உங்கள் பேஅவுட் முறையை நிர்வகித்தல்

பார்ட்னர்கள் PayPal அல்லது வங்கிக் கணக்கு மூலம் பேஅவுட்களைப் பெறலாம். குறிப்பிட்ட பேஅவுட் முறைகளுக்கான அணுகல், உங்கள் நாடு அல்லது பிராந்தியம் மற்றும் நீங்கள் பேஅவுட்டை எந்த நாணயமாக மாற்ற விரும்புகிறீர்கள் என்பதைப் பொறுத்து அமையும். உதாரணமாக கனடாவில், CAD நாணயத்தில் இறுதி பேஅவுட்டைப் பெறும்போது, நீங்கள் PayPal மற்றும் வங்கிக் கணக்கு பேஅவுட் முறைகளுக்கான அணுகலைக் கொண்டிருக்கலாம்.

Dev Dashboard என்பதில் நீங்கள் திறக்கும் நிறுவன அமைப்புகளில் உள்ள பேஅவுட்கள் பக்கத்தில் உங்கள் பேஅவுட் முறையை நீங்கள் நிர்வகிக்கலாம். பேஅவுட் முறையைச் சேர்ப்பதற்கு முன், உங்கள் வணிக விவரங்களைச் சேர்ப்பதன் மூலம் Hyperwallet கணக்கை உருவாக்க வேண்டும். நீங்கள் Hyperwallet கணக்கை உருவாக்கும்போது, Hyperwallet சேவை விதிமுறைகள் மற்றும் தனியுரிமைக் கொள்கையை ஏற்கிறீர்கள்.

Hyperwallet பேஅவுட் முறைகள் குறித்தான அனைத்துத் தகவல்தொடர்புகளும் Shopify வழங்கும் மின்னஞ்சல் அல்லது நிறுவன அமைப்புகளில் இருந்தே வரும். உங்கள் Hyperwallet கணக்கு அல்லது பேஅவுட் முறையில் செய்யும் மாற்றங்களை நிறுவன அமைப்புகளில் மட்டுமே மேற்கொள்ளவும்.

கட்டணங்கள்

Shopify பேஅவுட்கள் எப்போதும் USD-இலேயே வழங்கப்படுகின்றன, எனினும், புதிய பேஅவுட் முறைகள் மூலம் உங்கள் இறுதிப் பேஅவுட்டை, பெரும்பாலும் உங்கள் உள்ளூர் நாணயம் உட்படப் பிற நாணயங்களிலும் பெறலாம். எந்தவொரு நாணய மாற்றுக் கட்டணங்களையும் செலுத்துவது உங்கள் பொறுப்பாகும்.

USD-இல் பேஅவுட்களைப் பெறுதல்

நீங்கள் PayPal அல்லது வங்கிக் கணக்கு மூலம் உங்கள் பேஅவுட்களை USD-இல் பெற்று, பேஅவுட் உங்கள் PayPal வாலட் அல்லது நிதி நிறுவனத்தை அடைந்த பிறகு வேறொரு நாணயத்திற்கு மாற்றினால், அந்தப் பேஅவுட்டிற்கு PayPal அல்லது உங்கள் நிதி நிறுவனம் அமைத்துள்ள நாணய மாற்று விகிதங்கள் மற்றும் நாணய மாற்றுக் கட்டணங்கள் விதிக்கப்படும்.

USD அல்லாத பிற நாணயங்களில் பேஅவுட்களைப் பெறுதல்

PayPal அல்லது வங்கிக் கணக்கிற்கான உங்கள் இறுதிப் பேஅவுட்டை USD தவிர வேறு நாணயத்தில் பெற நீங்கள் தேர்வுசெய்தால், அது உங்கள் PayPal வாலட் அல்லது நிதி நிறுவனத்தை அடைவதற்கு முன்பே நாணய மாற்றம் Hyperwallet மூலம் செய்யப்படும், மேலும் இதற்குப் பின்வரும் அடிப்படை நாணய மாற்று விகிதம் மற்றும் நாணய மாற்றுக் கட்டணங்கள் பொருந்தும்:

  • இந்த அடிப்படை நாணய மாற்று விகிதம், நாணய மாற்றம் செய்யப்படும் நாள் அல்லது முந்தைய வணிக நாளின் மொத்த விற்பனை நாணயச் சந்தைகளில் உள்ள மாற்று விகிதங்களின் அடிப்படையிலோ, சட்டம் அல்லது ஒழுங்குமுறை தேவைப்படும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட அரசாங்கத்தின் குறிப்பு மாற்று விகிதத்தின் அடிப்படையிலோ தீர்மானிக்கப்படும்.
  • பேஅவுட் தொகையில் 0.50%-க்கு நிகரான நாணய மாற்றுக் கட்டணத்தை Hyperwallet விதித்து எடுத்துக்கொள்ளும். Shopify பார்ட்னர்களுக்குப் பயனளிக்கும் வகையில் Hyperwallet-உடன் இணைந்து இந்தச் சிறப்பு நாணய மாற்றுக் கட்டணத்தை Shopify பெற்றுள்ளது.

