Maya மற்றும் Substance Painter ஐப் பயன்படுத்தி GLB கோப்புகளை உருவாக்குதல்
Shopify நிர்வாகியில் தயாரிப்பு ஒன்றில் சேர்க்கக்கூடிய GLB கோப்பை ஏற்றுமதி செய்ய, Maya மற்றும் Substance Painter ஐ நீங்கள் பயன்படுத்தலாம். வாடிக்கையாளர்கள் தயாரிப்புகளைக் காட்சிப்படுத்த 3D மாடல்கள் உதவும், இது நம்பகத்தன்மையை அதிகரித்து, ரிட்டர்ன்களைக் குறைக்கும்.
இந்தப் பக்கத்தில் உள்ளவை
Maya-வில் ஏற்றுமதி செய்ய உங்கள் மாடலைத் தயார் செய்தல்
ஏற்றுமதி செய்வதற்கு உங்கள் மாடலைத் தயார் செய்ய, அது ஒரே மெஷ்-ஆக இருப்பதையும் அதில் ஒரு மெட்டீரியல் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளதையும் உறுதிசெய்ய வேண்டும்.
படிகள்:
- File > Import... என்பதற்குச் சென்று உங்களின் 3D கோப்பைத் தேர்ந்தெடுத்து, Import என்பதைக் கிளிக் செய்வதன் மூலம் உங்கள் மாடலை Maya-விற்குள் இறக்குமதி செய்யவும்.
- உங்கள் மெஷ்-ஐ ஒரு ஆப்ஜெக்ட்டாக ஒருங்கிணைக்க, Mesh > Combine என்பதைக் கிளிக் செய்யவும்.
- மாடலை 0-1 UV ஸ்பேஸில் அன்-ரேப் (unwrap) செய்யவும். எந்த UVகளும் ஒன்றோடொன்று மேற்பொருந்தவில்லை என்பதை உறுதிசெய்யவும்:

- மாடலில் ஒரு Phong மெட்டீரியலைப் பயன்படுத்தவும்:
- உங்கள் மவுஸ் கர்சரை மாடலின் மீது வைத்து, வலது கிளிக் செய்து அப்படியே பிடித்துக் கொண்டு, Assign New Material... என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- இந்த டயலாக்கில் இருந்து, Phong என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
Maya-வில் இருந்து மெஷ்-ஐ ஏற்றுமதி செய்தல்
- முழு மெஷ்-ஐயும் தேர்ந்தெடுத்து, File > Export Selection... என்பதைக் கிளிக் செய்யவும்.
- கோப்பின் பெயர் மற்றும் கோப்பைச் சேமிக்க வேண்டிய இடத்தின் பெயர் ஆகியவற்றை உள்ளிடவும்.
- Files of type கீழ்தோன்றும் மெனுவில், OBJexport என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- Export Selection என்பதைக் கிளிக் செய்யவும்.
Substance Painter-இல் OBJ கோப்பை இறக்குமதி செய்து தயார் செய்தல்
- File > New என்பதைக் கிளிக் செய்வதன் மூலம் ஒரு புதிய Substance Painter திட்டப்பணியை உருவாக்கவும்.
- New project டயலாக்கில், ஒரு மெஷ்-ஐத் தேர்வுசெய்ய Select என்பதைக் கிளிக் செய்யவும்.
- நீங்கள் Maya-விலிருந்து ஏற்றுமதி செய்த OBJ கோப்பைத் தேர்ந்தெடுத்து, Open என்பதைக் கிளிக் செய்யவும்.
- New project சாளரத்தில், OK என்பதைக் கிளிக் செய்யவும்.
- உங்கள் மெஷ்-ஐச் சரியாக ஏற்றுமதி செய்துள்ளீர்களா என்பதை உறுதிசெய்ய, Texture set list பேனலில் ஒரே ஒரு டெக்ஸ்சர் செட் மட்டுமே உள்ளதா என்பதைச் சரிபார்க்கவும்.
- ஒன்றுக்கும் மேற்பட்ட டெக்ஸ்சர் செட்கள் காட்டப்பட்டால், பல்வேறு டெக்ஸ்சர் செட்கள் என்பதைப் பார்க்கவும்.
- Texture set settings பேனலில், சேனல்களைச் சேர்க்க
+பொத்தானைக் கிளிக் செய்யவும்:
- தேவையானது: Ambient occlusion.
