கிளையண்ட் பரிமாற்ற ஸ்டோர்களில் ஆர்டர்களைச் சோதித்தல்
சோதனை ஆர்டரைச் செய்வதன் மூலம், உங்கள் கிளையண்ட் பரிமாற்ற ஸ்டோரின் செக்அவுட் செயல்முறை மற்றும் ஆர்டர் செயலாக்கம், சரக்கு இருப்பு, ஷிப்பிங், மின்னஞ்சல் அறிவிப்புகள் மற்றும் வரிகளுக்கான அமைப்புகள் அனைத்தும் சரியாக உள்ளதா என்பதை உறுதிசெய்யலாம். கிளையண்ட் பரிமாற்ற ஸ்டோர்கள் வரம்பற்ற சோதனை ஆர்டர்களைச் செயலாக்க முடியும்.
இந்தப் பக்கத்தில்
- ஆர்டர்களைச் சோதிக்கும் வழிகள்
- Shopify-இன் சோதனை கட்டண நுழைவாயிலைப் பயன்படுத்தி ஆர்டர்களைச் சோதித்தல்
- Shopify Payments சோதனைப் பயன்முறையைப் பயன்படுத்தி ஆர்டர்களைச் சோதித்தல்
- மூன்றாம் தரப்பு கட்டண வழங்குநர்களுக்கான சோதனைப் பயன்முறை
- உண்மையான பரிவர்த்தனைகள் மூலம் சோதித்தல்
- சோதனைப் பயன்முறை ஆர்டர் உறுதிப்படுத்தல் மின்னஞ்சல்களின் சிக்கல் தீர்த்தல்
ஆர்டர்களைச் சோதிக்கும் வழிகள்
பின்வரும் வழிகளில் நீங்கள் ஆர்டர்களைச் சோதிக்கலாம்:
- ஒரு பரிவர்த்தனையைச் செய்துபார்க்க Shopify-இன் சோதனை கட்டண நுழைவாயிலைப் பயன்படுத்தவும்
- உங்கள் கட்டண வழங்குநருக்கான சோதனைப் பயன்முறையை இயக்கி, ஸ்டோரின் செக்அவுட் மூலம் சோதனை ஆர்டர்களைச் செய்யவும்:
- GraphQL Admin API-ஐப் பயன்படுத்தி நீங்கள் சோதனை ஆர்டர்களை உருவாக்கலாம்.
ஆர்டர்களைச் சோதிக்க நீங்கள் Admin API-ஐப் பயன்படுத்தினால், test பண்பு அல்லது புலத்தை true என அமைக்க வேண்டும்.
கிளையண்ட் பரிமாற்ற ஸ்டோர்களில் ஆர்டர்களைச் சோதிப்பதிலுள்ள வரம்புகள்
கிளையண்ட் பரிமாற்ற ஸ்டோரில் ஆர்டர்களைச் சோதிக்கும்போது பின்வரும் வரம்புகள் பொருந்தும்:
- உண்மையான பரிவர்த்தனைகளைப் பயன்படுத்தி உங்களால் ஆர்டர்களைச் சோதிக்க முடியாது. உண்மையான பரிவர்த்தனைகள் என்பவை சோதனைப் பயன்முறையில் இல்லாத கட்டண வழங்குநர் மூலமாகச் செயலாக்கப்படும் மற்றும் செல்லுபடியாகும் கிரெடிட் கார்டு எண் போன்ற உண்மையான கட்டணத் தகவலைப் பயன்படுத்தும் பரிவர்த்தனைகளாகும்.
- கிஃப்ட் கார்டுகள் அல்லது ஸ்டோர் கிரெடிட்டை உங்களால் சோதிக்க முடியாது, ஏனெனில் அவை உண்மையான பரிவர்த்தனைகளாகவே செயலாக்கப்படுகின்றன.
- மேனுவல் பேமெண்ட் முறைகளைப் பயன்படுத்தி உங்களால் ஆர்டர்களைச் சோதிக்க முடியாது. இதில் Shopify POS-இல் உள்ள ரொக்கம் மற்றும் பிரத்தியேக பேமெண்ட்டுகள் அடங்கும்.
