கூட்டுப்பணியாளர் கணக்குகள்

கூட்டுப்பணியாளர்கள் என்பவர்கள் உங்கள் ஸ்டோர் அல்லது நிறுவனத்தை அணுக நீங்கள் அனுமதித்துள்ள Shopify பார்ட்னர்கள் ஆவர். கூட்டுப்பணியாளர் கணக்குகள் வழக்கமான பயனர் கணக்குகளைப் போலவே இருக்கும், ஆனால் கூடுதல் நன்மைகளை வழங்குகின்றன. எடுத்துக்காட்டாக, உங்கள் வணிகத்தை நடத்த உதவும் பயிற்சிப் படிப்புகள், Shopify இன் தயாரிப்பு வழிகாட்டி மற்றும் பிற ஆதாரங்களுக்கான அணுகலை Shopify பார்ட்னர்கள் கொண்டுள்ளனர். கூட்டுப்பணியாளர்கள் தங்கள் Dev Dashboard அல்லது Shopify மொபைல் செயலியிலிருந்து உங்கள் ஸ்டோரில் உள்நுழையலாம். உங்கள் ஸ்டோருக்கான கூட்டுப்பணியாளர் அணுகலை உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து நிர்வகிக்கலாம் மற்றும் அகற்றலாம். உங்கள் ஸ்டோரின் பயனர் வரம்பில் கூட்டுப்பணியாளர்கள் கணக்கிடப்பட மாட்டார்கள்.

தகுதியான பயனர்கள் மட்டுமே கூட்டுப்பணியாளர் கணக்குகளை அணுகவும் நிர்வகிக்கவும் முடியும்.

கூட்டுப்பணியாளர் கணக்குகளுக்கான பரிசீலனைகள்

உங்கள் ஸ்டோர் அல்லது நிறுவனத்தில் கூட்டுப்பணியாளர் கணக்குகளைச் சேர்க்கும்போது, பின்வருவனவற்றைக் கவனத்தில் கொள்ளவும்.

