உங்கள் டொமைன் உரிமையைச் சரிபார்த்தல்

உங்கள் டொமைன் உரிமையைச் சரிபார்ப்பது என்பது, உங்கள் நிறுவனத்தில் உள்ள பயனர்களுடன் தொடர்புடைய மின்னஞ்சல் டொமைன்களின் உரிமையை நிரூபிக்க அனுமதிக்கும் ஒரு செயல்முறையாகும்.

ஒரு டொமைனின் உரிமையைச் சரிபார்த்த பிறகு, பின்வரும் பாதுகாப்பு அம்சங்களை நீங்கள் பயன்படுத்தலாம்:

உங்கள் டொமைனைச் சரிபார்க்கும் முன்

உங்கள் டொமைனைச் சரிபார்க்கும் முன், பின்வரும் பணிகளை முடிப்பதைக் கருத்தில் கொள்ளவும்.

இடைக்காலப் பாதுகாப்பு நடவடிக்கைகளை அமைத்தல்

உங்கள் நிறுவனத்தின் டொமைன் உரிமையைச் சரிபார்ப்பது என்பது சில நாட்கள் ஆகக்கூடிய ஒரு செயல்முறையாகும். நீங்கள் SAML அங்கீகாரம் அல்லது SCIM பயனர் நிர்வாகத்தை அமைக்கத் திட்டமிட்டிருந்தால், அந்த நேரத்தில் பாதுகாப்பான உள்நுழைவு முறையைக் கோருதல் போன்ற மாற்று அங்கீகார முறைகளை அமைப்பதைக் கருத்தில் கொள்ளவும்.

உங்கள் டொமைன்களை மதிப்பாய்வு செய்தல்

டொமைன்கள் ஒரு நிறுவனத்துடன் மட்டுமே தொடர்புடையவை. டொமைன் சரிபார்ப்பிற்கு உங்கள் நிறுவனத்திற்கு மட்டுமே பிரத்யேகமான டொமைன்களைப் பயன்படுத்தவும். வேறொரு நிறுவனத்தால் பயன்படுத்தப்படும் டொமைனின் உரிமையை நீங்கள் சரிபார்த்தால், மற்ற நிறுவனம் அந்த டொமைனைச் சரிபார்க்க முடியாது.

எடுத்துக்காட்டாக, உங்கள் நிறுவனம் Shopify ஐப் பயன்படுத்தும் ஒரு பெரிய நிறுவனத்தின் துணை நிறுவனம் என்று வைத்துக்கொள்வோம். உங்கள் நிறுவனத்தின் மின்னஞ்சல் முகவரிகளை அடிப்படையாகக் கொண்ட உள்நுழைவுகளைக் கொண்ட பயனர்களும், தாய் நிறுவனத்தின் மின்னஞ்சல் முகவரிகளை அடிப்படையாகக் கொண்ட உள்நுழைவுகளைக் கொண்ட பயனர்களும் உங்களுக்கு இருக்கலாம். உங்கள் துணை நிறுவனமும் தாய் நிறுவனமும் பகிரும் டொமைனுக்கான சரிபார்ப்பை நீங்கள் அமைத்தால், Shopify ஐப் பயன்படுத்தும் வேறு எந்த நிறுவனமும் தாய் நிறுவனத்தின் டொமைனைப் பயன்படுத்த முடியாது. இந்நிலையில், உங்கள் துணை நிறுவனத்திற்குப் பதிவுசெய்யப்பட்ட டொமைனை மட்டுமே நீங்கள் பயன்படுத்த வேண்டும்.

Shopify இல் உள்ள வேறொரு நிறுவனத்திற்குத் தேவைப்படும் டொமைனுடன் தொடர்புடைய பயனர்கள் உங்களிடம் இருந்தால், அந்த டொமைனைக் கோர வேண்டாம். இதுபோன்ற நிகழ்வுகளுக்கான உரிமைச் சரிபார்ப்புக் கோரிக்கைகள் கைமுறையாக மதிப்பாய்வு செய்யப்படுகின்றன, மேலும் அவை நிராகரிக்கப்பட வாய்ப்புள்ளது.

gmail.com போன்ற பொதுமக்களுக்குக் கிடைக்கும் டொமைனை உங்களால் சரிபார்க்க முடியாது.

