கிளையண்ட்டுகள் மற்றும் ஸ்டோர்களை நிர்வகித்தல்
சில வணிகர்கள் தங்களுடைய சொந்த Shopify ஸ்டோர்களை உருவாக்குகிறார்கள், ஆனால் பலரும் ஆரம்பக்கட்ட ஸ்டோர் அமைப்பைச் செய்ய வேறொருவரைப் பணியமர்த்தவே விரும்புகின்றனர். Shopify பார்ட்னராக, நீங்கள் உங்கள் கிளையண்ட்டின் சார்பாகப் புதிய ஸ்டோரை உருவாக்கலாம், பின்னர் அந்த ஸ்டோரின் உரிமையை அவர்களுக்கு மாற்றலாம்.
Shopify ஸ்டோர்களை உருவாக்குவதன் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி
உங்கள் கிளையண்டுகளின் ஸ்டோரை உருவாக்குவதற்கு நீங்கள் இருவரும் ஏற்கும் கட்டணத்தை வசூலிக்கலாம்.
மேலும், நீங்கள் ஒரு கிளையண்ட் பரிமாற்ற ஸ்டோரை உருவாக்கி, அதை ஒரு கிளையண்டிற்கு மாற்றும்போது, கிளையண்டின் மாதாந்திர அடிப்படைச் சந்தா அல்லது பிளாட்ஃபார்ம் கட்டணத்தின் ஒரு சதவீதத்துடன், அவர்களின் தகுதியான ஆன்லைன் மொத்த வணிக மதிப்பின் (GMV) ஒரு சதவீதத்தையும் பெறுவீர்கள். இந்த பேமெண்ட் உங்கள் கிளையண்ட் பரிமாற்ற ஸ்டோருக்கான பரிந்துரை கமிஷன் ஆகும். இந்தக் கமிஷன் எவ்வாறு கணக்கிடப்படுகிறது மற்றும் பொருந்தக்கூடிய விதிமுறைகள் பற்றிய தகவலுக்கு, Shopify-இல் பார்ட்னர்கள் சம்பாதிப்பது எப்படி என்பதைப் பார்க்கவும்.
உங்கள் சேவைகள் பிசினஸை உருவாக்குதல்
ஒரு ஸ்டோரை மாற்றிய பிறகும், பல பார்ட்னர்கள் கிளையண்டுகளுடன் நீண்டகாலப் பிசினஸ் உறவுகளைப் பேணுகின்றனர். தொழில்நுட்பப் பணிகளைப் பார்ட்னர்களிடம் வழங்குவதன் மூலம், கிளையண்டுகள் தங்களின் முக்கியப் பிசினஸில் கவனம் செலுத்த முடியும். ஒரு கிளையண்டிற்கு ஸ்டோரை உருவாக்குவது என்பது பெரும்பாலும் தொடர்ந்து நடைபெறும் கூட்டுப்பணியின் தொடக்கமாகும்.