- விருப்பத்திற்குரியது: Emissive. உங்கள் மாடலில் ஒளியை உமிழும் கூறுகள் இருந்தால், இந்தச் சேனலைச் சேர்க்கவும்.
- விருப்பத்திற்குரியது: Opacity. உங்கள் மாடலில் வெளிப்படையான கூறுகள் இருந்தால், இந்தச் சேனலைச் சேர்க்கவும்.
- Texture set settings பேனலில், Bake Mesh Maps என்பதைக் கிளிக் செய்யவும்.
- மாடலின் மீது டெக்ஸ்சர்களைப் பெயிண்ட் செய்யவும்.
பல்வேறு டெக்ஸ்சர் செட்கள்
OBJ கோப்பை Substance Painter-க்கு இறக்குமதி செய்யும்போது, ஒரு டெக்ஸ்சர் செட் மட்டுமே இருக்க வேண்டும்:

ஒன்றுக்கும் மேற்பட்ட டெக்ஸ்சர் செட்கள் காட்டப்பட்டால், Maya-வில் இருந்து மெஷ் ஏற்றுமதி செய்யப்பட்டபோது பின்வருவனவற்றில் ஒன்று தவறாக நடந்திருக்கலாம்:
- மெஷ் ஒற்றைப் பொருளாக இணைக்கப்படவில்லை.
- மெஷில் ஒன்றுக்கும் மேற்பட்ட டெக்ஸ்சர்கள் ஒதுக்கப்பட்டிருந்தன.
அப்படி இருந்தால், உங்கள் மாடலை மீண்டும் Maya-வில் இருந்து ஏற்றுமதி செய்து, மெஷ் ஒற்றைப் பொருளாக இருப்பதையும், அதில் ஒற்றை டெக்ஸ்சர் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதையும் உறுதிசெய்யவும்.
Substance Painter-ல் இருந்து glTF கோப்பை ஏற்றுமதி செய்தல்
File > Export Textures என்பதைக் கிளிக் செய்யவும்.
Config கீழ்தோன்றும் மெனுவிலிருந்து, glTF PBR Metal Roughness என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
உங்கள் டெக்ஸ்சர்களைச் சேமிக்க வேண்டிய இடத்தைத் தேர்வுசெய்யவும்.
டெக்ஸ்சர் கோப்புகளின் அளவைத் தீர்மானிக்க, ஆவணத்தின் அளவைத் தேர்வுசெய்யவும்.
Export என்பதைக் கிளிக் செய்யவும்.
டெக்ஸ்சர் கோப்புகளைச் சுருக்குதல்
மாடலை ஏற்றுமதி செய்த பிறகு, உங்களிடம் பின்வரும் கோப்புகள் இருக்க வேண்டும்:
- modelName.bin
- modelName.glb
- modelName.gltf
- modelNamebaseColor.png
- modelNamenormal.png
- modelName_occlusionRoughnessMetallic.png
glTF PBR Metal Roughness உள்ளமைவைப் பயன்படுத்தும்போது, Substance Painter டெக்ஸ்சர் கோப்புகளை PNG வடிவமைப்பில் மட்டுமே ஏற்றுமதி செய்கிறது. டெக்ஸ்சர் கோப்புகளைச் சுருக்கவும், ஆல்ஃபா சேனல் தேவையற்ற டெக்ஸ்சர்களை JPG-ஆக மாற்றவும் பரிசீலிக்கலாம். இது ஒட்டுமொத்தக் கோப்பு அளவைக் குறைக்கும், மேலும் சிறிய கோப்பு அளவுகள் விரைவான பதிவிறக்க வேகத்தையும் சீரான செயல்பாடுகளையும் வழங்கும்.
உங்கள் கோப்பு அளவை 4 MB அல்லது அதற்கும் குறைவாக வைத்திருப்பது சிறந்தது.
GLB கோப்பை உருவாக்குதல்
- https://glb-packer-old.glitch.me/ தளத்திற்குச் செல்லவும்.
- Substance Painter-ல் இருந்து நீங்கள் ஏற்றுமதி செய்த கோப்புகளை GLB Packer வலைப்பக்கத்தில் இழுத்து விடவும்.
out.glb என்ற கோப்பு உங்கள் கம்ப்யூட்டரில் பதிவிறக்கப்படும். பதிவிறக்கம் முடிந்ததும், கோப்பின் பெயரை மாற்றி Shopify-இல் பதிவேற்றலாம்.