POS தொடர்பான கூடுதல் மெட்டீரியல்கள்
பல வணிகர்கள், ஆன்லைன் மற்றும் ஸ்டோர் ஆகிய இரண்டிலும் தங்களின் விற்பனையைக் கண்காணிக்கும் முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்ட ரீடெய்ல் தீர்வைத் தேடுகின்றனர். நேரடியாக வாடிக்கையாளர்களிடம் பொருட்களை விற்பனை செய்யும் தேவைகளைக் கொண்ட வருங்காலக் கிளையண்டுகளுக்கு Shopify POS ஒரு சிறந்த விற்பனை அம்சமாகும்.
வணிகர்களுக்கு Shopify POS-ஐ விற்பனை செய்ய உதவும் கூடுதல் மெட்டீரியல்களை இந்தப் பக்கத்தில் நீங்கள் காணலாம்.
இந்தப் பக்கத்தில்
Shopify POS சிற்றேடு
Shopify POS இன் பலன்களை நீங்கள் விவரிக்க உதவும் வகையில், ஒரு விளம்பரத்தாளைப் பதிவிறக்கி அச்சிட்டு, அதை கடையின் உரிமையாளர்கள் அல்லது Shopify POS இல் ஆர்வமுள்ளவர் என நீங்கள் கருதும் எவரிடமாவது வழங்கலாம்.
மின்னஞ்சல் மூலமாக டிஜிட்டல் நகலை அனுப்ப விரும்பினால், கிராப் மார்க்குகள் இல்லாத இந்தச் சிற்றேடுப் பதிப்பை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
வன்பொருளின் குறிப்பு எண்கள்
Shopify POS சிஸ்டத்திற்கான வன்பொருளை நீங்கள் மறுவிற்பனை செய்ய விரும்பினால், விநியோகஸ்தர்களிடம் இருந்து சரியான வன்பொருளைப் பெற பின்வரும் குறிப்பு எண்களைப் பயன்படுத்தலாம்.
| சில்லறை விற்பனைக் கூறு | மாடல் பெயர் | மாடல் எண் |
|---|---|---|
| புளூடூத் வயர்லெஸ் ரசீது அச்சுப்பொறி | Star Micronics TSP100IIIBI | TSP143IIIBI |
| புளூடூத் வயர்லெஸ் ரசீது அச்சுப்பொறி | Star Micronics TSP650IIBI | 39449871 |
| LAN ரசீது அச்சுப்பொறி | Star Micronics TSP100LAN | TSP143IIILAN |
| பணப் பெட்டி | Star Micronics CD3-1616 | 37965600 |
| பணப் பெட்டி | APG Vasario 320 | VB320-BL1616 |
| @Rest iPad ஸ்டாண்ட் | Heckler Design @Rest ஸ்டாண்ட் | HDAR118 |
| iPad Air ஸ்டாண்ட் | iPad Air-க்கான WindFall ஸ்டாண்ட் | HDWFA1 |
| iPad ஸ்டாண்ட் | iPad 2, 3, 4-க்கான WindFall ஸ்டாண்ட் | HDWF1C |
| பார்கோடு அச்சுப்பொறி | Dymo LabelWriter 450 | 1752264 |
| 1D பார்கோடு ஸ்கேனர் | Socket Mobile 7Ci | CX2870-1409 |
| 2D பார்கோடு ஸ்கேனர் | Socket Mobile 7Qi | CX3308-1528 |
| பார்கோடு லேபிள் | Dymo (1" x 1") சிறிய லேபிள் | 30332 |
| பார்கோடு லேபிள் | Dymo (1" x 2 1/8") நடுத்தர லேபிள் | 30336 |
| பார்கோடு லேபிள் | Dymo 1 1/8" x 3 1/2") பெரிய லேபிள் | 30252 |
| பார்கோடு லேபிள் | Dymo Butterfly (மிகச் சிறிய) லேபிள் | 30299 |
விளம்பரப் படங்கள்
Shopify POS-ஐ விற்கும்போது, உங்கள் இணையதளத்தில் வைப்பதற்கும் வணிகர்களுடன் பகிர்வதற்கும் Shopify POS வன்பொருளின் படங்களைப் பதிவிறக்குங்கள்.
வணிகர்களுக்கான பயனுள்ள ஆதாரங்கள்
வணிகர்கள் Shopify POS சிஸ்டம் பற்றி அறிந்துகொள்ள உதவ, நீங்கள் அவர்களுடன் பகிரக்கூடிய சில பயனுள்ள ஆதாரங்கள் கீழே வழங்கப்பட்டுள்ளன: