நிதி ஸ்டோர் அனுமதிகள் ஆகியவை பில்லிங் நிறுவன அனுமதிகளுக்கு மாற்றப்படும், மேலும் நிறுவன உரிமையாளரைத் தவிர அனைத்துப் பயனர்களிடமிருந்தும் அவை அகற்றப்படும்:
- பில்லிங்கைப் பார்த்தல் மற்றும் பில்லிங் மின்னஞ்சல்களைப் பெறுதல்
- பில்லிங் கட்டண முறைகளைத் திருத்துதல் மற்றும் இன்வாய்ஸ்களைச் செலுத்துதல்
- பில்லிங் நிறுவன அனுமதிகள், ஒரு நிறுவனத்தில் உள்ள அனைத்து ஸ்டோர்களுக்கும் பொருந்தும். இது முக்கியமான தகவல் என்பதால், பில்லிங் அனுமதிகள் நிறுவன உரிமையாளர் மற்றும் நிறுவன நிர்வாகி பங்கு உள்ள எந்தவொரு பணியாளருக்கும் மட்டுமே கிடைக்கும்.
- பின்வரும் நிதி ஸ்டோர் அனுமதிகள் ஆகியவற்றை உங்கள் நிறுவனத்திலுள்ள ஸ்டோர் பங்குகளுக்கு உங்களால் தொடர்ந்து ஒதுக்க முடியும்:
- திட்டத்தை நிர்வகித்தல்
- செயலி பில்லிங்கை நிர்வகித்தல்
- Shopify Payments பேஅவுட்களைப் பார்த்தல்
- பிற கட்டண அமைப்புகளை நிர்வகித்தல்
- பேலன்ஸ் கணக்குச் செயல்பாட்டைப் பார்த்தல்
- அனைத்து Shopify கிரெடிட் கணக்குச் செயல்பாட்டையும் பார்த்தல்
கூடுதலாகக் கருத்தில் கொள்ள வேண்டியவை
- நிறுவன உரிமையாளர் மட்டுமே ஒரு நிறுவனத்தை உருவாக்கவும், ஒரு நிறுவனத்தில் ஸ்டோர்களைக் குழுவாக்கவும் முடியும்.
- நீங்கள் புதிய உரிமையாளருக்கு ஒரு ஸ்டோரை இடமாற்றினால் அல்லது நிறுவனத்திலிருந்து ஒரு ஸ்டோரை அகற்றினால், மேலும் அதுவே உங்கள் நிறுவனத்தின் ஒரே ஸ்டோர் எனில், அந்த நிறுவனம் நீக்கப்படும்.
- தொடர் செயலி கட்டணங்கள் ஸ்டோருடன் இணைக்கப்பட்டுள்ளன, நிறுவனத்துடன் அல்ல, எனவே கட்டணம் ரத்துசெய்யப்படாவிட்டால், நீங்கள் மற்றொரு நிறுவனத்திற்கு ஒரு ஸ்டோரை மாற்றிய பிறகும் அவை தொடர்ந்து பில் செய்யப்படும். மாற்றத்திற்கு முன் ஏற்பட்ட கட்டணங்கள் முந்தைய நிறுவனத்தின் பில்லிங்குடன் இருக்கும், மாற்றத்திற்குப் பின் ஏற்படும் கட்டணங்கள் ஸ்டோரின் தற்போதைய பில்லிங்கைச் சேர்ந்தவை.
ஸ்டோர்களைக் குழுவாக்குதல்
உங்களுக்குச் சொந்தமான வேறொரு நிறுவனத்துடன் ஒரு ஸ்டோரைக் குழுவாக்கலாம் அல்லது புதிய நிறுவனத்துடன் ஸ்டோர்களைக் குழுவாக்கலாம்.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, அமைப்புகள் > பொதுவானவை என்பதற்குச் செல்லவும்.
ஸ்டோரை இடமாற்று பிரிவில், நிர்வகி என்பதைக் கிளிக் செய்யவும்.