ஸ்டோர்கள் மற்றும் நிறுவனங்கள் ஆகிய இரண்டுக்குமான கூட்டுப்பணியாளர் கணக்குகள்

  • கூட்டுப்பணியாளர்களுக்குத் தேவைப்படும் அனுமதிகளுடன் அவர்களுக்கான பங்குகளை நீங்கள் உருவாக்கலாம். எடுத்துக்காட்டாக, ஒரு கூட்டுப்பணியாளருக்கு உங்கள் ஷிப்பிங் சுயவிவரங்களுக்கான அணுகல் தேவைப்பட்டால், தயாரிப்புகளைப் பார் மற்றும் அமைப்புகளை நிர்வகி ஆகிய அனுமதிகளுடன் நீங்கள் ஒரு பங்கை உருவாக்க வேண்டும். கூட்டுப்பணியாளர்கள் உங்கள் ஸ்டோரில் கிடைக்கும் அனைத்து அனுமதிகளையும் கோரலாம், அவை வழங்கப்படவும் கூடும். ஒரு கூட்டுப்பணியாளர் தங்கள் பணிகளை முடிக்க என்னென்ன அனுமதிகள் தேவை என்பதை கவனமாகப் பரிசீலிக்கவும். பங்குகளுக்கான ஸ்டோர் அளவிலான அனுமதிகள் குறித்து மேலும் அறிக.
  • கூட்டுப்பணியாளருக்கு கோரிக்கை குறியீட்டை நீங்கள் வழங்க வேண்டும். கூட்டுப்பணியாளர் அணுகல் கோரிக்கையைச் சமர்ப்பிக்கும்போது, இந்தக் குறியீட்டை உள்ளிட வேண்டும். குறியீட்டை நீங்கள் யாருடன் பகிர்கிறீர்களோ, அந்தப் பார்ட்னர்கள் மட்டுமே உங்கள் ஸ்டோருக்கான அணுகலைக் கோர முடியும். நீங்கள் புதிய அணுகல் குறியீட்டை உருவாக்கவும் முடியும், இதன்மூலம் காலாவதியான அணுகல் குறியீட்டைக் கொண்டுள்ள எவராலும் இனிமேல் உங்கள் ஸ்டோருக்கான அணுகலைக் கோர முடியாது.
  • கூட்டுப்பணியாளர்களுக்கு, நிர்வாகியிலுள்ள Shopify POS செயலி அல்லது விற்பனைப் புள்ளி சேனலுக்கான அணுகல் இல்லை.
  • ஸ்டோர் அல்லது நிறுவன உரிமையைக் கூட்டுப்பணியாளருக்கு உங்களால் இடமாற்ற முடியாது.
  • உங்கள் Shopify நிர்வாகியின் பயனர்கள் அட்டவணைப் பக்கத்தில், உங்கள் ஸ்டோர் அல்லது நிறுவனத்திலுள்ள அனைத்துக் கூட்டுப்பணியாளர் கணக்குகளையும் காண்பிக்க, பயனர் வகை > கூட்டுப்பணியாளர்கள் வடிப்பானைப் பயன்படுத்தவும்.
  • கூட்டுப்பணியாளர் பயனர் 90 நாட்களுக்குள் உங்கள் ஸ்டோரில் உள்நுழையவில்லை எனில், அவர்களின் அணுகல் தானாகவே காலாவதியாகிவிடும். பயனர்கள் மற்றும் அனுமதிகள் பக்கத்தில், பயனர் கணக்கைக் கிளிக் செய்து, செயல்கள் என்பதைக் கிளிக் செய்து, பயனரை மீண்டும் செயல்படுத்து என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், கூட்டுப்பணியாளர் பயனருக்கான அணுகலை மீண்டும் நிலைநிறுத்தலாம்.

நிறுவனங்களுக்கான கூட்டுப்பணியாளர் கணக்குகள்

  • நிறுவன உரிமையாளர்களும் நிறுவன நிர்வாகி எனும் நிறுவனப் பங்கைக் கொண்ட பயனர்களும் தானாக உருவாக்கப்பட்ட கூட்டுப்பணியாளர் பயனர் பங்கைத் திருத்தலாம் மற்றும் ஏற்கலாம் அல்லது கூட்டுப்பணியாளருக்கு ஏற்கனவே உள்ள பங்குகளை ஒதுக்கலாம்.
  • கடையின் உரிமையாளர்களும் ஸ்டோர் பயனர் நிர்வாகி எனும் நிறுவனப் பங்கைக் கொண்ட பயனர்களும் கூட்டுப்பணியாளருக்கு ஏற்கனவே உள்ள பங்குகளை மட்டுமே ஒதுக்க முடியும், ஆனால் தானாக உருவாக்கப்பட்ட பயனர் பங்கைத் திருத்தவோ ஏற்கவோ முடியாது.
  • நிறுவனப் பயனர் நிர்வாகி எனும் நிறுவனப் பங்கைக் கொண்ட பயனர்கள், கூட்டுப்பணியாளருக்கு ஏற்கனவே உள்ள பங்குகளை மட்டுமே ஒதுக்க முடியும், ஆனால் தானாக உருவாக்கப்பட்ட பயனர் பங்கைத் திருத்தவோ ஏற்கவோ முடியாது.
  • கூட்டுப்பணியாளர்களுக்கு எல்லாப் பங்குகளையும் உங்களால் ஒதுக்க முடியாது. கூட்டுப்பணியாளர் கணக்குகளுக்கான பங்குகள் பின்வரும் கட்டுப்பாடுகளைக் கொண்டுள்ளன:
    • நிறுவனப் பங்குகளைக் கூட்டுப்பணியாளர்களுக்கு உங்களால் ஒதுக்க முடியாது.
    • ஸ்டோர் பயனர் நிர்வாகி எனும் நிறுவனப் பங்கைக் கூட்டுப்பணியாளர்களுக்கு உங்களால் ஒதுக்க முடியாது. நிர்வாகிப் பங்குகள் குறித்து மேலும் அறிக.
  • உங்கள் நிறுவனம் Shopify Plus திட்டத்தில் இருந்தால், குழுக்களுக்குக் கூட்டுப்பணியாளர்களை உங்களால் ஒதுக்க முடியாது.
  • கூட்டுப்பணியாளர்களிடமிருந்து வரும் ஸ்டோர் அணுகல் கோரிக்கைகளின் அடிப்படையில், ஒவ்வொரு ஸ்டோருக்கும் கூட்டுப்பணியாளர் கணக்குகள் உருவாக்கப்படுகின்றன. ஒரே கூட்டுப்பணியாளர், தங்களின் Dev Dashboard-லிருந்து உங்கள் நிறுவனத்திலுள்ள பல ஸ்டோர்களுக்கான அணுகலைக் கோரலாம்.
    • உங்கள் நிறுவனத்திலுள்ள பல ஸ்டோர்களுக்குக் கூட்டுப்பணியாளர் கோரிக்கைகளை நீங்கள் அங்கீகரித்தால், உங்கள் பயனர் அட்டவணையில் ஒரே பெயரைக் கொண்ட பல கூட்டுப்பணியாளர் கணக்குகள் இருக்கும்.
    • பல ஸ்டோர்களுக்கான அணுகலைக் கூட்டுப்பணியாளர்களுக்கு உங்களால் வழங்க முடியாது.
    • உங்கள் நிறுவனம் முழுவதுமுள்ள அனைத்துக் கூட்டுப்பணியாளர் பயனர் கணக்குகளுக்கும், ஒரே பயனர் பங்கை உங்களால் மொத்தமாக ஒதுக்க முடியும்.

