உங்கள் நிறுவனத்தில் உள்ள அனைத்துப் பயனர்களுக்கும் பாதுகாப்பான உள்நுழைவு முறையைக் கட்டாயப்படுத்துதல்

உங்கள் ஸ்டோர்களில் உள்நுழைவதற்கு, உங்கள் நிறுவனத்தில் உள்ள அனைத்துப் பயனர்களும் ஒரு பாதுகாப்பான உள்நுழைவு முறையைப் பயன்படுத்த வேண்டுமென உங்கள் Shopify நிர்வாகி அமைப்புகளில் உள்ள பயனர்கள் > பாதுகாப்பு பக்கத்தில் இருந்து கட்டாயமாக்கலாம். பாதுகாப்பான உள்நுழைவு முறைகளில் பாஸ்கீகள் மற்றும் இரு-படி அங்கீகாரம் ஆகியவை அடங்கும். உங்கள் நிறுவனத்தில் உள்ள பயனர்கள் பாதுகாப்பான உள்நுழைவு முறையைப் பயன்படுத்துவதை நீங்கள் கட்டாயமாக்கவில்லை எனில், அது பயனரின் விருப்பத்திற்கு விடப்படும். சில பயனர்கள் கூடுதல் கணக்குப் பாதுகாப்பிற்காக பாஸ்கீகள் அல்லது இரு-படி அங்கீகாரத்தைப் பயன்படுத்தத் தேர்வுசெய்யாமல் போகலாம், இதனால் உங்கள் நிறுவனத்திற்கு ஆபத்து ஏற்படலாம்.

இந்த அமைப்பானது பாஸ்கீகள் அல்லது இரு-படி அங்கீகாரம் போன்ற ஆதரிக்கப்படும் முறைகள் மூலம் பூர்த்தி செய்யப்படக்கூடிய பரந்த பாதுகாப்பான உள்நுழைவுத் தேவையை உள்ளடக்கியது.

தகுதியான பயனர்கள் மட்டுமே பாதுகாப்பு அமைப்புகளை அணுக முடியும்.

பாதுகாப்பான உள்நுழைவு முறையைப் பயன்படுத்தக் கட்டாயப்படுத்த முடியாத பயனர்கள்

குறிப்பிட்ட பயனர்களுக்குப் பாதுகாப்பான உள்நுழைவு முறை கட்டாயமாக்கப்பட முடியாது. அனைத்துப் பயனர்களுக்கும் பாதுகாப்பான உள்நுழைவு முறை கட்டாயமாக்கப்பட வேண்டும் என நீங்கள் அமைத்தாலும், பின்வரும் பயனர் வகைகளுக்கு அது அமல்படுத்தப்படாது:

  • மரபுப் பணியாளர்கள்
  • POS செயலி மட்டும்
  • Security Assertion Markup Language (SAML) அங்கீகாரத்தைப் பயன்படுத்தக் கட்டாயப்படுத்தப்பட்டுள்ள பயனர்கள்
  • பதிப்பு 8.72.0 இற்கு முந்தைய மொபைல் Shopify செயலி பதிப்புகளில் உள்நுழையும் பயனர்கள்

பாதுகாப்பான உள்நுழைவு முறையைக் கட்டாயமாக்கிய பிறகு பயனர்களை நிர்வகித்தல்

நிறுவன அமைப்புகளில் உள்ள அனைத்துப் பயனர்களுக்கும் பாதுகாப்பான உள்நுழைவு முறையை நீங்கள் கட்டாயமாக்கிய பிறகு, தனிப்பட்ட பயனர்களைத் தனியாக நிர்வகிக்க முடியாது. அதன்பிறகு உங்கள் தேவை அமைப்பைத் தனிப்பட்ட பயனர் நிர்வாகமாக மாற்றுவது அவர்களின் உள்நுழைவுத் தேவைகளை மாற்றாது, ஆனால் பாதுகாப்பான உள்நுழைவு முறைத் தேவையை நீங்கள் அகற்ற விரும்பினால், பயனர்களைத் தனித்தனியாக நிர்வகிக்க அது அனுமதிக்கிறது.

எடுத்துக்காட்டாக, உங்கள் நிறுவனத்தில் உள்ள பிலிப்பா என்ற பயனருக்குப் பாதுகாப்பான உள்நுழைவு முறையைப் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை என வைத்துக்கொள்வோம். பிறகு உங்கள் நிறுவனத்திற்காக அந்தத் தேவையை நீங்கள் செயல்படுத்துகிறீர்கள். இப்போது பிலிப்பா உட்பட உங்கள் எல்லாப் பயனர்களும் உள்நுழையப் பாதுகாப்பான உள்நுழைவு முறையைப் பயன்படுத்த வேண்டும். பின்பு, உங்கள் தேவை அமைப்பைக் குறிப்பிட்ட பயனர்களை நிர்வகிப்பதற்கு என மாற்றுகிறீர்கள். உங்கள் நிறுவனத்தில் உள்ள எல்லா ஸ்டோர்களுக்கும் பாதுகாப்பான உள்நுழைவு முறையைக் கட்டாயமாக்கும் வகையிலேயே பிலிப்பாவின் பயனர் கணக்குகள் இப்போதும் அமைக்கப்பட்டிருக்கும். நீங்கள் அந்தத் தேவையை அகற்ற விரும்பினால், பிலிப்பாவின் பயனர் பக்கம் வழியாக அதைச் செய்யலாம்.