ஸ்டோரை இடமாற்று உரையாடல் பெட்டியில், புதிய அல்லது ஏற்கனவே உள்ள நிறுவனத்திற்கு ஸ்டோரை நகர்த்து என்பதைக் கிளிக் செய்துவிட்டு, தொடரவும் என்பதைக் கிளிக் செய்யவும்.
பின்வரும் விருப்பங்களில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்:
- தகுதியான நிறுவனத்தில் ஸ்டோரைக் குழுவாக்க, நீங்கள் ஸ்டோரைச் சேர்க்க விரும்பும் நிறுவனத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
- புதிய நிறுவனத்தில் ஸ்டோரைக் குழுவாக்க, நிறுவனத்தை உருவாக்கு என்பதைக் கிளிக் செய்து, உங்கள் நிறுவனத்திற்கான பெயரை உள்ளிடவும்.
தொடரவும் என்பதைக் கிளிக் செய்யவும்.
நிறுவனத்தின் விவரங்களைச் சரிபார்த்துவிட்டு, உறுதிப்படுத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
நிறுவனத்தை உருவாக்கிய பிறகு, உங்கள் நிறுவனத்திலிருந்து ஸ்டோர்களைச் சேர்க்கலாம் அல்லது அகற்றலாம் அல்லது உங்கள் புதிய நிறுவனத்தில் கூடுதல் ஸ்டோர்களைக் குழுவாக்கலாம்.
ஸ்டோரைக் குழுவாக்குவதில் சிக்கல் தீர்த்தல்
ஸ்டோர்களைக் குழுவாக்கும்போது சிக்கல்கள் ஏற்பட்டால், பின்வரும் பொதுவான சிக்கல்களையும் தீர்வுகளையும் சரிபார்க்கவும்.
பில்லிங் நாணயத் தகுதிப் பிழைகளுக்குச் சிக்கல் தீர்த்தல்
நிறுவனத்திலுள்ள அனைத்து ஸ்டோர்களும் ஒரே பில்லிங் நாணயத்தைக் கொண்டிருக்க வேண்டும்.
இந்தச் சிக்கலைத் தீர்க்க:
- ஏற்கனவே அந்த நிறுவனத்தின் ஒரு பகுதியாக இருக்கும் ஸ்டோரில் அமைப்புகள் > பில்லிங் என்பதற்குச் சென்று, நீங்கள் சேர முயலும் நிறுவனத்தின் பில்லிங் நாணயத்தை உறுதிப்படுத்தவும்.
- நீங்கள் குழுவாக்க விரும்பும் ஸ்டோரில் வேறு பில்லிங் நாணயம் இருந்தால், அதை அந்த நிறுவனத்தில் சேர்க்க முடியாது.
- ஒரே பில்லிங் நாணயத்தைப் பகிர்ந்துகொள்ளும் ஸ்டோர்களைக் கொண்டு புதிய நிறுவனத்தை உருவாக்க வேண்டியிருக்கலாம்.
ஸ்டோரைக் குழுவாக்குவதற்கான விருப்பம் இல்லாததற்குச் சிக்கல் தீர்த்தல்
புதிய அல்லது ஏற்கனவே உள்ள நிறுவனத்திற்கு ஸ்டோரை நகர்த்து என்ற விருப்பம் காணப்படவில்லை எனில், பின்வரும் காரணிகளைச் சரிபார்க்கவும்:
- நீங்கள் கடையின் உரிமையாளராக உள்நுழைந்துள்ளதை உறுதிப்படுத்தவும். கடையின் உரிமையாளர்களால் மட்டுமே ஸ்டோர்களைக் குழுவாக்க முடியும்.
- உங்கள் ஸ்டோர், Shopify Plus திட்டத்தில் இல்லை என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளவும். Shopify Plus ஸ்டோர்கள், அவற்றுக்குப் பதிலாக விரிவாக்க ஸ்டோர்களைப் பயன்படுத்துகின்றன.