ஒற்றை ஸ்டோர்களுக்கான கூட்டுப்பணியாளர் கணக்குகள்

  • கீழே கொடுக்கப்பட்டுள்ள வகையான பயனர்களால் மட்டுமே கூட்டுப்பணியாளர் அணுகல் கோரிக்கைகளைப் பார்க்கவோ, ஒற்றை ஸ்டோருக்கான கூட்டுப்பணியாளர் அணுகலை வழங்கவோ முடியும்:
    • கடையின் உரிமையாளர்.
    • நிர்வாகி எனும் ஸ்டோர் பங்கைக் கொண்ட பயனர்கள்.
  • நிர்வாகி எனும் ஸ்டோர் பங்கைக் கூட்டுப்பணியாளர்களுக்கு உங்களால் ஒதுக்க முடியாது.

கூட்டுப்பணியாளர் கோரிக்கைகளை நிர்வகி

உங்கள் ஸ்டோரை அணுக Shopify பார்ட்னர் கோரிக்கையைச் சமர்ப்பித்த பிறகு, இந்தக் கோரிக்கை குறித்த மின்னஞ்சலும் உங்கள் Shopify முகப்பில் ஓர் அறிவிப்பும் உங்களுக்கு வரும். உங்கள் Shopify நிர்வாகியின் பயனர்கள் பிரிவில், கோரிக்கைகள் எனும் நிலையைப் பெற்றுள்ள பயனர்களை வடிகட்டுவதன் மூலம் கூட்டுப்பணியாளர் கோரிக்கைகளை நீங்கள் நிர்வகிக்கலாம்.

உங்கள் ஸ்டோரில் ஒரு கூட்டுப்பணியாளர் சேர்க்கப்பட்ட பிறகு, பிற பயனர்களுக்கான பங்குகளை நிர்வகிப்பதற்கான அதே படிகளைப் பயன்படுத்தி எந்த நேரத்திலும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பங்கை நீங்கள் மாற்றலாம். பங்குகளை நிர்வகித்தல் குறித்து மேலும் அறிக.