உங்கள் டொமைனைச் சரிபார்த்தல்

உங்களிடம் துணை டொமைன்கள் இருந்தால், பின்வரும் படிகளைப் பயன்படுத்தி ஒவ்வொன்றையும் தனித்தனியாகச் சரிபார்க்க வேண்டும்.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, அமைப்புகள் > பயனர்கள் பகுதிக்குச் செல்லவும்.

  2. பாதுகாப்பு என்பதைக் கிளிக் செய்யவும்.

  3. டொமைன் சரிபார்ப்பு பிரிவில், டொமைனைச் சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.

  4. உங்கள் டொமைனின் பெயரை உள்ளிட்டு, அடுத்து என்பதைக் கிளிக் செய்யவும்.

  5. TXT மதிப்பை நகலெடுக்க, நகலெடு பொத்தானைக் கிளிக் செய்யவும்.

  6. உங்கள் டொமைன் வழங்குநரிடம் நீங்கள் வைத்துள்ள கணக்கில் உள்நுழைந்து, TXT பதிவை உருவாக்கி, நீங்கள் நகலெடுத்த TXT மதிப்பை ஒட்டவும்.

  7. உங்கள் Shopify நிர்வாகியில், சரிபார்ப்பைக் கோரு என்பதைக் கிளிக் செய்யவும்.

டொமைன் இப்போது நிலுவையில் உள்ளது என்ற நிலையில் உள்ளது. உங்கள் டொமைனைச் சரிபார்க்கும் செயல்முறைக்குச் சில நாட்கள் ஆகலாம். செயல்முறை முடிந்ததும், உங்கள் டொமைனின் நிலை சரிபார்க்கப்பட்டது அல்லது சரிபார்க்கப்படவில்லை எனப் புதுப்பிக்கப்பட்டு, கூடுதல் தகவலுடன் ஒரு அறிவிப்பு மின்னஞ்சல் உங்களுக்கு அனுப்பப்படும். உங்கள் டொமைன் தவறுதலாக நிராகரிக்கப்பட்டதாக நீங்கள் நினைத்தால் அல்லது உங்கள் டொமைனைச் சரிபார்ப்பதில் ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால், Shopify Plus ஆதரவைத் தொடர்புகொள்ளவும்.

உங்கள் நிறுவனத்தில் உள்ள பயனர்களுக்கு SAML அங்கீகாரத்தைப் பயன்படுத்தத் திட்டமிட்டால், உங்கள் SAML உள்ளமைவை அமைக்கத் தொடங்கலாம். உங்கள் டொமைன் சரிபார்ப்பு முடியும் வரை நீங்கள் காத்திருக்க வேண்டியதில்லை.

TXT பதிவைச் சேர்த்தல்

உங்கள் DNS அமைப்புகளில் மாற்றங்களைச் செய்வதற்கான செயல்முறை வழங்குநருக்கு வழங்குநர் மாறுபடும். பொதுவாக, உங்கள் DNS அமைப்புகள், டொமைன் நிர்வாகப் பகுதி, DNS உள்ளமைவு அல்லது அது போன்றவற்றைக் கண்டறிவதன் மூலம் நீங்கள் TXT பதிவை அணுக முடியும்.

Shopify டொமைன்களில் TXT பதிவைச் சேர்த்தல்

Shopify-இடமிருந்து உங்கள் டொமைனை வாங்கியிருந்தால், உங்கள் Shopify நிர்வாகியிலுள்ள டொமைன்கள் பிரிவில் TXT பதிவைச் சேர்க்கவும்.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, அமைப்புகள் > டொமைன்கள் என்பதற்குச் செல்லவும்.

