Blender மற்றும் Substance Painter-ஐப் பயன்படுத்தி GLB கோப்புகளை உருவாக்குதல்

பதிப்பு 2.8 நிலவரப்படி, Shopify நிர்வாகியில் ஒரு தயாரிப்பில் சேர்க்கக்கூடிய GLB கோப்புகளை Blender-ஆல் ஏற்றுமதி செய்ய முடியும். மேலும் அறிய, Blender கையேட்டைப் பார்வையிடவும்.

பழைய Blender பதிப்புகளில், GLB கோப்பை ஏற்றுமதி செய்ய Blender மற்றும் Substance Painter-ஐ நீங்கள் இணைக்கலாம்.

Blender-இல் ஏற்றுமதி செய்ய உங்கள் மாடலைத் தயார்செய்யவும்

ஏற்றுமதி செய்ய உங்கள் மாடலைத் தயார்செய்ய, அது ஒரு ஒற்றை மெஷ் ஆக உள்ளதா மற்றும் ஒற்றை டெக்ஸ்ச்சர் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பதை நீங்கள் உறுதிசெய்ய வேண்டும்.

படிகள்:

  1. File > Import என்பதைக் கிளிக் செய்து, உங்கள் மாடலுக்கான சரியான கோப்பு வடிவமைப்பைத் தேர்ந்தெடுக்கவும்.
  2. உங்கள் மாடல் கோப்பைத் தேர்ந்தெடுத்து, Import என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. SHIFT-ஐ அழுத்திப் பிடித்தவாறு, உங்கள் சீனில் உள்ள ஒவ்வொரு ஆப்ஜெக்ட்டையும் வலது கிளிக் செய்து, அவற்றை ஒரே மெஷ்ஷாக இணைக்க Ctrl + J-ஐ அழுத்தவும்.
  4. மாடலை 0-1 UV ஸ்பேஸில் அன்ரேப் செய்யவும். எந்த UV-களும் ஒன்றின்மேல் ஒன்று பொருந்தாமல் இருப்பதை உறுதிசெய்யவும்:
    UV/Image Editor-இல், அனைத்து UV-களும் கிரிட்டில் அமைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிசெய்யவும்.
  5. Properties எடிட்டரில், மெட்டீரியல்ஸ் ஐகானைக் கிளிக் செய்யவும்.
  6. புதிய மெட்டீரியல் ஸ்லாட்டைச் சேர்க்க, + பொத்தானைக் கிளிக் செய்யவும்:
    'Add a material slot' பொத்தான் 'Material' பேனின் மேல்பகுதியில் உள்ளது.
  7. New என்பதைக் கிளிக் செய்யவும்.

Blender-இல் இருந்து மெஷ்ஷை ஏற்றுமதி செய்யவும்

  1. File > Export > FBX (.fbx) என்பதைக் கிளிக் செய்யவும்.
  2. கோப்பை எங்கு ஏற்றுமதி செய்ய வேண்டுமோ அதற்கான பாதையை உள்ளிடவும்.
  3. பின்வரும் ஏற்றுமதி அமைப்புகளைப் பயன்படுத்துவதை உறுதிசெய்யவும்:
    Version: FBX 7.4 binary. Scale: 1.0. Apply Scalings: All Local. Forward: -Z Forward. Up: Y Up. Path Mode: Auto. Batch Mode: Off.
  4. Export FBX என்பதைக் கிளிக் செய்யவும்.

Substance Painter-இல் FBX கோப்பை இறக்குமதி செய்து தயார்செய்யவும்

  1. File > New என்பதைக் கிளிக் செய்வதன் மூலம் புதிய Substance Painter திட்டப்பணியை உருவாக்கவும்.
  2. New project டயலாக்கில், மெஷ்ஷைத் தேர்வுசெய்ய Select என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. Blender-இல் இருந்து நீங்கள் ஏற்றுமதி செய்த FBX கோப்பைத் தேர்ந்தெடுத்து, Open என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. New project சாளரத்தில், OK என்பதைக் கிளிக் செய்யவும்.
  5. உங்கள் மெஷ்ஷைச் சரியாக ஏற்றுமதி செய்துள்ளீர்களா எனச் சரிபார்க்க, Texture set list பேனலில் ஒரே ஒரு டெக்ஸ்ச்சர் செட் மட்டுமே உள்ளதா என்பதை உறுதிப்படுத்தவும்.
  6. ​ Texture set settings பேனலில், சேனல்களைச் சேர்க்க + பொத்தானைக் கிளிக் செய்யவும்:
    Channels தலைப்புக்கு அருகில் + பொத்தான் உள்ளது. இந்தக் குறிப்பிட்ட பொத்தானைக் கிளிக் செய்யும்போது, கிடைக்கும் கூடுதல் சேனல்களைக் காட்டும் கீழ்தோன்றும் மெனு ஒன்று திறக்கும்.
    • தேவையானது: Ambient occlusion.
    • விருப்பத்திற்குரியது: Emissive. ஒளியை உமிழும் கூறுகள் உங்கள் மாடலில் இருந்தால், இந்தச் சேனலைச் சேர்க்கவும்.
    • விருப்பத்திற்குரியது: Opacity. ஒளியூடுருவும் கூறுகள் உங்கள் மாடலில் இருந்தால், இந்தச் சேனலைச் சேர்க்கவும்.
  7. Texture set settings பேனலில், Bake Mesh Maps என்பதைக் கிளிக் செய்யவும்.
  8. மாடலில் டெக்ஸ்ச்சர்களைப் பெயிண்ட் செய்யவும்.