ஒவ்வொரு கூட்டுப்பணியாளர் கோரிக்கையும், கூட்டுப்பணியாளரால் கோரப்பட்ட அனுமதிகளின் அடிப்படையில் தானாக உருவாக்கப்பட்ட பயனர் பங்கைக் கொண்டிருக்கும். இயல்பாகவே, தானாக உருவாக்கப்படும் பங்கானது <Collaborator name>x<Store name> என்ற பெயரிடல் மரபைப் பயன்படுத்தும். இந்தப் பங்கை நீங்கள் மறுபெயரிடலாம்.

கோரிக்கையை நீங்கள் ஏற்கலாம் அல்லது நிராகரிக்கலாம்.

கூட்டுப்பணியாளர் பயனர் 90 நாட்களுக்குள் உங்கள் ஸ்டோரில் உள்நுழையவில்லை எனில், அவர்களின் அணுகல் தானாகவே காலாவதியாகிவிடும். பயனர்கள் மற்றும் அனுமதிகள் பக்கத்தில், பயனர் கணக்கைக் கிளிக் செய்து, செயல்கள் என்பதைக் கிளிக் செய்து, பயனரை மீண்டும் செயல்படுத்து என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், கூட்டுப்பணியாளர் பயனருக்கான அணுகலை மீண்டும் நிலைநிறுத்தலாம்.

கூட்டுப்பணியாளர் கோரிக்கையில் பார்ட்னர் விவரங்களை மதிப்பாய்வு செய்

ஒரு Shopify பார்ட்னர் உங்கள் ஸ்டோருக்கான கூட்டுப்பணியாளர் அணுகலைக் கோரும்போது, அந்தப் பார்ட்னர் மற்றும் அவர்களின் கோரிக்கை குறித்த கூடுதல் விவரங்கள் காட்டப்படலாம். கோரிக்கையை ஏற்பதா மற்றும் என்னென்ன அனுமதிகளை வழங்குவது என்பதைத் தீர்மானிக்க உங்களுக்கு உதவும் சூழலை இந்த விவரங்கள் வழங்குகின்றன.

பின்வரும் விவரங்கள் காட்டப்படலாம்:

  • இதுமுதல் பார்ட்னர்: பார்ட்னரின் Shopify பார்ட்னர் கணக்கு உருவாக்கப்பட்ட மாதமும் ஆண்டும்.
  • செயலில் உள்ள கூட்டுப்பணிகள்: பார்ட்னர் தீவிரமாகக் கூட்டுப்பணியாற்றும் வணிகர்களின் தோராயமான வரம்பு.
  • இங்கிருந்து பதிவுசெய்யப்பட்டது: பார்ட்னர் தங்களின் Shopify பார்ட்னர் கணக்கைப் பதிவுசெய்த நாடு.
  • கோரிக்கை அனுப்பப்பட்ட இடம்: கூட்டுப்பணியாளர் கோரிக்கை அனுப்பப்பட்ட நாடு. கோரிக்கையானது மெய்நிகர் தனிப்பட்ட வலையமைப்புடன் (VPN) அல்லது அதுபோன்ற சேவையுடன் தொடர்புடைய IP முகவரியிலிருந்து அனுப்பப்பட்டிருந்தால், நாட்டின் பெயருக்குப் பின்னால் (VPN-ஆக இருக்கலாம்) என்பது காட்டப்படும்.

ஒவ்வொரு கோரிக்கைக்கும் சில விவரங்கள் கிடைக்காமல் போகலாம்.

(VPN-ஆக இருக்கலாம்) என்று காட்டப்படும்போது, கோரிக்கை அனுப்பப்பட்ட நாடும், பார்ட்னர் வசிக்கும் நாடும் ஒன்றாக இல்லாமல் இருக்கலாம். நிறுவன வலையமைப்புடன் இணைப்பது போன்ற நியாயமான காரணங்களுக்காகப் பார்ட்னர்கள் VPNகளைப் பயன்படுத்துகிறார்கள்.

