Shopifyஇல் உங்கள் மின்னஞ்சல் அங்கீகரிக்கப்படாமல் பயன்படுத்தப்படுவதைத் தீர்த்தல்
Shopify ஸ்டோரைத் திறக்க, உங்கள் மின்னஞ்சல் உங்கள் சம்மதமின்றிப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகித்தால், உங்கள் தகவலின் கட்டுப்பாட்டை மீண்டும் பெறவும் கணக்கை மூடவும் இந்தப் பக்கத்திலுள்ள படிகளை நீங்கள் பார்க்கலாம்.
ஆர்டர்கள் தொடர்பான சிக்கல்கள், அறிவுசார் சொத்து மீறல் அல்லது Shopifyஇன் ஏற்கத்தக்க பயன்பாட்டுக் கொள்கையின் மீறல்கள் உள்ளிட்ட, Shopify ஸ்டோர் அல்லது வணிகர் தொடர்பான சிக்கல்களைப் புகாரளிப்பது பற்றிய விரிவான வழிகாட்டுதலுக்கு, Shopify ஸ்டோர் அல்லது வணிகர் தொடர்பான சிக்கலைப் புகாரளித்தல் என்பதைப் பார்க்கவும்.
இந்தப் பக்கத்தில்
சுய சேவைத் தீர்வு
உங்கள் சம்மதமின்றி உங்கள் மின்னஞ்சல் Shopify ஸ்டோருடன் இணைக்கப்பட்டிருந்தால், கணக்கிற்கான அணுகலை மீண்டும் பெற்று, அதனை மூட வேண்டும். இதனைச் செய்து முடிக்கச் சில படிகள் மட்டுமே தேவைப்படும்.
படிகள்:
- உங்கள் மின்னஞ்சலைப் பயன்படுத்தித் திறக்கப்பட்ட கணக்கு(களின்) கட்டுப்பாட்டை மீண்டும் பெற, உங்கள் கடவுச்சொல்லை மீட்டமை விருப்பத்தைப் பயன்படுத்தவும்.
- உங்கள் கடவுச்சொல்லை மீட்டமைத்த பிறகு, Shopify கணக்கில் உள்நுழையவும்.
- உள்நுழைந்த பிறகு, அங்கீகரிக்கப்படாத ஸ்டோரை முடக்குவதற்கான படிகளைப் பின்பற்றவும்.
முடக்கிய பிறகு என்ன நடக்கும்?
Shopify ஸ்டோரை நீங்கள் முடக்கிய பிறகு, அது செயலற்றதாகவும் அணுக முடியாததாகவும் மாறிவிடும்; கணக்கின் அனைத்துச் செயல்பாடுகளையும் பரிவர்த்தனைகளையும் இது முழுமையாக மூடிவிடும். அங்கீகரிக்கப்படாத இந்தக் கணக்கை உருவாக்கியதில் கூடுதலான தனிப்பட்ட தகவல்கள் சமர்ப்பிக்கப்பட்டிருக்கலாம் என்று நீங்கள் கவலைப்பட்டால், நீங்கள் தரவை அழிப்பதற்கான கோரிக்கையையும் சமர்ப்பிக்கலாம்.
கணக்கில் இரு-படி அங்கீகாரத்தைக் கையாளுதல்
கடவுச்சொல்லை மீட்டமைத்து உள்நுழைய முயலும்போது, உங்களால் முடிக்க முடியாத ஒரு இரு-படி அங்கீகாரப் பிராம்ப்டை நீங்கள் சந்திக்க நேரிடலாம், ஏனெனில் அங்கீகரிக்கப்படாத கணக்கில் வேறு யாரோ இரு-படி அங்கீகாரத்தை அமைத்திருக்கலாம்.
இந்தச் சூழலில், கணக்கு மீட்பின் மூலம் இரு-படி அங்கீகாரத்தை அகற்றுமாறு நீங்கள் கோரலாம். கணக்கு மீட்பின் போது, கணக்கிலுள்ள மின்னஞ்சல் முகவரியை உங்களால் அணுக முடியும் என்பதை நீங்கள் சரிபார்க்க வேண்டும், அத்துடன் உங்கள் அடையாளத்தையும் நீங்கள் சரிபார்க்க வேண்டியிருக்கலாம். உங்கள் கோரிக்கையைச் சமர்ப்பித்த பிறகு, அடுத்த படிகளுடன் ஒரு மின்னஞ்சலைப் பெறுவீர்கள்.
உங்கள் மின்னஞ்சலைக் கொண்டு வேறு யாராவது உருவாக்கிய Shopify கணக்கிற்கு இந்தக் கணக்கு மீட்புப் பிரிவு பொருந்தும். உங்களிடம் ஏற்கனவே ஒரு Shopify கணக்கு இருந்து, உங்களின் அனுமதியின்றி அதன் கடவுச்சொல், மின்னஞ்சல் அல்லது இரு-படி அங்கீகாரத்தை வேறு யாராவது மாற்றியிருந்தால், உங்கள் கணக்கு பாதிக்கப்பட்டிருக்கலாம். உங்கள் கணக்கு ஹேக் செய்யப்பட்டிருக்கலாம் அல்லது பாதிக்கப்பட்டிருக்கலாம் என நீங்கள் சந்தேகித்தால், உடனடியாக Shopify ஆதரவைத் தொடர்புகொள்ளவும்.
படிகள்:
- உங்கள் கடவுச்சொல்லை மீட்டமைக்கவும்.
- எந்தவொரு அங்கீகார முறைக்கும் அணுகல் இல்லாதபோது இரு-படி அங்கீகாரத்தை முடக்க, கணக்கு மீட்புப் படிகளைப் பின்பற்றவும்.
- கணக்கிற்கான அணுகலை மீண்டும் பெற்ற பிறகு, அங்கீகரிக்கப்படாத ஸ்டோரை முடக்க, சுய-சேவைத் தீர்வுப் படிகளைப் பின்பற்றவும்.
செயலற்றது எனக் குறிக்கப்பட்ட கணக்குகளைக் கையாளுதல்
உங்கள் உள்நுழைவு முயற்சி கணக்கு செயலற்றது என்பதையும் அணுகல் தடைசெய்யப்பட்டுள்ளது என்பதையும் காட்டினால், கணக்கு ஏற்கனவே முடக்கப்பட்டதாகக் கருதப்படுவதால் அதை மூட வேறு எந்த நடவடிக்கையும் தேவையில்லை.
மின்னஞ்சலை அழிப்பதற்குக் கோருதல்
அங்கீகரிக்கப்படாத கணக்கிலிருந்து உங்கள் மின்னஞ்சல் அகற்றப்பட வேண்டும் என விரும்பினால், நீங்கள் தரவை அழிப்பதற்கான கோரிக்கையைச் சமர்ப்பிக்கலாம். கணக்கிலிருந்து உங்கள் மின்னஞ்சலை நேரடியாக அழிப்பதற்குக் கோர இது அனுமதிக்கிறது.