அடையாளச் சரிபார்ப்பு

சில நாடுகள் அல்லது பிராந்தியங்களில், பேஅவுட்களைப் பெற உங்களின் அடையாளத்தைச் சரிபார்க்க வேண்டியிருக்கலாம்.

நீங்கள் ஒரு வணிகமாகச் (வரையறுக்கப்பட்ட பொறுப்பு நிறுவனம், கூட்டாண்மை அல்லது கார்பரேஷன் போன்ற) செயல்பட்டால், உங்கள் முதல் பேஅவுட்டைப் பெறுவதற்கு முன் அடையாளச் சரிபார்ப்பு விவரங்களை நீங்கள் வழங்க வேண்டியிருக்கலாம். நீங்கள் ஒரு தனிநபராகச் (தனிநபர் உரிமை அல்லது ஒற்றை உறுப்பினர் கொண்ட வரையறுக்கப்பட்ட பொறுப்பு நிறுவனம் போன்ற) செயல்பட்டால், உங்கள் வருமானம் ஒரு குறிப்பிட்ட வரம்பை எட்டும்போது அடையாளச் சரிபார்ப்பு விவரங்களை வழங்க வேண்டியிருக்கலாம். அடையாளச் சரிபார்ப்பு தேவைப்பட்டால், Shopify உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அறிவிக்கும், மேலும் தேவையான தகவல் மற்றும் ஆவணங்களை வழங்க உங்களை வழிநடத்தும். அதை வழங்க, நிறுவன அமைப்புகளில் உள்ள பேஅவுட்கள் பக்கத்தில், சரிபார்ப்பைப் புதுப்பி என்பதைக் கிளிக் செய்யவும்.

இணக்கச் சரிபார்ப்புகள்

சில நாடுகள் அல்லது பிராந்தியங்களிலும், சில நாணயங்களுக்கும், பேஅவுட்டைச் செயலாக்க Hyperwallet மற்றும் உங்கள் வங்கி அல்லது நிதி நிறுவனத்திற்குக் கூடுதல் தகவல் தேவைப்படலாம். இணக்கச் சரிபார்ப்புகளுக்கான வரம்புகளும் தேவைகளும் செயல்பாட்டிலுள்ள நாடு அல்லது பிராந்தியத்தைப் பொறுத்து மாறுபடும். கூடுதல் தகவல் தேவைப்படுவதால் ஒரு பேஅவுட் நிறுத்திவைக்கப்பட்டால், Shopify உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அறிவிக்கும்.

பேஅவுட் நிறுத்திவைக்கப்பட்டது அல்லது தோல்வியடைந்தது

பேஅவுட் முறையின் விவரங்கள் தவறாக இருந்தால், Hyperwallet ஒரு பேஅவுட்டை நிறுத்திவைக்கும் (அல்லது பேஅவுட் தோல்வியடைந்துவிட்டதைக் காட்டும்). உங்கள் பேஅவுட் முறையை மாற்றுமாறோ அல்லது Shopify ஆதரவைத் தொடர்புகொள்ளுமாறோ கேட்டு Shopify-லிருந்து உங்களுக்கு ஒரு மின்னஞ்சல் வரும்.

அந்தப் பேஅவுட் முறையின் பரிவர்த்தனை வரம்பைப் பேஅவுட் தொகை மீறினாலும், Hyperwallet ஒரு பேஅவுட்டை நிறுத்திவைக்கும் (அல்லது பேஅவுட் தோல்வியடைந்துவிட்டதைக் காட்டும்).

பொதுவாக, பேஅவுட்கள் பின்வரும் பரிவர்த்தனை வரம்புகளைக் கொண்டிருக்கும்:

  • PayPal - $100,000 USD வரை
  • வங்கிக் கணக்கு - $500,000 USD வரை

உங்கள் பேஅவுட் முறை மேலே பட்டியலிடப்பட்டுள்ள பொதுவான வரம்புகளையோ உங்கள் நாடு அல்லது பிராந்தியம் மற்றும் நாணயத்திற்கெனக் குறிப்பிடப்பட்ட வரம்புகளையோ மீறினால், உங்கள் பேஅவுட் முறையை மாற்றுமாறு கேட்டு Shopify-லிருந்து உங்களுக்கு ஒரு மின்னஞ்சல் வரும்.

