இரு-படி அங்கீகாரத்தை மீட்டமைத்தல்

அமைப்புகள் > பயனர்கள் > பாதுகாப்பு என்பதற்குச் சென்று, உங்கள் டொமைனுக்கான உரிமையைச் சரிபார்த்திருந்தால், தங்கள் கணக்குகளில் இருந்து லாக்-அவுட் ஆன உங்கள் நிறுவனப் பயனர்களுக்கு நீங்கள் இரு-படி அங்கீகாரத்தை மீட்டமைக்கலாம். இது உங்கள் நிறுவனம் Shopify ஆதரவைத் தொடர்புகொள்ளாமலேயே, பயனர் லாக் அவுட்களை நேரடியாகத் தீர்க்க அனுமதிக்கிறது. உங்கள் சரிபார்க்கப்பட்ட டொமைனுடன் தொடர்புடைய மின்னஞ்சல் முகவரியைக் கொண்டுள்ள பயனர்களுக்கு மட்டுமே இரு-படி அங்கீகாரத்தை மீட்டமைக்க முடியும்.

உதாரணமாக, உங்கள் நிறுவனம் example.com என்ற டொமைனைச் சரிபார்த்துள்ளது. உங்கள் நிறுவனத்தில் உள்ள பயனர்களில் இருவர், அதாவது ஜொனாதன் (Jonathan) மற்றும் லெஸ்லி (Leslie) ஆகியோர், தங்கள் கணக்குகளிலிருந்து லாக்-அவுட் ஆகிவிட்டனர். லெஸ்லி leslie@example.com என்ற மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்துகிறார். நீங்கள் சரிபார்த்த டொமைனைப் பயன்படுத்தும் மின்னஞ்சல் முகவரி இது என்பதால், லெஸ்லியின் இரு-படி அங்கீகாரத்தை நீங்கள் மீட்டமைக்கலாம். ஜொனாதன் jonathan@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்துகிறார். இது உங்கள் நிறுவனத்தால் சரிபார்க்க முடியாத ஒரு பொதுக் களத்தைப் (பப்ளிக் டொமைன்) பயன்படுத்தும் மின்னஞ்சல் முகவரி ஆகும், எனவே உங்களால் ஜொனாதனின் இரு-படி அங்கீகாரத்தை மீட்டமைக்க முடியாது. மீண்டும் அணுகலைப் பெற, ஜொனாதன் ஒரு மீட்புக் குறியீட்டை உள்ளிட வேண்டும். ஜொனாதனிடம் இனி மீட்புக் குறியீடுகள் ஏதும் இல்லையெனில், ஜொனாதன் கணக்கு மீட்புச் செயல்முறையைப் பயன்படுத்த வேண்டும்.

தகுதியான பயனர்கள் மட்டுமே பாதுகாப்பு அமைப்புகளை அணுக முடியும். உங்கள் நிறுவனத்தில் தகுதியான பயனர் எவரும் பாதுகாப்பு அமைப்புகளை அணுக முடியாவிட்டால், லாக்-அவுட் ஆன பயனர் கணக்கு மீட்புச் செயல்முறையைப் பயன்படுத்த வேண்டும்.

இரு-படி அங்கீகாரத்தை மீட்டமைப்பதற்கு முன்பு

இரு-படி அங்கீகாரத்தை உங்களால் மீட்டமைக்க முடிவதற்கு முன்பு, உங்கள் டொமைனுக்கான உரிமையைச் சரிபார்க்கும் படிகளை நீங்கள் முடிக்க வேண்டும். சரிபார்க்கப்பட்ட டொமைன் ஆனது லாக்-அவுட் ஆன பயனரின் மின்னஞ்சல் டொமைனுடன் பொருந்த வேண்டும். உங்களிடம் துணை டொமைன்கள் இருந்தால், ஒவ்வொன்றையும் நீங்கள் தனித்தனியாகச் சரிபார்க்க வேண்டும்.

பயனருக்கான இரு-படி அங்கீகாரத்தை மீட்டமைத்தல்

உங்கள் நிறுவனத்தில் உள்ள பயனர் ஒருவர் தனது கணக்கிலிருந்து லாக் அவுட் ஆகியிருந்தால், Shopify நிர்வாகியிலுள்ள அவர்களின் பயனர் சுயவிவரத்திலிருந்து அவர்களது இரு-படி அங்கீகாரத்தை நீங்கள் மீட்டமைக்கலாம்.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, அமைப்புகள் > பயனர்கள் என்பதற்குச் செல்லவும்.

  2. எந்தப் பயனருக்கான இரு-படி அங்கீகாரத்தை மீட்டமைக்க வேண்டுமோ, அவர்களைக் கிளிக் செய்யவும்.

  3. பாதுகாப்பான உள்நுழைவு முறை பிரிவில், அங்கீகாரத்தை மீட்டமை என்பதைக் கிளிக் செய்யவும்.

  4. உங்கள் உள்நுழைவுத் தகவலை உறுதிப்படுத்தவும்.

  5. மீட்டமை என்பதைக் கிளிக் செய்யவும்.

பயனரின் இரு-படி அங்கீகாரத்தை நீங்கள் மீட்டமைத்த பிறகு, உங்கள் நிறுவனத்திற்குத் தேவைப்பட்டால் பாதுகாப்பான உள்நுழைவு முறையை அமைக்குமாறு உங்கள் பயனர் கேட்கப்படுவார்.