SAML அங்கீகாரம் உள்ள பயனர்கள்

அடையாள வழங்குநர் மூலம் பாதுகாப்பான உள்நுழைவு முறையைக் கட்டாயமாக்க முடியும் என்பதால், SAML அங்கீகாரத்தைப் பயன்படுத்த வேண்டிய பயனர்களை இந்த அமைப்பு பாதிக்காது. இந்தப் பயனர்களிடமிருந்து SAML கட்டாயம் என்பது அகற்றப்பட்டு, உங்கள் நிறுவனத்தில் நீங்கள் பாதுகாப்பான உள்நுழைவு முறையைக் கோரினால், மாற்றத்தைச் செய்தபிறகு அவர்கள் பாதுகாப்பான உள்நுழைவு முறையைப் பயன்படுத்துவது கட்டாயமாகும்.

SAML அங்கீகாரம் மற்றும் அதன் தேவைக்கான உதாரணம்

உதாரணமாக, உங்கள் நிறுவனத்திற்குப் பாதுகாப்பான உள்நுழைவு முறைத் தேவையை நீங்கள் செயல்படுத்துகிறீர்கள் என வைத்துக்கொள்வோம். உங்களிடம் எம்மி (Emmy) என்றொரு பயனர் உள்ளார், அவர் உள்நுழைய SAML அங்கீகாரத்தைப் பயன்படுத்த வேண்டும். பிறகு, எம்மியின் SAML தேவையினை நீங்கள் அகற்றுகிறீர்கள். அதன்பிறகு எம்மி உள்நுழைய, தானாகவே பாதுகாப்பான உள்நுழைவு முறையைப் பயன்படுத்த வேண்டியிருக்கும்.

பாதுகாப்பான உள்நுழைவு முறைத் தேவையைச் செயல்படுத்துதல்

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, அமைப்புகள் > பயனர்கள் என்பதற்குச் செல்லவும்.

  2. பாதுகாப்பு என்பதைக் கிளிக் செய்யவும்.

  3. பாதுகாப்பான உள்நுழைவு முறை பிரிவில், மாற்று என்பதைக் கிளிக் செய்யவும்.

  4. அனைத்துப் பயனர்களுக்கும் தேவையானது என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

  5. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

உங்கள் நிறுவனத்தில் எவ்வளவு பயனர்கள் இருக்கிறார்கள் என்பதைப் பொறுத்து, பாதுகாப்பான உள்நுழைவு முறையைக் கோருவதற்குச் சிறிது நேரம் ஆகலாம். உங்கள் மாற்றங்கள் செயல்பாட்டில் இருப்பதைக் காட்டும் பேனர் ஒன்று பாதுகாப்பு பக்கத்தில் காட்டப்படும். அதோடு இந்தச் செயல்முறை முடிந்ததும் உங்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பப்படும். செயல்முறையின்போது ஏதேனும் பிழைகள் ஏற்பட்டதா என்பதையும் மின்னஞ்சல் குறிப்பிடும், மேலும் முழுமையாகச் செயல்படுத்தப்படாத பயனர்கள் அனைவரையும் பட்டியலிடும்.

பிழைகளை நிர்வகித்தல்

நீங்கள் பாதுகாப்பான உள்நுழைவு முறைத் தேவையைச் செயல்படுத்தும்போது, உங்கள் எல்லா ஸ்டோர்களிலும் உள்ள ஒவ்வொரு பயனர் கணக்கிற்கும் பாதுகாப்பான உள்நுழைவு முறை தேவை என அமைக்கப்படும். இதன் விளைவாக, சில பயனர்களுக்குச் செயல்முறை முடிவடையவும், சிலருக்கு முடிவடையாமல் போகவும் வாய்ப்புள்ளது. மேலும், வெவ்வேறு ஸ்டோர்களில் சில பயனர்களுக்கு வெவ்வேறு உள்நுழைவுத் தேவைகள் இருக்கக்கூடும்.

