3ds Max மற்றும் Substance Painter-ஐப் பயன்படுத்தி GLB கோப்புகளை உருவாக்குதல்
Shopify நிர்வாகியில் ஒரு தயாரிப்பில் சேர்க்கக்கூடிய GLB கோப்பை ஏற்றுமதி செய்ய, நீங்கள் 3ds Max மற்றும் Substance Painter-ஐப் பயன்படுத்தலாம். 3D மாதிரிகள், தயாரிப்புகளை வாடிக்கையாளர்கள் காட்சிப்படுத்திக் காண உதவுகின்றன. இது அவர்களின் நம்பிக்கையை அதிகரிப்பதுடன் ரிட்டர்ன்களையும் குறைக்கிறது.
இந்தப் பக்கத்தில்
3ds Max-இல் உங்கள் மாதிரியை ஏற்றுமதி செய்வதற்குத் தயார்படுத்துதல்
உங்கள் மாதிரியை ஏற்றுமதி செய்வதற்குத் தயார்படுத்த, அது ஒரு தனி மெஷ் ஆக உள்ளதா என்பதையும் அதில் ஒரேவொரு மெட்டீரியல் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பதையும் நீங்கள் உறுதிசெய்ய வேண்டும்.
படிகள்:
- File > Import... > Import... என்பதைக் கிளிக் செய்யவும்.
- உங்கள் மாதிரிக் கோப்பைத் தேர்ந்தெடுத்து, திற என்பதைக் கிளிக் செய்யவும்.
- OBJ Import Options உரையாடலில், Import as a single mesh என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- Import என்பதைக் கிளிக் செய்யவும்.
- மாடலை 0-1 இடைவெளியில் அன்-ரேப் செய்யவும். எந்த UV-களும் ஒன்றோடொன்று மேலெழாமல் இருப்பதை உறுதிசெய்யவும்:

- முழு மாடலுக்கும் ஒரு மெட்டீரியலைப் பயன்படுத்தவும்.
3ds Max-ல் இருந்து மெஷை ஏற்றுமதி செய்யவும்
- File > Export > Export... என்பதைக் கிளிக் செய்யவும்.
- கோப்புப் பெயரையும் மாடலை எங்கு ஏற்றுமதி செய்ய வேண்டுமோ அந்த இடத்தையும் உள்ளிடவும்.
- Save as Type கீழ்தோன்றும் மெனுவிலிருந்து, OBJ-Export (.OBJ) என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- Save என்பதைக் கிளிக் செய்யவும்.
- OBJ Export Options உரையாடலில், இயல்புநிலை விருப்பங்களை அப்படியே விட்டுவிட்டு, Export என்பதைக் கிளிக் செய்யவும்.
Substance Painter-ல் OBJ கோப்பை இறக்குமதி செய்து தயார் செய்யவும்
- File > New என்பதைக் கிளிக் செய்வதன் மூலம் புதிய Substance Painter திட்டத்தை உருவாக்கவும்.
- New project உரையாடலில், ஒரு மெஷைத் தேர்வுசெய்ய Select என்பதைக் கிளிக் செய்யவும்.
- 3ds Max-ல் இருந்து நீங்கள் ஏற்றுமதி செய்த OBJ கோப்பைத் தேர்ந்தெடுத்து, Open என்பதைக் கிளிக் செய்யவும்.
- New project சாளரத்தில், OK என்பதைக் கிளிக் செய்யவும்.
- மெஷைச் சரியாக ஏற்றுமதி செய்துள்ளீர்களா என்பதை உறுதிசெய்ய, இந்த Texture set list பேனலில் ஒரே ஒரு டெக்ஸ்ச்சர் செட் மட்டுமே உள்ளதா எனப் பார்க்கவும்.
- ஒன்றுக்கும் மேற்பட்ட டெக்ஸ்ச்சர் செட்கள் காட்டப்பட்டால், பல டெக்ஸ்ச்சர் செட்கள் என்பதைப் பார்க்கவும்.
- இந்த Texture set settings பேனலில், சேனல்களைச் சேர்க்க
+பொத்தானைக் கிளிக் செய்யவும்:
- கட்டாயமானவை: Ambient occlusion.
- விருப்பத்திற்குரியவை: Emissive. உங்கள் மாடலில் ஒளியை உமிழும் கூறுகள் இருந்தால் இந்தச் சேனலைச் சேர்க்கவும்.
