வெளியிடப்படாத செயலியை நிறுத்துவது குறித்து அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

வெளியிடப்படாத செயலி என்பது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வணிகர்களால் நிறுவப்படக்கூடிய ஒரு பொதுச் செயலி வகையாக இருந்தது. வெளியிடப்படாத செயலிகள், மற்ற பொதுச் செயலிகளைப் போன்ற செயல்பாட்டையே கொண்டிருந்தன, ஆனால் தரம் மற்றும் பாதுகாப்பை உறுதிசெய்ய, Shopify-ஆல் அவை மதிப்பாய்வு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்பட வேண்டிய அவசியமில்லை. டிசம்பர் 9, 2019 நிலவரப்படி வெளியிடப்படாத செயலிகளை உருவாக்க முடியாது.

இந்தப் பக்கத்தில்

வெளியிடப்படாத செயலிகளை Shopify ஏன் நிறுத்துகிறது?

வணிகரின் நம்பிக்கை மற்றும் பாதுகாப்பின் நலன் கருதி, வெளியிடப்படாத அனைத்துச் செயலிகளும் Shopify App Store மதிப்பாய்வுக் குழுவால் மதிப்பாய்வு செய்யப்படுவதும், பொதுச் செயலி அல்லது தனிப்பயன் செயலிகளுக்கான தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் புதுப்பிக்கப்படுவதும் அவசியமாகும். பொதுச் செயலிக்கான தேவைகள், பிராண்டிங், இன்ஸ்டாலேஷன், பழக்கப்படுத்துதல், செயல்பாடு மற்றும் தரம் உள்ளிட்ட செயலியின் முழுப் பயன்பாட்டுக் காலத்திலும் Shopify செயலிகள் சிறந்த அனுபவத்தை வழங்குவதை உறுதிசெய்கின்றன.

இதுவரை என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன?

செயலில் உள்ள ஸ்டோர்களில் இன்ஸ்டால் செய்யப்படாத, வெளியிடப்படாத செயலிகளுக்கான API அணுகல் ரத்து செய்யப்பட்டது. உங்கள் செயலியை நீங்கள் சோதிக்க விரும்பினால், டெவலப்மெண்ட் ஸ்டோரில் சோதிக்க புதிய செயலியை உருவாக்கலாம். டெவலப்மெண்ட் ஸ்டோர்களில் உள்ள செயலிகள், பார்ட்னர் டாஷ்போர்டில் வணிகர் இன்ஸ்டால்களாகக் காட்டப்படும். இந்தப் பேட்ஜை தெளிவாக்க நாங்கள் பணியாற்றி வருகிறோம்.

ஒரு செயலில் உள்ள ஸ்டோர் அல்லது ஒரே நிறுவனத்தில் உள்ள பல ஸ்டோர்களில் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ள வெளியிடப்படாத செயலிகளை இனி இன்ஸ்டால் செய்ய முடியாது. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நிறுவனங்களில் செயலில் உள்ள ஸ்டோர்களில் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ள வெளியிடப்படாத செயலிகள் மதிப்பாய்வுக்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டும் அல்லது நிரந்தரமாக நிறுத்தப்பட வேண்டும். உங்கள் கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள வணிக மின்னஞ்சலுக்கு, உங்கள் செயலியை (களை) மதிப்பாய்வுக்குச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு உள்ளிட்ட அடுத்தகட்ட நடவடிக்கைகளை விவரிக்கும் மின்னஞ்சல் ஒன்று வரும். அந்தக் தேதிக்குள் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாவிட்டால், உங்கள் செயலியின் API அணுகல் ரத்து செய்யப்படும் என்பதையும், எந்தவொரு வணிகர் ஸ்டோர்களில் இருந்தும் உங்கள் செயலி(கள்) அன்இன்ஸ்டால் செய்யப்படும் என்பதையும் தெரிவிக்கும் 60 நாள் அறிவிப்பு உங்களுக்கு வழங்கப்படும். கூட்டாளர் மற்றும் வணிகரின் பாதிப்பைக் குறைக்க Shopify கூடுதல் ஆதரவை வழங்கும்.

