பயனர்களை அழைத்தல்
Dev Dashboard-இல் உள்ள பார்ட்னர் நிறுவனங்கள் மற்றும் ஸ்டோர்களுக்கு, வணிகர் ஸ்டோர்களுக்கான அதே பயனர் வரம்புகள் இல்லை. Dev Dashboard-இல் உள்ள பார்ட்னர் நிறுவனம் மற்றும் ஸ்டோர்களில் எண்ணற்ற பயனர்களை நீங்கள் சேர்க்கலாம்.
இந்தப் பக்கத்தில்
பயனர்களை அழைத்தல்
உங்கள் பார்ட்னர் நிறுவனத்திற்கு ஒரு பயனரை அழைத்த பிறகு, அந்தப் பணியாளர் தனது பயனர் கணக்கின் அமைப்பை நிறைவுசெய்வதற்கான மின்னஞ்சல் அழைப்பைப் பெறுவார். பணியாளர் உள்நுழைவை உருவாக்குவதற்கான அழைப்புகள் ஏழு நாட்களில் காலாவதியாகிவிடும். ஏழு நாட்களுக்குள் அழைப்பு ஏற்கப்படாவிட்டால், புதிய அழைப்பை அனுப்ப பயனரை அகற்றிவிட்டு மீண்டும் சேர்க்கவும்.
தங்களின் கணக்குகளை நிறைவுசெய்யாத பயனர்களுக்கு, உங்கள் பார்ட்னர் நிறுவன அமைப்புகளின் பயனர்கள் பிரிவில் நிலுவையில் உள்ளது என்ற நிலை இருக்கும்.
படிகள்:
உங்கள் பார்ட்னர் டாஷ்போர்டு இல் இருந்து, நிறுவனம் என்பதற்குச் செல்லவும்.
பயனர்களைச் சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.
பயனரின் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும். இந்த மின்னஞ்சலில்தான் அவர்கள் அழைப்பையும், உங்கள் ஸ்டோர் தொடர்பான மின்னஞ்சல் அறிவிப்புகளையும் பெறுவார்கள்.
பங்குகள் மற்றும் குழுக்கள் பிரிவில்,
ஒதுக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
ஒரு பங்கைத் தேர்ந்தெடுக்கவும் அல்லது புதிய பங்கை உருவாக்கவும். கூடுதல் பங்குகளை ஒதுக்க,
ஒதுக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
குறிப்பிட்ட ஸ்டோர்களைத் தேர்ந்தெடுப்பதன் மூலமாகவோ அனைத்தையும் மற்றும் எதிர்கால ஸ்டோர்களையும் ஒதுக்கு என்பதைத் தேர்ந்தெடுப்பதன் மூலமாகவோ இந்தப் பங்குக்கான ஸ்டோர் அணுகலை ஒதுக்கலாம்.
முடிந்தது என்பதைக் கிளிக் செய்யவும்.
உலாவி மூலம் பயனர் உள்நுழையும்போது இரு-படி அங்கீகாரம் தேவையா இல்லையா என்பதை, இரு-படி அங்கீகாரம் பிரிவில் தேர்ந்தெடுக்கவும்.
சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
அழைப்பை ஏற்றல்
Shopify ஸ்டோர், நிறுவனம் அல்லது பார்ட்னர் நிறுவனத்தில் சேருவதற்கான அழைப்பை நீங்கள் பெற்றால், அதை ஏற்பதற்கு உங்களுக்கு ஏழு நாட்கள் அவகாசம் இருக்கும்.
படிகள்:
- அழைப்பு மின்னஞ்சலிலிருந்து, அழைப்பை ஏற்றுக்கொள் என்பதைக் கிளிக் செய்யவும்.
- உங்கள் Shopify கணக்கில் உள்நுழையவும்.
- விருப்பத்திற்குரியது: உங்களிடம் Shopify கணக்கு இல்லையென்றால், புதிய Shopify கணக்குஒன்றை உருவாக்கி, பின்வரும் தகவல்களை உள்ளிடவும்:
- மின்னஞ்சல் முகவரி
- முதல் பெயர் மற்றும் கடைசிப் பெயர்
- விருப்பத்திற்குரியது: மொபைல் எண்
- கடவுச்சொல்
- நீங்கள் சேர அழைக்கப்பட்டுள்ள பார்ட்னர் நிறுவனத்தின் பெயரைக் கிளிக் செய்யவும்.
ஏழு நாட்களுக்குப் பிறகு இணைப்பு காலாவதியாகிவிடும். உங்கள் அழைப்பு மின்னஞ்சலில் உள்ள இணைப்பு இனி செயல்படவில்லை என்றால், உங்களுக்குப் புதிய அழைப்பு தேவைப்படும். புதிய அழைப்பைக் கோர, உங்களுக்கு அழைப்பை அனுப்பிய நிர்வாகியைத் தொடர்புகொள்ளவும்.