உங்கள் Shopify Plus திட்டத்தைப் புதுப்பித்தல் அல்லது தரமிறக்குதல்
உங்கள் புதுப்பிப்புத் தேதி நெருங்கும்போது உங்கள் ஸ்டோருக்குத் தகுதியிருந்தால், உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து Shopify Plus திட்டத்தைப் புதுப்பிக்கலாம் அல்லது தரமிறக்கலாம். புதுப்பித்தல் அல்லது தரமிறக்குதல் உடனடியாகச் செயல்படாமல் உங்களின் புதுப்பிப்புத் தேதியன்று செயல்படத் தொடங்கும்.
உங்களால் Shopify நிர்வாகியிலிருந்து உங்கள் Shopify Plus ஒப்பந்தத்தை ரத்துசெய்ய முடியாது. உங்கள் ஒப்பந்தத்தை ரத்துசெய்ய அல்லது உங்கள் Shopify நிர்வாகியில் புதுப்பித்தல் அல்லது தரமிறக்குதல் விருப்பத்தேர்வுகள் காட்டப்படாவிட்டால், உங்கள் வாடிக்கையாளர் வெற்றி மேலாளரைத் (CSM) தொடர்புகொள்ளவும். உங்களுக்கு CSM இல்லையென்றால், Shopify Plus ஆதரவைத் தொடர்புகொள்ளவும்.
இந்தப் பக்கத்தில்
உங்கள் Shopify Plus திட்டத்தைப் புதுப்பியுங்கள்
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து 3 ஆண்டு காலவரையறைக்கு உங்கள் Shopify Plus திட்டத்தைப் புதுப்பிக்க உங்களுக்குத் தகுதியிருந்தால், அந்த விருப்பத்தேர்வு திட்டம் பக்கத்தில் காட்டப்படும்.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, அமைப்புகள் > திட்டம் என்பதற்குச் செல்லவும்.
காட்டப்படும் விருப்பத்தேர்வைப் பொறுத்து, காலவரையறையை நீட்டி அல்லது நீட்டிக்கப்பட்ட காலவரையறையைப் புதுப்பி என்பதைக் கிளிக் செய்யவும்.
புதுப்பிப்பு விவரங்களை மதிப்பாய்வு செய்யவும்.
உங்கள் Shopify Plus திட்டத்தைப் புதுப்பிக்க, பிராம்ட்களைப் பின்பற்றவும்.
உங்கள் Shopify Plus திட்டத்தைத் தரமிறக்குங்கள்
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து Shopify Plus திட்டத்தைத் தரமிறக்க உங்களுக்குத் தகுதியிருந்தால், திட்டம் பக்கத்திலிருந்து கிடைக்கப்பெறும் திட்ட விருப்பத்தேர்வுகளை நீங்கள் மதிப்பாய்வு செய்யலாம்.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, அமைப்புகள் > திட்டம் என்பதற்குச் செல்லவும்.
திட்டத்தை மாற்று என்பதைக் கிளிக் செய்யவும்.
நீங்கள் மாற விரும்பும் திட்டத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
மாற்றம் எப்போது செயல்படத் தொடங்கும் என்பது மற்றும் அம்சங்கள், வரம்புகள், மாதாந்திரச் செலவுகள் ஆகியவற்றில் ஏதேனும் மாற்றங்கள் உள்ளதா என்பது உள்ளிட்ட திட்ட மாற்ற விவரங்களை மதிப்பாய்வு செய்யவும்.
கேட்கப்பட்டால், இந்த மாற்றங்களைப் புரிந்துகொண்டு ஏற்கிறேன் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
தொடர்க என்பதைக் கிளிக் செய்யவும்.
திட்ட மாற்றத்தை மதிப்பாய்வு செய் உரையாடலில், புரிந்தது என்பதைக் கிளிக் செய்யவும்.
நீங்கள் தரமிறக்கலைத் திட்டமிட்ட பிறகு, உங்கள் Shopify நிர்வாகி திட்டமிடப்பட்ட திட்ட மாற்றத்தையும் புதிய திட்டம் தொடங்கும் தேதியையும் காட்டும்.
திட்டமிடப்பட்ட தரமிறக்கலை ரத்துசெய்
நீங்கள் தரமிறக்கலைத் திட்டமிட்டுவிட்டு, அந்தத் தரமிறக்கல் செயல்படத் தொடங்கும் முன் Shopify Plus திட்டத்திலேயே தொடர முடிவுசெய்தால், உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து திட்டமிடப்பட்ட தரமிறக்கலை ரத்துசெய்ய முடியும்.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, அமைப்புகள் > திட்டம் என்பதற்குச் செல்லவும்.
தரமிறக்கலை ரத்துசெய் என்பதைக் கிளிக் செய்யவும்.
திட்டமிடப்பட்ட தரமிறக்கலை ரத்துசெய்ய பிராம்ட்களைப் பின்பற்றவும்.