- Shopify நிர்வாகியில் நீங்கள் உருவாக்கும் வரைவு ஆர்டர்களைப் பயன்படுத்தி உங்களால் ஆர்டர்களைச் சோதிக்க முடியாது.
இந்தப் பரிவர்த்தனை வகைகளுடன் சோதிக்க, நீங்கள் ஒரு கட்டணத் திட்டத்திற்கு ஸ்டோரை இடமாற்ற வேண்டும்.
- Shopify நிர்வாகியில் நீங்கள் உருவாக்கும் வரைவு ஆர்டர்களைப் பயன்படுத்தி உங்களால் சோதிக்க முடியாது. நீங்கள் ஸ்டோரின் செக்அவுட்டைப் பயன்படுத்திச் சோதனை ஆர்டர்களைச் செய்ய வேண்டும்.
Shopify-இன் சோதனை கட்டண நுழைவாயிலைப் பயன்படுத்தி ஆர்டர்களைச் சோதித்தல்
உங்கள் கிளையண்ட் பரிமாற்ற ஸ்டோரின் ஆன்லைன் செக்அவுட்டில் ஒரு பரிவர்த்தனையைச் செய்துபார்க்க, நீங்கள் Shopify-இன் சோதனை கட்டண நுழைவாயிலை அமைக்கலாம். சோதனை கட்டண நுழைவாயில் என்பது, சோதனை ஆர்டர்களை உருவாக்க எந்தவொரு ஸ்டோரும் பயன்படுத்தக்கூடிய ஒரு கட்டண வழங்குநராகும்.
ஒரு ஆர்டரை உருவாக்க, செக்அவுட்டில் நீங்கள் சோதனை கட்டணத் தகவலை உள்ளிட வேண்டும். நீங்கள் உள்ளிடும் தகவலைப் பொறுத்து வெவ்வேறு வகையான பரிவர்த்தனைகளை உங்களால் செய்துபார்க்க முடியும்.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, அமைப்புகள் > பேமெண்ட்டுகள் என்பதற்குச் செல்லவும்.
நீங்கள் கிரெடிட் கார்டு கட்டண வழங்குநரை இயக்கியிருந்தால், தொடர்வதற்கு முன் அதை முடக்கவும். நிர்வகி > முடக்கு என்பதைக் கிளிக் செய்யவும் (இந்தப் பொத்தான் உங்கள் கட்டண வழங்குநரின் பெயரையும் காட்டும், எ.கா. Shopify Payments-ஐ முடக்கு), பின்னர் முடக்குவதை உறுதிப்படுத்தவும்.
பின்வரும் செயல்களில் ஒன்றை முடிக்கவும்:
- நீங்கள் மூன்றாம் தரப்பு கட்டண வழங்குநரை இயக்கியிருந்தால், அதை முடக்கவும்.
- நீங்கள் Shopify Payments-ஐ இயக்கியிருந்தால்:
- Shopify payments பிரிவில், நிர்வகி > கட்டண முறைகளை நிர்வகி என்பதைக் கிளிக் செய்யவும்.
- பக்கத்தின் கீழே உள்ள, மூன்றாம் தரப்பு வழங்குநருக்கு மாறு என்பதைக் கிளிக் செய்து, உறுதிப்படுத்த மீண்டும் மூன்றாம் தரப்பு வழங்குநருக்கு மாறு என்பதைக் கிளிக் செய்யவும்.
- நீங்கள் Shopify Payments-ஐ இயக்கவில்லை என்றால், Shopify payments பிரிவில், பிற வழங்குநர்கள் அனைவரையும் காண்க என்பதைக் கிளிக் செய்யவும்.
- உங்கள் நாட்டில் Shopify Payments கிடைக்கவில்லை என்றால், கட்டண வழங்குநர்கள் பிரிவில், ஒரு வழங்குநரைத் தேர்ந்தெடு என்பதைக் கிளிக் செய்யவும்.
பட்டியலிலிருந்து Test payment gateway என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
இயக்கு Test payment gatewayஎன்பதைக் கிளிக் செய்யவும்.
சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
உங்கள் ஆன்லைன் ஸ்டோருக்குச் சென்று வாடிக்கையாளர் செய்வதுபோல ஒரு ஆர்டரைச் செய்யவும். வெவ்வேறு செக்அவுட் சூழல்களைச் சோதிக்க, செக்அவுட்டில் பின்வரும் கிரெடிட் கார்டு விவரங்களை உள்ளிடவும்:
| புலத்தின் பெயர் | உள்ளிட வேண்டிய விவரங்கள் |
|---|---|
| கார்டிலுள்ள பெயர் | Test payment gateway என்பதை உள்ளிடவும் |
| கிரெடிட் கார்டு எண் | பல்வேறு வகையான பரிவர்த்தனைகளைச் செய்துபார்க்க, இவற்றில் ஒவ்வொன்றையும் முறைப்படி உள்ளிடவும்:
|
| CVV | ஏதேனும் 3 இலக்க எண்ணை உள்ளிடவும் (எடுத்துக்காட்டாக, 111). |
| காலாவதித் தேதி | எதிர்காலத்தில் உள்ள ஏதேனும் ஒரு தேதியை உள்ளிடவும். |
- சோதனையை முடித்த பிறகு, இதற்கு அடுத்துள்ள நிர்வகி என்பதைக் கிளிக் செய்யவும்: Test payment gateway (உங்கள் Shopify நிர்வாகியில்).
- முடக்கு என்பதைக் கிளிக் செய்யவும் Test payment gateway (உங்கள் செக்அவுட்டிலிருந்து இந்த நுழைவாயிலை அகற்றுவதற்கு).
Shopify Payments சோதனைப் பயன்முறையைப் பயன்படுத்தி ஆர்டர்களைச் சோதித்தல்
உங்கள் Shopify Payments அமைவைச் சோதிக்க, சோதனைப் பயன்முறையை இயக்கி, பேமெண்ட்டுகளை உருவகப்படுத்த சோதனை கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தவும்.
கட்டணத் திட்டத்தைத் தேர்ந்தெடுத்திருந்தால் மட்டுமே உங்களால் Shopify Payments ஐச் சோதிக்க முடியும். உங்கள் பிராந்தியத்தைப் பொறுத்து, சோதனைப் பயன்முறையைச் செயல்படுத்துவதற்கு முன் உங்கள் பிசினஸ் பற்றிய தகவலைச் சமர்ப்பிக்க வேண்டியிருக்கலாம்.
Shopify Payments க்கான சோதனைப் பயன்முறையைச் செயல்படுத்துதல்
நீங்கள் சோதனை ஆர்டர்களை உருவாக்குவதற்கு முன், Shopify Payments க்கான சோதனைப் பயன்முறையைச் செயல்படுத்த வேண்டும்.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, அமைப்புகள் > பேமெண்ட்டுகள் என்பதற்குச் செல்லவும்.
Shopify Payments பிரிவில், நிர்வகி என்பதைக் கிளிக் செய்யவும்.
சோதனைப் பயன்முறை பிரிவில், சோதனைப் பயன்முறையை இயக்கு என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
சோதனை கிரெடிட் கார்டு எண்களுடன் பரிவர்த்தனைகளை உருவகப்படுத்துதல்
நீங்கள் சோதனை கிரெடிட் கார்டு எண்ணைப் பயன்படுத்தி ஆர்டர்களை உருவாக்கி, பரிவர்த்தனைகளை உருவகப்படுத்தலாம். வெற்றிகரமான பரிவர்த்தனைகள், தோல்வியடைந்த பரிவர்த்தனைகள் மற்றும் வெவ்வேறு நாணயங்களிலான பரிவர்த்தனைகளை உருவாக்குவதற்கு சோதனை எண்கள் உள்ளன.
வெற்றிகரமான பரிவர்த்தனைகளை உருவகப்படுத்துதல்
வெற்றிகரமான பரிவர்த்தனையை உருவகப்படுத்த, செக்அவுட்டில் கிரெடிட் கார்டு விவரங்கள் கேட்கப்படும்போது பின்வரும் தகவலைப் பயன்படுத்தவும்:
- கார்டில் உள்ள பெயர்: குறைந்தபட்சம் இரண்டு வார்த்தைகளை உள்ளிடவும்.