ஒரு கோரிக்கையை ஏற்பதற்கு முன், பின்வரும் படிகளை மேற்கொள்ளவும்:

  • உங்களுக்கு அந்தப் பார்ட்னரைத் தெரியும் என்பதையும் இந்தக் கோரிக்கையை நீங்கள் எதிர்பார்த்தீர்கள் என்பதையும் உறுதிப்படுத்தவும்.
  • பார்ட்னர் கோரிய அனுமதிகளை மதிப்பாய்வு செய்யவும்.
  • விவரங்கள் ஏதேனும் எதிர்பாராத விதத்தில் அமைந்திருந்தால், நேரடியாகப் பார்ட்னரைத் தொடர்புகொள்ளவும்.
  • பார்ட்னருக்கு அவர்களின் பணிக்குத் தேவையான அனுமதிகளை மட்டுமே வழங்கவும்.

பார்ட்னர் விவரங்கள் பார்ட்னரின் அடையாளம், பணித்தரம் அல்லது நோக்கத்திற்கு உத்தரவாதம் அளிக்காது, மேலும் கோரிக்கையை ஏற்பதற்கான முடிவு எப்போதும் உங்களுடையதே. எதிர்பாராத இடம், விடுபட்ட விவரம் அல்லது பயன்படுத்தப்பட்டிருக்கக்கூடிய VPN ஆகியவை, கோரிக்கையானது பாதுகாப்பற்றது என்று பொருள்படாது, ஆனால் அதை ஏற்பதற்கு முன் பார்ட்னருடன் கோரிக்கையை உறுதிசெய்வதற்கு அது ஒரு காரணமாகும்.

கூட்டுப்பணியாளர் கோரிக்கையை ஏற்றுக்கொள்

கூட்டுப்பணியாளர் கோரிக்கையை ஏற்க, கூட்டுப்பணியாளருக்கு ஒதுக்கப்பட்ட பயனர் பங்கு இருக்க வேண்டும். கோரிக்கையை ஏற்பதற்கு முன்பு, தானாக உருவாக்கப்பட்ட பயனர் பங்குக்கான அனுமதிகளை நீங்கள் மதிப்பாய்வு செய்து திருத்தலாம் அல்லது முன்பே உள்ள ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பங்குகளை ஒதுக்கிவிட்டு, தானாக உருவாக்கப்பட்ட பங்கை அகற்றலாம்.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, அமைப்புகள் > பயனர்கள் என்பதற்குச் செல்லவும்.

  2. பயனர்கள் குறியீட்டுப் பக்கத்தில், திறந்திருக்கும் கூட்டுப்பணியாளர் கோரிக்கைகளை வடிகட்ட கோரிக்கைகள் நிலையை கிளிக் செய்யவும்.

  3. நீங்கள் நிர்வகிக்க விரும்பும் கூட்டுப்பணியாளர் கோரிக்கையை கிளிக் செய்யவும்.

  4. பங்குகள் பிரிவில், கூட்டுப்பணியாளருக்கான பங்குகளை நிர்வகிக்கவும்:

  • தானாக உருவாக்கப்பட்ட பயனர் பங்கை மதிப்பாய்வு செய்யவும். நீங்கள் மாற்ற விரும்பும் எந்தவொரு அனுமதிகளையும் திருத்தலாம் மற்றும் பயனர் பங்கின் பெயரை மாற்றலாம்.
  • முன்பே உள்ள ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பங்குகளை கூட்டுப்பணியாளருக்கு ஒதுக்கவும்.
  • புதிய பயனர் பங்கை உருவாக்கி, அதை கூட்டுப்பணியாளருக்கு ஒதுக்கவும்.
  1. கோரிக்கையை ஏற்றுக்கொள் என்பதைக் கிளிக் செய்யவும்.