  2. Shopify நிர்வகிக்கும் டொமைன்கள் பிரிவில், நீங்கள் சரிபார்க்க விரும்பும் டொமைனின் பெயரைக் கிளிக் செய்யவும்.

  3. DNS அமைப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.

  4. பிரத்தியேகப் பதிவைச் சேர் என்பதைக் கிளிக் செய்து, பின்னர் பதிவு வகையைத் தேர்ந்தெடுக்கவும்.

  5. பெயர் புலத்தில், பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யவும்:

    • உங்கள் முதன்மை அல்லது ரூட் டொமைனை (எடுத்துக்காட்டாக, example.com) சரிபார்க்கிறீர்கள் என்றால், @ என உள்ளிடவும்.
    • இரண்டாம் நிலை அல்லது துணை டொமைனைச் சரிபார்க்கிறீர்கள் என்றால், துணை டொமைன் பெயரை மட்டும் உள்ளிடவும். எடுத்துக்காட்டாக, உங்கள் துணை டொமைன் retail.example.com எனில், retail என உள்ளிடவும்.
  6. TXT மதிப்பு புலத்தில், நிர்வாகியிலிருந்து நகலெடுக்கப்பட்ட TXT மதிப்பை உள்ளிடவும்.

  7. உறுதிசெய் என்பதைக் கிளிக் செய்யவும்.

மூன்றாம் தரப்பு டொமைன்களில் TXT பதிவைச் சேர்த்தல்

உங்கள் DNS அமைப்புகளில் TXT பதிவைச் சேர்ப்பதற்கான செயல்முறை டொமைன் வழங்குநரைப் பொறுத்து மாறுபடும். பொதுவாக, உங்கள் DNS அமைப்புகள், டொமைன் நிர்வாகப் பகுதி, DNS உள்ளமைவு அல்லது அது போன்றவற்றைக் கண்டறிவதன் மூலம் நீங்கள் TXT பதிவை அணுக முடியும்.

குறிப்பிட்ட டொமைன் வழங்குநர்களுக்கான சில படிகள் பின்வருமாறு. இந்தப் பட்டியலில் உங்கள் டொமைன் வழங்குநர் காட்டப்படவில்லை என்றாலோ அல்லது உங்களால் TXT பதிவைச் சேர்க்க முடியவில்லை என்றாலோ, உதவிக்கு உங்கள் வழங்குநரைத் தொடர்புகொள்ளவும்.

மூன்றாம் தரப்பு டொமைன் ஹோஸ்ட்களின் மாதிரிப் பட்டியல்
IONOS123 RegBluehost
Domain.comEnomGoDaddy
Google DomainsOVHNamecheap
Network SolutionsRegisterBlacknight Solutions
HostGator

IONOS-இல் TXT பதிவைச் சேர்க்கவும்

  1. உங்கள் IONOS கணக்கில் உள்நுழையவும்.
  2. Your domain பிரிவில், Manage Domain என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. DNS என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. TXT என்பதைக் கிளிக் செய்யவும்.
  5. Host Name புலத்தில், @ என உள்ளிடவும்.
  6. Value புலத்தில், Shopify நிர்வாகியிலிருந்து நீங்கள் நகலெடுத்த TXT மதிப்பை உள்ளிடவும்.
  7. Save என்பதைக் கிளிக் செய்யவும்.

123 Reg-இல் TXT பதிவைச் சேர்க்கவும்

  1. உங்கள் 123 Reg கணக்கில் உள்நுழையவும்.
  2. Control Panel என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. கீழ்தோன்றும் மெனுவிலிருந்து நீங்கள் சரிபார்க்க விரும்பும் டொமைன் பெயரைத் தேர்ந்தெடுத்து, பின்னர் Manage என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. மேம்பட்ட டொமைன் அமைப்புகள் பிரிவில், Manage DNS என்பதைக் கிளிக் செய்யவும்.
  5. Advanced DNS தாவலைக் கிளிக் செய்யவும்.
  6. கீழ்தோன்றும் மெனுவிலிருந்து TXT/SPF என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  7. Host Name புலத்தில், @ என உள்ளிடவும்.
  8. Destination TXT புலத்தில், Shopify நிர்வாகியிலிருந்து நீங்கள் நகலெடுத்த TXT மதிப்பை உள்ளிடவும்.
  9. Add என்பதைக் கிளிக் செய்யவும்.