- காலாவதித் தேதி: எதிர்காலத்தில் உள்ள ஏதேனும் ஒரு தேதியை உள்ளிடவும்.
- பாதுகாப்புக் குறியீடு: ஏதேனும் மூன்று இலக்கங்களை உள்ளிடவும்.
- கார்டு எண்: பின்வரும் எண்களில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தவும்:
| கார்டு வகை | சோதனை கிரெடிட் எண் |
|---|---|
| Visa | 4242424242424242 |
| Mastercard | 5555555555554444 |
| American Express | 378282246310005 |
| Discover | 6011111111111117 |
| Diners Club | 30569309025904 |
| JCB | 3530111333300000 |
தோல்வியடைந்த பரிவர்த்தனைகளை உருவகப்படுத்துதல்
செக்அவுட்டின்போது வாடிக்கையாளருக்குக் காட்டப்படக்கூடிய கிரெடிட் கார்டு பிழைச் செய்திகளை நீங்கள் பார்க்க விரும்பினால், பல்வேறு தோல்வியடைந்த பரிவர்த்தனைகளை உருவகப்படுத்த பின்வரும் சோதனை கிரெடிட் கார்டு எண்களைப் பயன்படுத்தலாம்:
- கார்டு நிராகரிக்கப்பட்டது என்ற செய்தியை உருவாக்க, 4000000000000002 என்ற கிரெடிட் கார்டு எண்ணைப் பயன்படுத்தவும்.
- தவறான எண் என்ற செய்தியை உருவாக்க, 4242424242424241 என்ற கிரெடிட் கார்டு எண்ணைப் பயன்படுத்தவும்.
- சர்ச்சைக்குரிய பரிவர்த்தனை என்பதை உருவகப்படுத்த, 4000000000000259 என்ற கிரெடிட் கார்டு எண்ணைப் பயன்படுத்தவும்.
- தவறான காலாவதி மாதம் என்ற செய்தியை உருவாக்க, தவறான காலாவதி மாதத்தைப் பயன்படுத்தவும் (எடுத்துக்காட்டாக, 13).
- தவறான காலாவதி ஆண்டு என்ற செய்தியை உருவாக்க, கடந்த காலத்தில் உள்ள காலாவதி ஆண்டைப் பயன்படுத்தவும்.
- தவறான பாதுகாப்புக் குறியீடு என்ற செய்தியை உருவாக்க, இரண்டு இலக்கப் பாதுகாப்புக் குறியீட்டு எண்ணைப் பயன்படுத்தவும்.
மூன்றாம் தரப்பு கட்டண வழங்குநர்களுக்கான சோதனைப் பயன்முறை
சில மூன்றாம் தரப்பு கட்டண வழங்குநர்கள் சோதனைப் பயன்முறையை வழங்குகின்றனர், அதை நீங்கள் Shopify நிர்வாகியில் இயக்கிக் கொள்ளலாம். ஒரு கிளையண்ட் பரிமாற்ற ஸ்டோரில் சோதிக்கப்படுவதற்கு, மூன்றாம் தரப்பு கட்டண வழங்குநர்கள் தங்களின் அமைப்புகளில் சோதனைப் பயன்முறையை இயக்கு என்ற விருப்பத்தைச் செயல்படுத்தியிருக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட மூன்றாம் தரப்பு கட்டண வழங்குநருடன் சோதனைப் பயன்முறையைப் பயன்படுத்துவது குறித்த கூடுதல் தகவலுக்கு, கட்டண வழங்குநரின் ஆவணங்களைப் பார்க்கவும்.
கட்டண நுழைவாயில் சோதனைப் பயன்முறையில் இருக்கும்போது, Shopify இலிருந்து வரும் கோரிக்கைகளில் test பண்புக்கூறு சேர்க்கப்படும். test என்பதை true என அமைத்தால், பேமெண்ட் ஒரு சோதனை பேமெண்ட்டாகச் செயலாக்கப்படும், உண்மையான பரிவர்த்தனை எதுவும் மேற்கொள்ளப்படாது.