கூட்டுப்பணியாளர் கோரிக்கையை நிராகரி

கூட்டுப்பணியாளர் கோரிக்கையை நீங்கள் நிராகரித்தால், கூட்டுப்பணியாளருக்காக தானாக உருவாக்கப்பட்ட பயனர் பங்கும் அகற்றப்படும்.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, அமைப்புகள் > பயனர்கள் என்பதற்குச் செல்லவும்.

  2. பயனர்கள் குறியீட்டுப் பக்கத்தில், திறந்திருக்கும் கூட்டுப்பணியாளர் கோரிக்கைகளை வடிகட்ட கோரிக்கைகள் நிலையை கிளிக் செய்யவும்.

  3. நீங்கள் நிர்வகிக்க விரும்பும் கூட்டுப்பணியாளர் கோரிக்கையை கிளிக் செய்யவும்.

  4. கோரிக்கையை நிராகரி என்பதைக் கிளிக் செய்யவும்.

கூட்டுப்பணியாளர் அணுகல் குறியீடு

உங்கள் Shopify நிர்வாகியிலுள்ள பயனர்கள் பக்கத்தின் பாதுகாப்பு பிரிவில் கூட்டுப்பணியாளர் குறியீட்டை நீங்கள் ஒதுக்கலாம்.

கூட்டாளர், சுயாதீனப் பணியாளர் அல்லது ஏஜென்சி தங்களது கூட்டுப்பணியாளர் கோரிக்கையைச் சமர்ப்பித்த பிறகு, உங்கள் Shopify நிர்வாகியிலுள்ள பயனர்கள் பக்கத்தில் கோரிக்கையை ஏற்கலாம் அல்லது நிராகரிக்கலாம்.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, அமைப்புகள் > பயனர்கள் என்பதற்குச் செல்லவும்.

  2. பின்வருவனவற்றில் ஏதேனும் ஒன்றைச் செய்யவும்:

    • உங்கள் ஸ்டோர் ஒரு நிறுவனத்தின் ஒரு பகுதியாக இருந்தால், பயனர்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.
    • உங்கள் ஸ்டோர் ஒரு நிறுவனத்தின் பகுதியாக இல்லை எனில், பயனர்கள் & அனுமதிகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. பாதுகாப்பு என்பதைக் கிளிக் செய்யவும்.

  4. உங்கள் கிளிப்போர்டுக்கு நகலெடுக்க, 4 இலக்கக் குறியீட்டைக் கிளிக் செய்யவும்.

  5. உங்கள் கூட்டுப்பணியாளருக்கு 4 இலக்கக் குறியீட்டை வழங்கவும்.

கூட்டுப்பணியாளர் அணுகல் குறியீட்டை மாற்று

புதிய குறியீட்டை உருவாக்குவதன் மூலம் உங்கள் கூட்டுப்பணியாளர் கோரிக்கைக் குறியீட்டை எப்போது வேண்டுமானாலும் மாற்றலாம். புதிய கூட்டுப்பணியாளர் கோரிக்கைக் குறியீட்டை நீங்கள் உருவாக்கிய பிறகு, பழைய குறியீடுகள் எதுவும் செயல்படாது.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, அமைப்புகள் > பயனர்கள் என்பதற்குச் செல்லவும்.

  2. பாதுகாப்பு என்பதைக் கிளிக் செய்யவும்.

  3. கூட்டுப்பணியாளர்கள் பிரிவில், புதிய குறியீட்டை உருவாக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.

கூட்டுப்பணியாளர் கணக்கை அகற்று

உங்கள் ஸ்டோரிலிருந்து கூட்டுப்பணியாளர் கணக்கை நீங்கள் நிரந்தரமாக அகற்றலாம். இந்தச் செயலை செயல்தவிர்க்க முடியாது.