- குழுவாக்குவதற்கு உங்களிடம் குறைந்தபட்சம் இரண்டு ஸ்டோர்கள் இருப்பதைக் சரிபார்க்கவும்.
உங்கள் ஸ்டோர் உரிமையைச் சரிபார்க்க:
- உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, அமைப்புகள் > பயனர்களும் அனுமதிகளும் என்பதற்குச் செல்லவும்.
- உங்கள் கணக்கு கடையின் உரிமையாளர் எனப் பட்டியலிடப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்தவும்.
INR பில்லிங் நாணயப் பிழைகளுக்குச் சிக்கல் தீர்த்தல்
இந்திய ரூபாய் (INR) பில்லிங் நாணயத்தைக் கொண்ட ஸ்டோர்களை நிறுவனங்களாகக் குழுவாக்க முடியாது.
உங்கள் விருப்பத்தேர்வுகள்:
- உங்களிடம் INR அல்லாத பிற பில்லிங் நாணயங்களைக் கொண்ட ஸ்டோர்கள் இருந்தால், அந்த ஸ்டோர்களை ஒன்றாகக் குழுவாக்கலாம்.
- நிறுவனத்திற்கு வெளியே உங்கள் INR பில்லிங் செய்யப்பட்ட ஸ்டோரைத் தனியாகத் தொடர்ந்து நிர்வகிக்கவும்.
தவறான நிறுவனப் பெயருக்குச் சிக்கல் தீர்த்தல்
ஸ்டோர்களைக் குழுவாக்கிய பிறகு, உங்கள் நிறுவனப் பெயரானது கூட்டுப்பணியாளரின் பெயரையோ தவறான தகவலையோ காட்டினால்:
- ஏதேனும் ஸ்டோர்களில் சமீபத்தில் உரிமை மாற்றம் செய்யப்பட்டதா என்பதை உறுதிப்படுத்தவும்.
- நிறுவனப் பெயர், உருவாக்கப்பட்ட நேரத்தில் இருந்த அசல் கடையின் உரிமையாளரைப் பிரதிபலிக்கக்கூடும்.
- தேவைப்பட்டால், நிறுவனப் பெயர் புதுப்பிப்பைக் கோர Shopify ஆதரவைத் தொடர்புகொள்ளவும்.
குழுவாக்கிய பிறகு இழந்த அனுமதிகளுக்குச் சிக்கல் தீர்த்தல்
நிறுவனமாக ஸ்டோர்களைக் குழுவாக்கும்போது, சில அனுமதிகள் மாறும்:
- பில்லிங் மற்றும் நிதி அனுமதிகள் நிறுவன நிலைக்கு நகர்த்தப்படுவதோடு, நிறுவன உரிமையாளரைத் தவிர பிற பயனர்கள் அனைவரிடமிருந்தும் அகற்றப்படும்.
- பயனர் மேலாண்மை அனுமதிகள், நிறுவன அளவிலான அனுமதிகளாக மாறும்.
அணுகலை மீட்டமைக்க:
- நிறுவன உரிமையாளராக, அமைப்புகள் > பயனர்களும் அனுமதிகளும் என்பதற்குச் செல்லவும்.
- ஒவ்வொரு பயனரின் பங்கையும் அனுமதிகளையும் சரிபார்க்கவும்.
- பில்லிங் அல்லது பயனர் மேலாண்மை அணுகல் தேவைப்படும் பயனர்களுக்கு, பொருத்தமான நிறுவன அனுமதிகளை ஒதுக்கவும்.
குழுவாக்கும் பிழைகளுக்குச் சிக்கல் தீர்த்தல்
ஸ்டோர்களைக் குழுவாக்க முயலும்போது பிழைச் செய்தி வந்தால்:
- உங்கள் உலாவியைப் புதுப்பித்துவிட்டு, மீண்டும் முயலவும்.