உண்மையான பரிவர்த்தனைகளுடன் சோதித்தல்
உங்கள் கிளையண்ட் பரிமாற்ற ஸ்டோரில் உண்மையான பரிவர்த்தனைகளைச் சோதிக்க முடியாது. உண்மையான பரிவர்த்தனைகளைப் பயன்படுத்தி உங்கள் ஆர்டர்களை நீங்கள் சோதிக்க வேண்டுமானால், உங்கள் ஸ்டோரைக் கட்டணத் திட்டத்திற்கு மாற்ற வேண்டும். மேலும் தகவலுக்கு, ஸ்டோர்களைக் கிளையண்டுகளுக்கு மாற்றுதல் என்பதைப் பார்க்கவும்.
ஒரு கிளையண்ட் பரிமாற்ற ஸ்டோரைக் கட்டணத் திட்டத்திற்கு மாற்ற விரும்பினால், அதேசமயம் நீங்களே ஸ்டோரின் உரிமையாளராகத் தொடர விரும்பினால், Shopify நிர்வாகியில் ஒரு திட்டத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
சோதனைப் பயன்முறை ஆர்டர் உறுதிப்படுத்தல் மின்னஞ்சல்களின் சிக்கல் தீர்த்தல்
Shopify Payments சோதனைப் பயன்முறைப் பரிவர்த்தனைகளிலிருந்து உங்களுக்கு ஆர்டர் உறுதிப்படுத்தல் மின்னஞ்சல்கள் வரவில்லை எனில், பின்வரும் சிக்கல் தீர்த்தல் படிகளை முயன்று பார்க்கவும்:
- மின்னஞ்சல் வார்ப்புருக்களைச் சரிபார்க்கவும்: உங்கள் Shopify நிர்வாகியில் உள்ள அறிவிப்புகள் அமைப்புக்குச் செல்லவும். ஆர்டர் உறுதிப்படுத்தல் மின்னஞ்சல் வார்ப்புருவைக் கிளிக் செய்யவும். இந்த வார்ப்புருவை நீங்கள் தனிப்பயனாக்கியிருந்தால், அதில் தேவையான இணைப்புகளோ தகவலோ இல்லாமல் இருக்கலாம். வார்ப்புருப் பக்கத்தின் கீழ்ப்பகுதியில் உள்ள இயல்புநிலைக்கு மாற்றியமை பொத்தானைக் கிளிக் செய்வதன் மூலம், நீங்கள் இயல்புநிலை வார்ப்புருவுக்கு மாற்றியமைக்கலாம்.
- மின்னஞ்சல் அமைப்புகளைச் சரிபார்க்கவும்: உங்கள் மின்னஞ்சல் அமைப்புகள் சரியாக உள்ளமைக்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்திக் கொள்ளவும். உங்கள் மின்னஞ்சல் வார்ப்புருக்களைத் தனிப்பயனாக்கியிருந்தால், வாடிக்கையாளர்களுக்குச் சரியான தகவல் செல்வதை உறுதிசெய்ய, ஆர்டர் நிலை URL ஐ உங்கள் வார்ப்புருக்களில் நீங்களே கைமுறையாகச் சேர்க்க வேண்டியிருக்கலாம்.
- செயல்பாட்டைச் சோதிக்கவும்: ஏதேனும் மாற்றங்களைச் செய்த பிறகு, உறுதிப்படுத்தல் மின்னஞ்சல் சரியாக அனுப்பப்படுகிறதா என்பதைப் பார்க்க ஒரு சோதனை ஆர்டரைச் செய்யவும். உங்கள் அமைப்புகள் எதிர்பார்த்தபடி செயல்படுகின்றனவா என்பதைச் சரிபார்க்க இது உதவுகிறது.
- ஸ்பேம்/ஜங்க் கோப்புறையைச் சரிபார்க்கவும்: மின்னஞ்சல்கள் உங்கள் ஸ்பேம் அல்லது ஜங்க் கோப்புறைக்கு அனுப்பப்பட்டிருக்கலாம்.
- உங்கள் மின்னஞ்சல் வழங்குநரைத் தொடர்புகொள்ளவும்: உங்கள் மின்னஞ்சல் வழங்குநரால் அவர்களின் தரப்பில் பிழைகள் உள்ளதா எனச் சரிபார்க்க முடியும்.