ஒன்றுக்கும் மேற்பட்ட டெக்ஸ்ச்சர் செட்கள்

Substance Painter-இல் நீங்கள் FBX கோப்பை இறக்குமதி செய்யும்போது, ஒரே ஒரு டெக்ஸ்ச்சர் செட் மட்டுமே இருக்க வேண்டும்:

Texture set list பேனலில் டெக்ஸ்ச்சர் செட்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

ஒன்றுக்கும் மேற்பட்ட டெக்ஸ்ச்சர் செட்கள் காட்டப்பட்டால், Blender-இல் இருந்து மெஷ் ஏற்றுமதி செய்யப்பட்டபோது பின்வருவனவற்றில் ஏதோ ஒன்று தவறாக நடந்துள்ளது என்று அர்த்தம்:

  • மெஷ் ஒரு ஒற்றை ஆப்ஜெக்ட்டாக இணைக்கப்படவில்லை.
  • மெஷ்ஷுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட டெக்ஸ்ச்சர்கள் ஒதுக்கப்பட்டிருந்தன.

அப்படியானால், Blender-இல் இருந்து உங்கள் மாடலை மீண்டும் ஏற்றுமதி செய்து, மெஷ் ஒரு ஒற்றை ஆப்ஜெக்ட்டாக உள்ளதா என்பதையும் அதற்கு ஒரே ஒரு டெக்ஸ்ச்சர் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதா என்பதையும் உறுதிப்படுத்தவும்.

Substance Painter-இல் இருந்து glTF கோப்பை ஏற்றுமதி செய்யவும்

  1. File > Export Textures என்பதைக் கிளிக் செய்யவும்.

  2. Config கீழ்தோன்றும் மெனுவிலிருந்து, glTF PBR Metal Roughness என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

  3. உங்கள் டெக்ஸ்ச்சர்களைச் சேமிக்க விரும்பும் இடத்தைத் தேர்வுசெய்யவும்.

  4. டெக்ஸ்ச்சர் கோப்புகள் எவ்வளவு பெரியதாக இருக்கும் என்பதைத் தீர்மானிக்க, ஆவணத்தின் அளவைத் தேர்வுசெய்யவும்.

  5. Export என்பதைக் கிளிக் செய்யவும்.

டெக்ஸ்ச்சர் கோப்புகளைச் சுருக்குதல்

நீங்கள் மாடலை ஏற்றுமதி செய்தவுடன், பின்வரும் கோப்புகள் உங்களிடம் இருக்க வேண்டும்:

  • modelName.bin
  • modelName.glb
  • modelName.gltf
  • modelNamebaseColor.png
  • modelNamenormal.png
  • modelName_occlusionRoughnessMetallic.png

glTF PBR Metal Roughness உள்ளமைவைப் பயன்படுத்தும்போது, Substance Painter ஆனது டெக்ஸ்ச்சர் கோப்புகளை PNG வடிவமைப்பில் மட்டுமே ஏற்றுமதி செய்கிறது. டெக்ஸ்ச்சர் கோப்புகளைச் சுருக்குவதையும், ஆல்ஃபா சேனல் தேவைப்படாத எந்தவொரு டெக்ஸ்ச்சர்களையும் JPG ஆக மாற்றுவதையும் பரிசீலனை செய்யவும். இது மொத்தக் கோப்பின் அளவைக் குறைக்கிறது, மேலும் சிறிய அளவிலான கோப்புகள் விரைவான பதிவிறக்க வேகத்தையும் மென்மையான ஊடாடல்களையும் அனுமதிக்கின்றன.

உங்கள் கோப்பின் அளவை 4 MB ஆகவோ அதற்கும் குறைவாகவோ வைத்திருப்பது சிறந்தது.

ஒரு GLB கோப்பை உருவாக்கவும்

  1. https://glb-packer-old.glitch.me/-ஐப் பார்வையிடவும்.
  2. Substance Painter-இல் இருந்து நீங்கள் ஏற்றுமதி செய்த கோப்புகளை GLB Packer வலைப்பக்கத்தில் இழுத்து விடவும்.

out.glb என்ற பெயரிலான கோப்பு உங்கள் கணினியில் பதிவிறக்கப்படும். பதிவிறக்கம் நிறைவடைந்த பிறகு, நீங்கள் அந்தக் கோப்பின் பெயரை மாற்றிவிட்டு, அதை Shopify-இல் பதிவேற்றலாம்.