ஏதேனும் நடவடிக்கை தவறுதலாக எடுக்கப்பட்டுள்ளதாக நீங்கள் கருதினாலோ அல்லது கூடுதல் சந்தேகங்கள் இருந்தாலோ, உதவி மையத்திலிருந்து உங்கள் கூட்டாளர் கணக்கில் உள்நுழைந்து, அரட்டை அல்லது மின்னஞ்சல் ஆதரவைத் தேர்ந்தெடுப்பதன் மூலமாகவோ அல்லது உங்கள் Shopify பார்ட்னர் டாஷ்போர்டைப் பயன்படுத்துவதன் மூலமாகவோ Shopify ஆதரவைத் தொடர்புகொள்ளவும். நீங்கள் உள்நுழையும்போது, உங்கள் கூட்டாளர் கணக்கு தொடர்பான கேள்விகளுக்கு உங்கள் கூட்டாளர் நிறுவனத்தின் பெயரைத் தேர்ந்தெடுக்கலாம்.

எனது செயலியை மதிப்பாய்வுக்குச் சமர்ப்பிக்க எவ்வளவு அவகாசம் உள்ளது?

இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நிறுவனங்களின் ஸ்டோர்களில் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ள செயலிகள் மதிப்பாய்வுக்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டும் அல்லது நிரந்தரமாக நிறுத்தப்பட வேண்டும். உங்கள் கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள வணிக மின்னஞ்சலுக்கு, உங்கள் செயலியை (களை) மதிப்பாய்வுக்குச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு உள்ளிட்ட அடுத்தகட்ட நடவடிக்கைகளை விவரிக்கும் மின்னஞ்சல் ஒன்று வரும். அந்தத் தேதிக்குள் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாவிட்டால், உங்கள் செயலியின் API அணுகல் ரத்து செய்யப்படும் என்பதையும், வணிகர் ஸ்டோர்களில் இருந்து உங்கள் செயலி(கள்) அன்இன்ஸ்டால் செய்யப்படும் என்பதையும் தெரிவிக்கும் 60 நாள் அறிவிப்பு உங்களுக்கு வழங்கப்படும். கூட்டாளர் மற்றும் வணிகரின் பாதிப்பைக் குறைக்க Shopify கூடுதல் ஆதரவை வழங்கும்.

எனது செயலியை இன்ஸ்டால் செய்துள்ள தற்போதைய வணிகர்கள் பாதிக்கப்படுவார்களா?

உங்கள் செயலியை இன்ஸ்டால் செய்துள்ள தற்போதைய வணிகர்கள் உடனடியாகப் பாதிக்கப்பட மாட்டார்கள். இருப்பினும், தேவையான தேதிக்குள் மதிப்பாய்வுக்குச் சமர்ப்பிக்கப்படாத அல்லது நிரந்தரமாக நிறுத்தப்படாத, இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நிறுவனங்களின் ஸ்டோர்களில் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ள செயலிகளுக்கான API அணுகல் ரத்து செய்யப்பட்டு, அனைத்து வணிகர் ஸ்டோர்களில் இருந்தும் அன்இன்ஸ்டால் செய்யப்படும். ஏதேனும் மாற்றங்கள் செய்யப்படுவதற்கு குறைந்தபட்சம் 60 நாட்களுக்கு முன்பே உங்களுக்குத் தெரிவிக்கப்படும், மேலும் கூட்டாளர் மற்றும் வணிகரின் பாதிப்பைக் குறைக்க Shopify கூடுதல் ஆதரவை வழங்கும்.

எனது செயலியை இன்ஸ்டால் செய்துள்ள வணிகர்களுக்கு எந்த இடையூறும் ஏற்படாமல் இருப்பதை உறுதிசெய்ய நான் என்ன செய்ய வேண்டும்?

செயலிப் பட்டியலை உருவாக்கி, உங்கள் செயலியை மதிப்பாய்வுக்குச் சமர்ப்பிக்கவும். உங்கள் பொதுச் செயலியின் தெரிவுநிலையை பட்டியலிடப்பட்டது அல்லது பட்டியலிடப்படாதது என அமைக்கலாம்.