கூட்டுப்பணியாளருக்கு மீண்டும் அணுகல் வழங்க நீங்கள் விரும்பினால், கூட்டுப்பணியாளர் தங்களது கூட்டுப்பணியாளர் கோரிக்கையை மீண்டும் அனுப்ப வேண்டும்.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, அமைப்புகள் > பயனர்கள் என்பதற்குச் செல்லவும்.

  2. பின்வருவனவற்றில் ஏதேனும் ஒன்றைச் செய்யவும்:

    • உங்கள் ஸ்டோர் ஒரு நிறுவனத்தின் ஒரு பகுதியாக இருந்தால், பயனர்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.
    • உங்கள் ஸ்டோர் ஒரு நிறுவனத்தின் பகுதியாக இல்லை எனில், பயனர்கள் & அனுமதிகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. கூட்டுப்பணியாளரின் பெயரைக் கிளிக் செய்யவும்.

  4. பின்வருவனவற்றில் ஏதேனும் ஒன்றைச் செய்யவும்:

    • உங்கள் ஸ்டோர் ஒரு நிறுவனத்தின் பகுதியாக இருந்தால், செயல்கள் > அகற்று என்பதைக் கிளிக் செய்யவும்.
    • உங்கள் ஸ்டோர் ஒரு நிறுவனத்தின் பகுதியாக இல்லை என்றால், கூட்டுப்பணியாளர் கணக்கை அகற்று பிரிவில், கூட்டுப்பணியாளர் பெயரை அகற்று என்பதைக் கிளிக் செய்யவும்.
  5. உறுதிப்படுத்தல் உரையாடலில், அகற்று என்பதைக் கிளிக் செய்யவும்.

கூட்டுப்பணியாளர் கணக்கு உங்கள் ஸ்டோரிலிருந்து நிரந்தரமாக அகற்றப்படும், மேலும் உங்கள் Shopify நிர்வாகியில் கிடைக்காது. ஸ்டோர் செயல்பாட்டுப் பதிவு மற்றும் ஆர்டர் காலவரிசை போன்ற ஏதேனும் தொடர்புடைய காலவரிசைகளில் கூட்டுப்பணியாளரின் பெயர் மற்றும் செயல்கள் இன்னும் பட்டியலிடப்பட்டிருக்கும்.

கூட்டுப்பணியாளர் FAQ

சுயாதீனப் பணியாளர் அல்லது ஏஜென்சிக்கு நான் என்ன அனுமதிகளை வழங்க வேண்டும்?

நீங்கள் வழங்குவதற்கு வசதியாக உணரும் அனுமதிகளை மட்டும் வழங்கவும். சுயாதீனப் பணியாளர் அல்லது ஏஜென்சி குறிப்பிட்ட அனுமதிகளைக் கேட்டால், அதற்குத் தகுந்த காரணம் இருக்கலாம். உங்களுக்கு உறுதியாகத் தெரியவில்லை எனில், அவர்களுக்கு ஏன் அனுமதிகள் தேவை என சுயாதீனப் பணியாளர் அல்லது ஏஜென்சியிடம் கேட்கவும்.

குறிப்பிட்ட செயலிகள் மற்றும் சேனல்களுக்கான கூட்டுப்பணியாளரின் அணுகலை என்னால் கட்டுப்படுத்த முடியுமா?

ஆம். அணுகலுக்கு நீங்கள் ஒப்புதல் அளிக்கும்போது, குறிப்பிட்ட செயலிகள் மற்றும் சேனல்களுக்கு மட்டுமே கூட்டுப்பணியாளருக்கு அணுகல் வழங்க குறிப்பிட்ட செயலிகள் மற்றும் சேனல்களுக்கு அனுமதிகளை ஒதுக்கலாம்.

Shopify செயலியில் உள்நுழைய சுயாதீனப் பணியாளர் ஒரு கூட்டுப்பணியாளர் கணக்கைப் பயன்படுத்த முடியுமா?