- உங்கள் உலாவித் தேக்ககத்தையும் குக்கீகளையும் அழிக்கவும்.
- வேறு உலாவி அல்லது மறைநிலை/தனிப்பட்ட பயன்முறையைப் பயன்படுத்த முயலவும்.
- அனைத்து ஸ்டோர்களும் தகுதித் தேவைகளைப் பூர்த்திசெய்கின்றனவா என்பதை உறுதிப்படுத்தவும்.
- பிழை தொடர்ந்தால், பிழைச் செய்தியைத் திரைப்பிடிப்பு எடுத்து, Shopify ஆதரவைத் தொடர்புகொள்ளவும்.
FAQ
நான் Shopify Plus திட்டத்தில் இருக்கிறேன், ஆனால் ஸ்டோர்களைக் குழுவாக்க விரும்புகிறேன். என்னென்ன விருப்பத்தேர்வுகள் உள்ளன?
Shopify Plus, ஸ்டோரைக் குழுவாக்குவதற்குப் பதிலாக விரிவாக்க ஸ்டோர்கள் என்ற வேறொரு சிஸ்டத்தைப் பயன்படுத்துகிறது. உங்களுக்குப் பின்வரும் விருப்பத்தேர்வுகள் உள்ளன:
- விரிவாக்க ஸ்டோர்களை உருவாக்கு: உங்கள் ஒப்பந்தம் மற்றும் பில்லிங்கைப் பகிர்ந்துகொள்ளும் புதிய ஸ்டோர்களை நேரடியாக உங்கள் Plus நிறுவனத்தில் உருவாக்கலாம்.
- ஏற்கனவே உள்ள ஸ்டோர்களைச் சேர்: உங்களிடம் ஏற்கனவே ஒரு ஸ்டோர் (சோதனை, கூட்டாளர் உருவாக்கியது அல்லது தன்னிச்சையானது) இருந்தால், Shopify Plus ஆதரவைத் தொடர்புகொள்வதன் மூலம் அதை விரிவாக்க ஸ்டோராகச் சேர்க்கக் கோரலாம்.
- பல்வேறு பிராண்ட் ஒப்பந்தங்கள்: உங்கள் ஸ்டோர்கள், வேறுபட்ட பிராண்டுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி, விரிவாக்க ஸ்டோரின் அளவுகோல்களைப் பூர்த்திசெய்யவில்லை எனில், பல பிராண்டுகளுக்கான ஒப்பந்த விருப்பத்தேர்வுகள் குறித்து Shopify Plus ஆதரவுடன் கலந்தாலோசிக்கவும்.
Shopify Plus திட்டத்திலுள்ள நிறுவனங்களுக்கான விரிவாக்க ஸ்டோர்கள் குறித்து மேலும் அறிக.
என் நிறுவனத்தின் பில்லிங் நாணயத்தை மாற்ற முடியுமா?
இல்லை. நிறுவனத்தின் பில்லிங் நாணயத்தை அமைத்த பிறகு, அதை மாற்ற முடியாது. நிறுவனத்தை உருவாக்கும்போது, நீங்கள் ஒன்றாகக் குழுவாக்கும் முதல் ஸ்டோர்களின் அடிப்படையில் பில்லிங் நாணயம் தீர்மானிக்கப்படும். அந்த நிறுவனத்தில் நீங்கள் சேர்க்கும் அனைத்து ஸ்டோர்களும் ஒரே பில்லிங் நாணயத்தைக் கொண்டிருக்க வேண்டும்.
வெவ்வேறு பில்லிங் நாணயங்களைக் கொண்ட ஸ்டோர்கள் தேவைப்பட்டால், அவற்றை நீங்கள் தனித்தனி நிறுவனங்களில் நிர்வகிக்க வேண்டும்.
நான் ஸ்டோர்களைக் குழுவாக்கும்போது என் கட்டண முறைகளுக்கு என்ன நடக்கும்?