Bluehost-இல் TXT பதிவைச் சேர்க்கவும்

  1. உங்கள் Bluehost கணக்கில் உள்நுழையவும்.
  2. Domains தாவலைக் கிளிக் செய்யவும்.
  3. நீங்கள் சரிபார்க்க விரும்பும் டொமைன் பெயருக்கு அடுத்துள்ள Manage என்பதைக் கிளிக் செய்து, பின்னர் DNS என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  4. TXT(Text) பிரிவுக்கு அடுத்துள்ள, Add record என்பதைக் கிளிக் செய்யவும்.
  5. Host Record புலத்தில், @ என உள்ளிடவும்.
  6. TXT Value புலத்தில், Shopify நிர்வாகியிலிருந்து நீங்கள் நகலெடுத்த TXT மதிப்பை உள்ளிடவும்.
  7. Save என்பதைக் கிளிக் செய்யவும்.

Domain.com-இல் TXT பதிவைச் சேர்க்கவும்

  1. உங்கள் Domain.com கணக்கில் உள்நுழையவும்.
  2. நீங்கள் சரிபார்க்க விரும்பும் டொமைன் பெயரில் Manage என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. DNS & Nameservers என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. DNS Records என்பதைக் கிளிக் செய்யவும்.
  5. Add DNS record என்பதைக் கிளிக் செய்யவும்.
  6. TXT என்பதற்கு அடுத்துள்ள பொத்தானைக் கிளிக் செய்யவும்.
  7. Name புலத்தில், @ என உள்ளிடவும்.
  8. Content புலத்தில், Shopify நிர்வாகியிலிருந்து நீங்கள் நகலெடுத்த TXT மதிப்பை உள்ளிடவும்.
  9. Save என்பதைக் கிளிக் செய்யவும்.

Enom-இல் TXT பதிவைச் சேர்க்கவும்

  1. உங்கள் Enom கணக்கில் உள்நுழையவும்.
  2. Domains என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. My domains என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. நீங்கள் சரிபார்க்க விரும்பும் டொமைன் பெயரைக் கிளிக் செய்யவும்.
  5. Host records என்பதைக் கிளிக் செய்யவும்.
  6. New row என்பதைக் கிளிக் செய்யவும்.
  7. Host Name புலத்தில், @ என உள்ளிடவும்.
  8. Record Type கீழ்தோன்றும் மெனுவில், TXT என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  9. Address புலத்தில், Shopify நிர்வாகியிலிருந்து நீங்கள் நகலெடுத்த TXT மதிப்பை உள்ளிடவும்.
  10. Save என்பதைக் கிளிக் செய்யவும்.

GoDaddy-இல் TXT பதிவைச் சேர்க்கவும்

  1. உங்கள் GoDaddy கணக்கில் உள்நுழையவும்.
  2. My products பக்கத்தில், நீங்கள் சரிபார்க்க விரும்பும் டொமைன் பெயருக்கு அடுத்துள்ள DNS என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. Add என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. Type பட்டியலில் இருந்து, TXT என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  5. Host புலத்தில், @ என்பதை உள்ளிடவும்.
  6. TXT Value புலத்தில், Shopify நிர்வாகியிலிருந்து நீங்கள் நகலெடுத்த TXT மதிப்பை உள்ளிடவும்.
  7. Save என்பதைக் கிளிக் செய்யவும்.