ஆம். எனினும், கூட்டுப்பணியாளர்கள் Shopify செயலியைப் பயன்படுத்தி உள்நுழைவதற்கு முன்பாக, தங்களது Dev Dashboard-இலுள்ள ஸ்டோர்கள் பக்கத்தின் மூலம் குறைந்தது ஒரு முறையாவது உங்கள் ஸ்டோரில் உள்நுழைய வேண்டும்.

சுயாதீனப் பணியாளர் அல்லது ஏஜென்சியின் கோரிக்கையை நான் தவறுதலாக நிராகரித்துவிட்டேன், அதை எவ்வாறு திரும்பப் பெறுவது?

கூட்டாளர் ஆதரவைத் தொடர்புகொள்ளும்படி சுயாதீனப் பணியாளர் அல்லது ஏஜென்சியிடம் கேட்கவும். கூட்டாளர் உங்களுக்கு வேறொரு கோரிக்கையை அனுப்பும் வகையில் கூட்டாளரின் கணக்கை கூட்டாளர் ஆதரவு சரிசெய்யும்.

கூட்டுப்பணியாளருடனான எனது பணியை முடித்ததும் நான் என்ன செய்ய வேண்டும்?

கூட்டுப்பணியாளரின் உதவி உங்களுக்கு இனியும் தேவையில்லை எனில், அவர்களது கணக்கை அகற்றவும். இல்லையெனில், கூட்டுப்பணியாளர் பயனர் ஒருவர் 90 நாட்களுக்குள் உங்கள் ஸ்டோரில் உள்நுழையவில்லை எனில், அவர்களது அணுகல் தானாகவே காலாவதியாகிவிடும்.

காலாவதியான கூட்டுப்பணியாளரை நான் எவ்வாறு மீண்டும் செயல்படுத்துவது?

உங்கள் நிர்வாகி அமைப்புகளிலுள்ள பயனர்கள் மற்றும் அனுமதிகள் பக்கத்தின் மூலம் பயனர் கணக்கைக் கிளிக் செய்து, செயல்கள் என்பதைக் கிளிக் செய்து, பயனரை மீண்டும் செயல்படுத்து என்பதைக் கிளிக் செய்வதன் வழியாக கூட்டுப்பணியாளர் பயனருக்கான அணுகலை உங்களால் மீட்டமைக்க முடியும்.

சுயாதீனப் பணியாளர் அல்லது ஏஜென்சியில் உள்ள சிக்கலை நான் எவ்வாறு புகாரளிப்பது?

முதலில், தகவல்தொடர்புச் சிக்கல் அல்லது பொருந்தாத எதிர்பார்ப்புகளின் காரணமாக இந்தப் பிரச்சனை ஏற்படவில்லை என்பதை உறுதிசெய்யவும். சுயாதீனப் பணியாளர்கள் அல்லது ஏஜென்சிகளின் சிக்கல்களுக்கு Shopify நேரடியாகப் பொறுப்பேற்காது. எனினும், ஒரு Shopify பார்ட்னர் பார்ட்னர் திட்ட ஒப்பந்தத்தை பின்பற்றவில்லை என நீங்கள் கருதினால், கூட்டாளர் மீறல் புகாரளிப்புப் படிவத்தை நிரப்பவும்.

எனக்குத் தெரியாத அல்லது நான் பணிபுரிய விரும்பாத சுயாதீனப் பணியாளர் அல்லது ஏஜென்சியிடமிருந்து எனக்கு மின்னஞ்சல் வந்தது, நான் என்ன செய்ய வேண்டும்?

கோரிக்கையை மதிப்பாய்வு செய்து, அவர்களுடன் நீங்கள் பணிபுரிய விரும்பவில்லை என்பதை உறுதிப்படுத்தவும். கோரிக்கையை நீங்கள் எதிர்பார்க்கவில்லை என்றாலோ, அனுப்புநரை உங்களுக்குத் தெரியவில்லை என்றாலோ, அவர்களது கோரிக்கையை நீங்கள் ஏற்கக்கூடாது.