நிறுவன அமைப்புகளில் உள்ள பேஅவுட்கள் பக்கத்திலிருந்து தோல்வியடைந்த பேஅவுட்டை நீங்கள் மீண்டும் முயற்சிக்கலாம்.

Hyperwallet கணக்கை உருவாக்குதல்

Hyperwallet கணக்கை உருவாக்குவதன் மூலம், உங்கள் நாடு அல்லது பிராந்தியம் மற்றும் நாணயத்தில் கிடைக்கும் அனைத்துப் பேஅவுட் முறைகளுக்கான அணுகலையும் நீங்கள் பெறுவீர்கள். உங்கள் நிறுவனம் ஒரு வணிகமாக (அதாவது வரையறுக்கப்பட்ட பொறுப்பு நிறுவனம், கூட்டாண்மை அல்லது கார்பரேஷன்) இருந்தால், கணக்கு உருவாக்கும் செயல்முறையை முடிக்க வணிகம் தொடர்பான குறிப்பிட்ட தகவல்களை நீங்கள் வழங்க வேண்டியிருக்கலாம்.

முதல்முறையாக உங்கள் வணிக விவரங்களைச் சேர்க்கும்போது, உங்கள் Hyperwallet கணக்கை உருவாக்குவீர்கள். உங்கள் வணிக விவரங்களை நிர்வகிப்பது குறித்து மேலும் அறிக.

படிகள்:

  1. Dev Dashboard என்பதில், உங்கள் நிறுவனத்தைத் தேர்ந்தெடுத்து, நிறுவன அமைப்புகள் என்பதைத் திறக்கவும். பேஅவுட்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.

  2. பேஅவுட்களை அமை பிரிவில், வணிக விவரங்களைச் சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.

  3. உங்கள் வணிக விவரங்களைச் சேர்க்கத் திரையில் தோன்றும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுங்கள், மேலும் Hyperwallet சேவை விதிமுறைகளை மதிப்பாய்வு செய்யுங்கள்.

கணக்கு உருவாக்கத்தை உறுதிப்படுத்தும் மின்னஞ்சலை Shopify வழங்கும். பின்னர், நீங்கள் ஒரு பேஅவுட் முறையைச் சேர்க்கலாம்.

உங்கள் Hyperwallet கணக்கில் மாற்றங்களைச் செய்தல்

உங்கள் Hyperwallet கணக்கு உங்கள் முதன்மை வணிக நிறுவனத்தின் வணிக விவரங்களைப் பயன்படுத்துகிறது. அந்த விவரங்களை மாற்ற, நிறுவன அமைப்புகளில் வணிக நிறுவனத்தைத் திருத்தவும். உங்கள் வணிக விவரங்களைத் திருத்திய பிறகும் உங்கள் பேஅவுட் முறை அப்படியே இருக்கும்.

படிகள்:

  1. Dev Dashboard என்பதில், உங்கள் நிறுவனத்தைத் தேர்ந்தெடுத்து, நிறுவன அமைப்புகள் என்பதைத் திறக்கவும். நிறுவனம் என்பதைக் கிளிக் செய்யவும்.

  2. வணிக நிறுவனங்கள் பிரிவில், உங்களின் முதன்மை வணிக நிறுவனத்தைக் கிளிக் செய்யவும். நிறுவன வணிக விவரங்கள் கார்டில் மேலும் செயல்கள் > நிறுவனத்தைத் திருத்து என்பதையும் கிளிக் செய்யலாம்.

  3. உங்கள் வணிக விவரங்களைப் புதுப்பிக்கவும், Hyperwallet சேவை விதிமுறைகள் மற்றும் தனியுரிமைக் கொள்கையை மதிப்பாய்வு செய்து, பிறகு உங்கள் மாற்றங்களைச் சேமிக்கவும்.

உங்கள் Hyperwallet கணக்கின் மாற்றங்களை உறுதிப்படுத்தும் மின்னஞ்சலை Shopify வழங்கும்.

உங்களின் தற்போதைய பேஅவுட் முறையைப் பார்த்தல்

நிறுவன அமைப்புகளில் உள்ள பேஅவுட்கள் பக்கத்தின் அடுத்த பேஅவுட் பிரிவில் உங்களின் தற்போதைய பேஅவுட் முறை பட்டியலிடப்பட்டிருக்கும், அதில் அதற்கான கணக்கு, நாணயம் மற்றும் பேஅவுட் வந்துசேர எத்தனை வணிக நாட்கள் ஆகும் ஆகிய விவரங்களும் அடங்கும்.