Google Domains-க்கு ஒரு TXT பதிவைச் சேர்க்கவும்

  1. உங்கள் Google Domains கணக்கில் உள்நுழையவும்.
  2. நீங்கள் சரிபார்க்க விரும்பும் டொமைன் பெயரைக் கிளிக் செய்யவும்.
  3. மெனு பொத்தானைக் கிளிக் செய்யவும்.
  4. DNS என்பதைக் கிளிக் செய்யவும்.
  5. Custom resource records பிரிவுக்குச் செல்லவும்.
  6. Name புலத்தில், @ என உள்ளிடவும்.
  7. Type மெனுவில், TXT என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  8. Text புலத்தில், நீங்கள் Shopify நிர்வாகியிலிருந்து நகலெடுத்த TXT மதிப்பை உள்ளிடவும்.
  9. Add என்பதைக் கிளிக் செய்யவும்.

OVH-க்கு ஒரு TXT பதிவைச் சேர்க்கவும்

  1. உங்கள் OVH கணக்கில் உள்நுழையவும்.
  2. My products and services பிரிவில், நீங்கள் சரிபார்க்க விரும்பும் டொமைன் பெயரைக் கிளிக் செய்யவும்.
  3. Add an entry என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. TXT என்பதைப் பதிவு வகையாகத் தேர்ந்தெடுக்கவும்.
  5. Value புலத்தில், Shopify நிர்வாகியிலிருந்து நீங்கள் நகலெடுத்த TXT மதிப்பை உள்ளிடவும்.
  6. Next என்பதைக் கிளிக் செய்யவும்.
  7. உறுதிசெய் என்பதைக் கிளிக் செய்யவும்.

Namecheap-க்கு ஒரு TXT பதிவைச் சேர்க்கவும்

  1. உங்கள் Namecheap கணக்கில் உள்நுழையவும்.
  2. நீங்கள் சரிபார்க்க விரும்பும் டொமைனுக்கு அடுத்துள்ள, Manage என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. Advanced DNS என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. Host Records பிரிவில், Add New Record என்பதைக் கிளிக் செய்யவும்.
  5. TXT என்பதைப் பதிவு வகையாகத் தேர்ந்தெடுக்கவும்.
  6. Host புலத்தில், @ என்பதை உள்ளிடவும்.
  7. Value புலத்தில், Shopify நிர்வாகியிலிருந்து நீங்கள் நகலெடுத்த TXT மதிப்பை உள்ளிடவும்.
  8. Save All Changes என்பதைக் கிளிக் செய்யவும்.

Network Solutions-க்கு ஒரு TXT பதிவைச் சேர்க்கவும்

  1. உங்கள் Network Solutions கணக்கில் உள்நுழையவும்.
  2. My Domain Names பிரிவில், Edit DNS என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. Change Where Domain Points என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. Advanced DNS என்பதைத் தேர்ந்தெடுத்து, Continue என்பதைக் கிளிக் செய்யவும்.
  5. Text(TXT Records) பிரிவில், Edit TXT Records என்பதைக் கிளிக் செய்யவும்.
  6. முதல் வெற்று Host புலத்தில், @ என்பதை உள்ளிடவும்.
  7. Text புலத்தில், நீங்கள் Shopify நிர்வாகியிலிருந்து நகலெடுத்த TXT மதிப்பை உள்ளிடவும்.
  8. Continue என்பதைக் கிளிக் செய்யவும்.
  9. Save Changes என்பதைக் கிளிக் செய்யவும்.

Register-க்கு ஒரு TXT பதிவைச் சேர்க்கவும்

  1. உங்கள் Register கணக்கில் உள்நுழையவும்.
  2. My Products & Services பிரிவில், My Domain Names என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. நீங்கள் சரிபார்க்க விரும்பும் டொமைனின் Manage பிரிவில், Edit Advanced DNS Records என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. Update Advanced DNS பிரிவில், Edit TXT Records என்பதைக் கிளிக் செய்யவும்.
  5. Host ஆனது @ என அமைக்கப்பட்டுள்ள பதிவின் Text புலத்தில், நிர்வாகியிலிருந்து நகலெடுத்த TXT மதிப்பை உள்ளிடவும்.
  6. Continue என்பதைக் கிளிக் செய்யவும்.
  7. Save changes என்பதைக் கிளிக் செய்யவும்.

Blacknight Solutions-க்கு ஒரு TXT பதிவைச் சேர்க்கவும்

  1. உங்கள் Blacknight கணக்கில் உள்நுழையவும்.
  2. Websites பக்கத்தில், நீங்கள் சரிபார்க்க விரும்பும் டொமைனைக் கிளிக் செய்யவும்.
  3. DNS என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. DNS records என்பதைக் கிளிக் செய்யவும்.
  5. Add New DNS Record என்பதைக் கிளிக் செய்யவும்.
  6. கீழ்தோன்றும் மெனுவிலிருந்து TXT என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  7. தரவுப் புலத்தில், நீங்கள் Shopify நிர்வாகியிலிருந்து நகலெடுத்த TXT மதிப்பை உள்ளிடவும்.

HostGator-க்கு ஒரு TXT பதிவைச் சேர்க்கவும்

படிகள்:

  1. உங்கள் HostGator கணக்கில் உள்நுழையவும்.
  2. Launch cPanel என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. Domains பிரிவில், Advanced Zone Editor என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. Type பட்டியலில் இருந்து, TXT என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  5. Name புலத்தில், உங்கள் டொமைன் பெயரை உள்ளிடவும்.
  6. TXT Data புலத்தில், நீங்கள் Shopify நிர்வாகியிலிருந்து நகலெடுத்த TXT மதிப்பை உள்ளிடவும்.
  7. Add Record என்பதைக் கிளிக் செய்யவும்.

உங்கள் டொமைனைச் சரிபார்த்த பிறகு

டொமைனின் உரிமையை நீங்கள் சரிபார்த்த பிறகு, டொமைன் இன்னும் உங்கள் நிறுவனத்திற்குச் சொந்தமானதா என்பதை உறுதிப்படுத்த TXT பதிவு அவ்வப்போது சரிபார்க்கப்படும்.

உங்கள் டொமைனில் 30 நாட்களுக்கு TXT பதிவு விடுபட்டிருந்தால், அதை மீண்டும் சேர்க்குமாறு கோரும் மின்னஞ்சலைப் பெறுவீர்கள். மின்னஞ்சல் அனுப்பப்பட்ட 10 நாட்களுக்குள் உங்கள் டொமைனில் TXT பதிவு சேர்க்கப்படவில்லை எனில், உங்கள் டொமைன் நிலை Unverified என மாறும். உங்கள் டொமைன் Unverified என இருக்கும்போது SAML அங்கீகாரம் மற்றும் இரு-படி அங்கீகாரத்தை மீட்டமைத்தல் ஆகியவற்றைப் பயன்படுத்த முடியாது.

டொமைன்களை அகற்றுதல்

உங்களுக்கு இனி ஒரு டொமைன் தேவையில்லை எனில் அல்லது தவறுதலாக ஒன்றைச் சேர்த்திருந்தால், நீங்கள் அதை அகற்றலாம். டொமைனை அகற்றுவதற்கு முன், பின்வருபவை உண்மையா எனச் சரிபார்க்கவும்:

  • அகற்றப்பட வேண்டிய டொமைனுடன் தொடர்புடைய Shopify கணக்கு அல்லது மின்னஞ்சல் முகவரியை SAML அங்கீகாரத்தைப் பயன்படுத்தும் பயனர்கள் எவரும் கொண்டிருக்கவில்லை.
  • உங்களின் SAML அங்கீகாரம் Required என அமைக்கப்படவில்லை.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, அமைப்புகள் > பயனர்கள் பகுதிக்குச் செல்லவும்.

  2. பாதுகாப்பு என்பதைக் கிளிக் செய்யவும்.

  3. Domain verification பிரிவில், நீக்கு ஐகானைக் கிளிக் செய்யவும்.