உதாரணமாக, உங்கள் நிறுவனத்தில் மூன்று ஸ்டோர்கள் இருப்பதாக வைத்துக்கொள்வோம். நீங்கள் பாதுகாப்பான உள்நுழைவு முறைத் தேவையைச் செயல்படுத்துகிறீர்கள், செயல்முறை முடிந்த பிறகு, உங்களின் பயனர்களில் ஒருவரான டேவிட் (Daveed) என்பவருக்கு மாற்றங்கள் முடிவடையவில்லை என்று கூறி உங்களுக்கு மின்னஞ்சல் வருகிறது. இந்நிலையில், டேவிட்டைத் தவிர உங்கள் நிறுவனத்தில் உள்ள ஒவ்வொரு பயனரும் உள்நுழையப் பாதுகாப்பான உள்நுழைவு முறையைப் பயன்படுத்த வேண்டும். டேவிட் உங்கள் சில ஸ்டோர்களில் பாதுகாப்பான உள்நுழைவு முறையைப் பயன்படுத்த வேண்டியிருந்தாலும், அவர் பாதுகாப்பான முறையில் அங்கீகரிக்காமலேயே உள்நுழையக்கூடிய பிற ஸ்டோர்களும் உள்ளன என்பது இதன் பொருளாகும்.

பாதுகாப்பான உள்நுழைவு முறைத் தேவையைச் செயல்படுத்திய பிறகு உங்களுக்குப் பிழை செய்தி வந்தால், தேவையை மீண்டும் செயல்படுத்த முயலவும்.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, அமைப்புகள் > பயனர்கள் என்பதற்குச் செல்லவும்.

  2. பாதுகாப்பு என்பதைக் கிளிக் செய்யவும்.

  3. பாதுகாப்பான உள்நுழைவு முறை பிரிவில், மீண்டும் முயல்க என்பதைக் கிளிக் செய்யவும்.

உங்கள் பயனர்களில் ஒருவருக்குப் பாதுகாப்பான உள்நுழைவு முறையைக் கோருவது தொடர்ந்து தோல்வியடைந்தால், Shopify ஆதரவைத் தொடர்புகொள்ளவும்.

பாதுகாப்பான உள்நுழைவு முறைத் தேவையை முடக்குதல்

பாதுகாப்பான உள்நுழைவு முறைத் தேவையை முடக்குவது பயனரின் தற்போதைய உள்நுழைவுத் தேவைகளை அகற்றாது. அதாவது, பாதுகாப்பான உள்நுழைவு முறையைக் கொண்டுள்ள பாதிக்கப்பட்ட உங்கள் பயனர்கள் அனைவரும், இன்னமும் அந்த முறையைப் பயன்படுத்தி உள்நுழைய வேண்டும்.

இருப்பினும், நீங்கள் தனிப்பட்ட பயனர்களுக்கான பாதுகாப்பான உள்நுழைவு முறைத் தேவையைச் சரிசெய்யலாம் மற்றும் குறிப்பிட்ட பயனர்களுக்கான தேவையை அகற்றலாம்.

நீங்கள் குறிப்பிட்ட பயனர்கள் என்பவருக்கு மாறிய பிறகும், நீங்கள் அழைக்கும் புதிய பயனர்களுக்கு இயல்பாகவே பாதுகாப்பான உள்நுழைவு முறைத் தேவை இயக்கப்பட்டிருக்கும். ஒரு புதிய பயனருக்கு இதிலிருந்து விலக்கு அளிக்க, அழைக்கும்போதோ அல்லது அவர்களின் பயனர் பக்கத்திலிருந்தோ அவர்களுக்கான தேவையை முடக்கவும்.

அனைத்துப் பயனர்களுக்கும் ஒட்டுமொத்தமாகப் பாதுகாப்பான உள்நுழைவு முறைத் தேவையை உங்களால் அகற்ற முடியாது. ஒவ்வொரு பயனருக்கும் அந்தத் தேவையானது தேவையில்லை என நீங்களே சரிசெய்யும் கூடுதல் படியை நீங்கள் கட்டாயம் மேற்கொள்ள வேண்டும்.

எந்தப் பயனர்களுக்கெல்லாம் பாதுகாப்பான உள்நுழைவு முறைத் தேவையை அகற்ற விரும்புகிறீர்களோ, அந்த ஒவ்வொரு பயனருக்கும் நீங்கள் இந்த படிகளைத் திரும்பச் செய்ய வேண்டும்.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, அமைப்புகள் > பயனர்கள் என்பதற்குச் செல்லவும்.

  2. பாதுகாப்பு என்பதைக் கிளிக் செய்யவும்.

  3. பாதுகாப்பான உள்நுழைவு முறை பிரிவில், மாற்று என்பதைக் கிளிக் செய்யவும்.

  4. குறிப்பிட்ட பயனர்கள் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

  5. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

  6. பயனர்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.

  7. பாதுகாப்பான உள்நுழைவு முறைத் தேவையை எந்தப் பயனருக்கு அகற்ற விரும்புகிறீர்களோ அவரைக் கிளிக் செய்யவும்.

  8. பாதுகாப்பான உள்நுழைவு முறை பிரிவில், பாதுகாப்பான உள்நுழைவு முறை தேவையில்லை என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

  9. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.