படிகள்:

  1. Dev Dashboard என்பதில், உங்கள் நிறுவனத்தைத் தேர்ந்தெடுத்து, நிறுவன அமைப்புகள் என்பதைத் திறக்கவும். பேஅவுட்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.

  2. அடுத்த பேஅவுட் பிரிவில், உங்களின் தற்போதைய பேஅவுட் முறை குறித்த விவரங்களைச் சரிபார்க்கவும்.

பிராந்தியம் மற்றும் நாணயத்தின் அடிப்படையில் கிடைக்கக்கூடிய பேஅவுட் முறைகளைப் பார்த்தல்

கிடைக்கக்கூடிய பேஅவுட் முறைகள் உங்கள் நாடு அல்லது பிராந்தியம் மற்றும் நீங்கள் தேர்ந்தெடுக்கும் நாணயத்தைப் பொறுத்து மாறுபடும்.

படிகள்:

  1. Dev Dashboard என்பதில், உங்கள் நிறுவனத்தைத் தேர்ந்தெடுத்து, நிறுவன அமைப்புகள் என்பதைத் திறக்கவும். பேஅவுட்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.

  2. பேஅவுட் முறையைச் சேர் அல்லது பேஅவுட் முறையை மாற்று என்பதைக் கிளிக் செய்யவும்.

  3. பேஅவுட் முறைப் படிவத்தில், முதலில் உங்கள் நாடு அல்லது பிராந்தியத்தையும், பிறகு உங்கள் நாணயத்தையும் தேர்ந்தெடுக்கவும்.

உங்கள் நாடு அல்லது பிராந்தியம் மற்றும் நாணயத்திற்குக் கிடைக்கும் இடமாற்று முறைகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

பேஅவுட் முறையைச் சேர்த்தல்

உங்களிடம் ஒரு பேஅவுட் முறை மட்டுமே இருக்க முடியும். உங்களின் தற்போதைய பேஅவுட் முறையில் மாற்றங்களைச் செய்ய விரும்பினால், பழையதற்குப் பதிலாக புதிய பேஅவுட் முறையை நீங்கள் சேர்க்க வேண்டும்.

தேவைகள்

  • நீங்கள் Hyperwallet கணக்கை உருவாக்கியுள்ளீர்கள்.
  • பொருந்தினால், உங்கள் வங்கி மற்றும் கணக்கு விவரங்களைத் தயாராக வைத்துள்ளீர்கள்.
  • நீங்கள் ஒரு வங்கிக் கணக்கைப் பேஅவுட் முறையாகச் சேர்த்தால், நீங்கள் ஒரு உண்மையான வங்கிக் கணக்கைப் பயன்படுத்த வேண்டும். பார்ட்னர் பேஅவுட்களுக்கு, Payoneer போன்ற மெய்நிகர் வங்கிக் கணக்குகள் ஆதரிக்கப்படாது.

படிகள்:

  1. Dev Dashboard என்பதில், உங்கள் நிறுவனத்தைத் தேர்ந்தெடுத்து, நிறுவன அமைப்புகள் என்பதைத் திறக்கவும். பேஅவுட்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.

  2. உங்களிடம் இன்னும் பேஅவுட் முறை ஏதுமில்லை எனில், பேஅவுட்களை அமை பிரிவில் பேஅவுட் முறையைச் சேர் என்பதைக் கிளிக் செய்யவும். உங்கள் தற்போதைய பேஅவுட் முறையை நீங்கள் மாற்றினால், பேஅவுட் முறையை மாற்று என்பதைக் கிளிக் செய்யவும்.

  3. பேஅவுட் முறைப் படிவத்தில், முதலில் உங்கள் PayPal கணக்கு அல்லது வங்கிக் கணக்கின் நாடு அல்லது பிராந்தியத்தையும், பிறகு உங்கள் நாணயத்தையும் தேர்ந்தெடுக்கவும்.

  4. நீங்கள் சேர்க்க விரும்பும் பரிமாற்ற முறையைக் கிளிக் செய்யவும்.

  5. புலங்களை நிரப்பி, பிறகு படிவத்தைச் சமர்ப்பிக்கவும்.

பேஅவுட்கள் பக்கத்தில் உள்ள அடுத்த பேஅவுட் பிரிவில் புதிய பேஅவுட் முறை பட்டியலிடப்படும், மேலும் உங்களின் அடுத்த பேஅவுட்டை இந்த முறையின் மூலம் பெறுவீர்கள். புதிய பேஅவுட் முறையை உறுதிப்படுத்தும் மின்னஞ்சல் ஒன்றையும் Shopify இடமிருந்து பெறுவீர்கள்.