நிறுவனமாக ஸ்டோர்களைக் குழுவாக்கும்போது:
- கட்டண முறைகள், நிறுவன நிலையில் ஒருங்கிணைக்கப்படுகின்றன.
- நிறுவனத்தில் உள்ள அனைத்து ஸ்டோர்களுக்கான பில்லிங்கை நிறுவன உரிமையாளர் நிர்வகிக்கிறார்.
- தனிப்பட்ட ஸ்டோர் பில்லிங் அனுமதிகள் பணியாளர்களிடமிருந்து அகற்றப்படும். நிறுவன-நிலை பில்லிங் அனுமதிகள் உள்ள பயனர்கள் மட்டுமே கட்டண முறைகளை நிர்வகிக்க முடியும்.
ஒரு நிறுவனத்திலிருந்து ஸ்டோர்களை என்னால் பிரிக்க முடியுமா?
ஆம். நீங்கள் நிறுவன உரிமையாளராகவோ அல்லது தகுந்த அனுமதிகளைப் பெற்றவராகவோ இருந்தால், ஒரு நிறுவனத்திலிருந்து ஸ்டோரை அகற்றலாம். நினைவில்கொள்ள வேண்டியவை:
- ஒரு நிறுவனத்தில் உள்ள ஒரேயொரு ஸ்டோரை நீங்கள் அகற்றினால், அந்த நிறுவனம் நீக்கப்படும்.
- ஒரு ஸ்டோரை அகற்றிய பிறகு, அந்த ஸ்டோருக்கு நிறுவன பில்லிங் இனி பொருந்தாது என்பதால், அதற்குக் கட்டண முறையைச் சேர்க்க வேண்டும்.
ஒரு நிறுவனத்தில் என்னால் எத்தனை ஸ்டோர்களை வைத்திருக்க முடியும்?
Shopify Plus அல்லாத பிற திட்டங்களில் உள்ள ஸ்டோர்களைப் பொறுத்தவரை, ஒரு நிறுவனத்தில் நீங்கள் குழுவாக்கக்கூடிய ஸ்டோர்களின் எண்ணிக்கைக்கு எந்தவொரு குறிப்பிட்ட வரம்பும் இல்லை. இருப்பினும், அனைத்து ஸ்டோர்களும்:
- ஒரே பில்லிங் நாணயத்தைப் பகிர வேண்டும்
- ஒரே கடையின் உரிமையாளரைக் கொண்டிருக்க வேண்டும்
ஸ்டோர் குழுவாக்கம் குறித்து Shopify ஆதரவைத் தொடர்புகொள்வதற்கு முன்
Shopify ஆதரவைத் தொடர்புகொள்வதற்கு முன், உங்கள் சிக்கலை விரைவாகத் தீர்க்க உதவும் பின்வரும் தகவல்களைச் சேகரிக்கவும்:
- நீங்கள் குழுவாக்க முயலும் அனைத்து ஸ்டோர்களின்
myshopify.comURLகள் - ஒவ்வொரு ஸ்டோரின் பில்லிங் நாணயம் (அமைப்புகள் > பில்லிங் என்பதில் இருக்கும்)
- நீங்கள் சந்தித்த ஏதேனும் பிழைச் செய்திகளின் திரைப்பிடிப்புகள்
- மேலே உள்ள சிக்கல் தீர்த்தல் பிரிவிலிருந்து நீங்கள் ஏற்கனவே முயன்ற படிகள்
- அனைத்து ஸ்டோர்களுக்கும் கடையின் உரிமையாளராக நீங்கள் உள்நுழைந்துள்ளீர்கள் என்பதற்கான உறுதிப்படுத்தல்
- பொருந்துமாயின், நீங்கள் சேர விரும்பும் நிறுவனத்தின் பெயர்
இந்தத் தகவல்களைத் தயாராக வைத்திருப்பது, உங்களுக்குச் சிறப்பாக உதவ Shopify ஆதரவுக்கு உதவியாக இருக்கும்.