- விருப்பத்திற்குரியவை: Opacity. உங்கள் மாடலில் ஒளிபுகும் கூறுகள் இருந்தால் இந்தச் சேனலைச் சேர்க்கவும்.
- Texture set settings பேனலில், Bake Mesh Maps என்பதைக் கிளிக் செய்யவும்.
- மாடலில் டெக்ஸ்ச்சர்களைப் பெயிண்ட் செய்யவும்.
பல டெக்ஸ்ச்சர் செட்கள்
Substance Painter-ல் OBJ கோப்பை இறக்குமதி செய்யும்போது, ஒரே ஒரு டெக்ஸ்ச்சர் செட் மட்டுமே இருக்க வேண்டும்:

ஒன்றுக்கும் மேற்பட்ட டெக்ஸ்ச்சர் செட்கள் காட்டப்பட்டால், 3ds Max-ல் இருந்து மெஷை ஏற்றுமதி செய்தபோது பின்வருவனவற்றில் ஏதோவொன்று தவறாக நடந்திருக்கலாம்:
- மெஷ் ஒரு பொருளாக இணைக்கப்படவில்லை.
- மெஷுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட டெக்ஸ்ச்சர் ஒதுக்கப்பட்டிருந்தது.
அப்படியானால், 3ds Max-ல் இருந்து உங்கள் மாடலை மீண்டும் ஏற்றுமதி செய்து, மெஷ் ஒற்றைப் பொருளாக இருப்பதையும் அதற்கென ஒரே ஒரு டெக்ஸ்ச்சர் மட்டுமே ஒதுக்கப்பட்டிருப்பதையும் உறுதிசெய்யவும்.
Substance Painter-ல் இருந்து glTF கோப்பை ஏற்றுமதி செய்யவும்
File > Export Textures என்பதைக் கிளிக் செய்யவும்.
Config கீழ்தோன்றும் மெனுவிலிருந்து, glTF PBR Metal Roughness என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
உங்கள் டெக்ஸ்ச்சர்களை எங்குச் சேமிக்க வேண்டுமோ அந்த இடத்தைத் தேர்வுசெய்யவும்.
டெக்ஸ்ச்சர் கோப்புகள் எவ்வளவு பெரியதாக இருக்கும் என்பதைத் தீர்மானிக்க, ஆவணத்தின் அளவைத் தேர்வுசெய்யவும்.
Export என்பதைக் கிளிக் செய்யவும்.
டெக்ஸ்ச்சர் கோப்புகளைச் சுருக்குதல்
மாடலை ஏற்றுமதி செய்தவுடன், உங்களிடம் பின்வரும் கோப்புகள் இருக்க வேண்டும்:
- modelName.bin
- modelName.glb
- modelName.gltf
- modelNamebaseColor.png
- modelNamenormal.png
- modelName_occlusionRoughnessMetallic.png
glTF PBR Metal Roughness உள்ளமைவைப் பயன்படுத்தும்போது, Substance Painter ஆனது PNG வடிவத்தில் மட்டுமே டெக்ஸ்ச்சர் கோப்புகளை ஏற்றுமதி செய்யும். டெக்ஸ்ச்சர் கோப்புகளைச் சுருக்கி, ஆல்ஃபா சேனல் தேவையில்லாத எந்த டெக்ஸ்ச்சரையும் JPG ஆக மாற்றுவதைப் பரிசீலிக்கவும். இது ஒட்டுமொத்த கோப்பு அளவைக் குறைக்கும், மேலும் கோப்பின் அளவு சிறியதாக இருப்பதால் விரைவாகப் பதிவிறக்கலாம், இடையூறு இல்லாமல் இயக்கலாம்.
உங்கள் கோப்பு அளவை 4 MB அல்லது அதற்கும் குறைவாக வைத்திருப்பதே சிறந்தது.
GLB கோப்பை உருவாக்கவும்
- https://glb-packer-old.glitch.me/ என்ற இணைப்பைப் பார்வையிடவும்.
- Substance Painter-ல் இருந்து நீங்கள் ஏற்றுமதி செய்த கோப்புகளை GLB Packer வலைப்பக்கத்தில் இழுத்து விடவும்.
out.glb என்றொரு கோப்பு உங்கள் கம்ப்யூட்டரில் பதிவிறக்கப்படும். பதிவிறக்கம் நிறைவடைந்ததும், நீங்கள் அந்தக் கோப்பிற்கு மறுபெயரிட்டு, அதன்பிறகு அதை Shopify-ல் பதிவேற்றலாம்.