எனது செயலி பொதுச் செயலியாக மாறிய பிறகு, தற்போதைய வணிகர்கள் ஏதேனும் நடவடிக்கை எடுக்க வேண்டுமா?

இல்லை, உங்கள் செயலி மதிப்பாய்வு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட பிறகு, வணிகர்கள் OAuth அனுமதிகளை மீண்டும் இன்ஸ்டால் செய்யவோ ஏற்கவோ தேவையில்லை.

உருவாக்குபவர்கள் ஸ்டேஜிங் சூழலாகப் பயன்படுத்தும் வெளியிடப்படாத செயலிகளில் இந்த மாற்றம் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும்?

செயலில் உள்ள ஸ்டோரில் இன்ஸ்டால் செய்யப்படாமல், ஸ்டேஜிங் சூழலாகப் பயன்படுத்தப்படும் வெளியிடப்படாத செயலிகள் வரைவுச் செயலிகளாக மீண்டும் உருவாக்கப்பட வேண்டும். கூடுதல் தகவலுக்கு, உங்கள் செயலியைச் சோதிப்பதற்கான சிறந்த நடைமுறையைப் பார்க்கவும்.

எனது செயலி Shopify App Store இல் கண்டறியக்கூடியதாக இருக்க வேண்டுமா?

எந்த நேரத்திலும் Shopify App Store இல் உங்கள் செயலியின் தெரிவுநிலையை மாற்றுவதன் மூலம் உங்கள் செயலியைப் பட்டியலிடப்படாததாக மாற்ற நீங்கள் தேர்வுசெய்யலாம்.

உங்கள் செயலிக்கான அணுகலைக் கட்டுப்படுத்துவது நீங்கள் தேர்ந்தெடுக்கும் செயலியின் வகையைப் பொறுத்து மாறுபடும். எடுத்துக்காட்டாக, உங்கள் பொதுச் செயலியின் தெரிவுநிலையைப் பட்டியலிடப்படாதது என அமைப்பதன் மூலம், அதை மற்றவர்கள் கண்டறிய முடியாதபடி குறிப்பிட்ட வணிகர்கள் மட்டும் இன்ஸ்டால் செய்ய அனுமதிக்கலாம்.

எனது சொந்தச் செயலியை நான் நிரந்தரமாக நிறுத்த முடியுமா?

ஆம், எங்களது மதிப்பாய்வுக்கு முன்பு இதைத் தொடங்கும் வரையில் அவ்வாறு செய்யலாம். சிறந்த நடைமுறை குறித்த தகவலுக்கு, உங்கள் செயலிகளை நிரந்தரமாக நிறுத்துவதைப் பார்க்கவும்.

எனது டாஷ்போர்டு என்னிடம் வணிகர் இன்ஸ்டால்கள் இருப்பதைக் காட்டுகிறது. எனது செயலி ஏன் நிறுத்தப்பட்டது?

எங்கள் பார்ட்னர் டாஷ்போர்டு அதன் வணிகர் இன்ஸ்டால் எண்ணிக்கையில் அஃபிலியேட் மற்றும் சோதனை ஸ்டோர்களைச் சேர்த்துள்ளது. இது தற்போது திருத்தப்பட்டு வருகிறது, எதிர்காலப் புதுப்பிப்பில் சரிசெய்யப்படும். நிறுத்தப்பட்ட செயலிகளில் பூஜ்ஜியம் அளவிலேயே செயலில் உள்ள வணிகர் இன்ஸ்டால்கள் இருந்தன.

இந்த மாற்றத்திற்கு ஆதரவளிக்க, செயலியை உருவாக்குபவர்களுக்கு என்னென்ன ஆதாரங்கள் கிடைக்கின்றன?

வெளியிடப்படாத ஒரு செயலியை வெளியிடுவதற்கான மாற்றங்களைச் செய்ய பின்வரும் ஆதாரங்கள் உங்களுக்கு உதவலாம்: