Shopify Affiliate Program பற்றி
Shopify மூலம் தொழில்முனைவு குறித்து தங்கள் பார்வையாளர்களுக்குக் கற்பித்து, ஊக்கமளிக்கும் தொழில்முனைவோர், கல்வியாளர்கள், இன்ஃப்ளூயன்சர்கள் மற்றும் உள்ளடக்கத்தை உருவாக்குபவர்கள் Shopify Affiliate Program-இல் அடங்குவர். மேலும், தங்கள் தொழில்முனைவுப் பார்வையாளர்களை Shopify-க்குப் பரிந்துரைக்கும் மற்றவர்களும் இதில் அடங்குவர். இந்தத் திட்டத்தில் இலவசமாகச் சேரலாம். அத்துடன், உங்கள் பார்வையாளர்கள் மூலம் பணமீட்டவும் ஒவ்வொரு புதிய Shopify வியாபாரிப் பரிந்துரைக்கும் கமிஷனைப் பெறவும் இது உங்களை அனுமதிக்கிறது. ஓர் அஃபிலியேட்டாக, உங்களின் தனித்துவமான அஃபிலியேட் தடமறிதல் இணைப்பு மூலம் கட்டணத் திட்டத்தில் பதிவுசெய்யும் ஒவ்வொரு பயனருக்கும் நீங்கள் கமிஷனைப் பெறலாம்.
Shopify Affiliate Program-க்கு விண்ணப்பிக்க, நீங்கள் பின்வரும் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்:
- செயலில் உள்ள இணையதளம் ஒன்றை நீங்கள் சொந்தமாக வைத்திருக்க வேண்டும் மற்றும் நடத்த வேண்டும்
- உங்களுக்கென ஒரு பார்வையாளர்கள் குழு இருக்க வேண்டும்
- ஆன்லைன் படிப்புகள், வலைப்பதிவு இடுகைகள், வீடியோக்கள் அல்லது வழிகாட்டிகள் போன்ற அசல் உள்ளடக்கங்களை நீங்கள் உருவாக்க வேண்டும்
- வணிகம், தொழில்முனைவு, Shopify அல்லது பிற மின்வணிகத் தளங்கள் ஆகியவற்றில் உங்களுக்கு அனுபவம் இருக்க வேண்டும்
- Shopify Affiliate Marketing Program விதிமுறைகளை நீங்கள் படித்திருக்க வேண்டும்
இந்தப் பக்கத்தில்
- Impact என்றால் என்ன?
- எனது விண்ணப்பம் ஏற்கப்பட்டதா என்பதை நான் எவ்வாறு அறிவது?
- பரிந்துரைகள் எவ்வாறு தடமறியப்படுகின்றன?
- ஓர் அஃபிலியேட்டாக என்னால் எவ்வளவு சம்பாதிக்க முடியும்?
- எனக்கான பேமெண்ட்டை நான் எவ்வாறு பெறுவது?
- நான் பரிந்துரைக்கும் வணிகர்கள் குறித்த என்ன தகவலை என்னால் தடமறிய முடியும்?
- Shopify-இன் பிராண்ட் வழிகாட்டுதல்கள் யாவை?
Impact என்றால் என்ன?
Impact என்பது Shopify Affiliate Program-ஐ வழங்கும், நம்பகமான மூன்றாம் தரப்பு அஃபிலியேட் தடமறிதல் தளமாகும். Impact தளமானது Shopify அஃபிலியேட்டுகளுக்கு மூன்றாம் தரப்புத் தடமறிதல், நிகழ்நேர அறிக்கையிடல் மற்றும் மாதாந்திரக் கமிஷன் பேமெண்ட்டுகளை வழங்குகிறது.
Impact தளத்தை எவ்வாறு பயன்படுத்துவது, அறிக்கைகளை எவ்வாறு உருவாக்குவது, கிரியேட்டிவ் அசெட்களை எப்படிக் கண்டறிவது மற்றும் பரிந்துரை இணைப்புகளை எவ்வாறு உருவாக்குவது என்பதை அறிந்துகொள்ள, Growth Center-இல் உள்ள Introduction to Impact என்பதைப் பார்க்கவும்.
எனது விண்ணப்பம் ஏற்கப்பட்டதா என்பதை நான் எவ்வாறு அறிவது?
ஒவ்வொரு விண்ணப்பத்தையும் Shopify கவனமாக மதிப்பாய்வு செய்கிறது. உங்கள் விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டால், உங்கள் விண்ணப்ப ஏற்பை உறுதிப்படுத்தும் மின்னஞ்சலையும், தொடங்குவதற்கான அடுத்த படிகள் குறித்த மின்னஞ்சலையும் பெறுவீர்கள். பெரும்பாலான சந்தர்ப்பங்களில், Shopify Affiliate Program-க்கான விண்ணப்பங்கள் 5 வணிக நாட்களுக்குள் செயலாக்கப்படும்.
அதிக அளவிலான விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்படுவதால், நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்கள் குறித்த கருத்துகளை எங்களால் வழங்க இயலாது.
பரிந்துரைகள் எவ்வாறு தடமறியப்படுகின்றன?
நீங்கள் Shopify Affiliate Program-க்கு ஏற்கப்பட்டவுடன், Impact தளத்தில் உள்நுழைந்து உங்களின் பரிந்துரை இணைப்பை உருவாக்குமாறு கேட்கப்படுவீர்கள். உங்களின் பார்வையாளர்களை Shopify லேண்டிங் பக்கத்திற்கு வழிநடத்தவும், ஒவ்வொரு தகுதிவாய்ந்த பரிந்துரைக்கும் கமிஷனைப் பெறவும் உங்கள் பரிந்துரை இணைப்பைப் பயன்படுத்தவும்.
ஓர் அஃபிலியேட்டாக என்னால் எவ்வளவு சம்பாதிக்க முடியும்?
Shopify அஃபிலியேட்டுகள் பரிந்துரைகள் அடிப்படையில் பணமீட்டுகிறார்கள். நீங்கள் பரிந்துரைக்கும் வணிகர்களின் இடத்தைப் பொறுத்து வருமானம் மாறுபடும். மேலும் அறிய, Shopify அஃபிலியேட் வருமானங்கள் என்பதைப் பார்க்கவும்.
எனக்கான பேமெண்ட்டை நான் எவ்வாறு பெறுவது?
பேமெண்ட்டுகளை வழங்க Shopify Affiliate Program ஆனது Impact-ஐப் பயன்படுத்துகிறது. உங்கள் கணக்கு இருப்பைப் பெறுவதற்கு முன்பாக, Impact கணக்கில் குறைந்தபட்சமாக $10 USD (அல்லது உங்கள் உள்ளூர் நாணயத்தில் இதற்குத் தோராயமான நிகரான தொகை) இருப்பு இருக்க வேண்டும். நீங்கள் குறைந்தபட்ச இருப்புத் தொகையை அடைந்தவுடன், உங்கள் கணக்கு இருப்பைப் பெற்று அதை உங்களின் வங்கிக் கணக்கிற்கோ PayPal கணக்கிற்கோ அனுப்பலாம். தங்கள் இருப்பு ஒரு குறிப்பிட்ட தொகையை எட்டும்போது அல்லது இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை பேமெண்ட்டைப் பெற அஃபிலியேட்டுகள் தேர்வுசெய்யலாம்.
நான் பரிந்துரைக்கும் வணிகர்கள் குறித்த என்ன தகவலை என்னால் தடமறிய முடியும்?
பல்வேறு தரவுப் புள்ளிகளின் அடிப்படையில், கூட்டாளர்கள் தங்களின் செயல்திறனைத் தடமறிய Impact அனுமதிக்கிறது. கிடைக்கும் அனைத்து அறிக்கைகளையும் காண, உங்கள் Impact கணக்கில் உள்நுழைந்து, மேற்புறத்தில் உள்ள வழிசெலுத்தல் பட்டியில் இருந்து அறிக்கைகள் என்பதைத் தேர்ந்தெடுத்து, பிறகு அனைத்து அறிக்கைகளும் என்பதைக் கிளிக் செய்யவும்.
Shopify-இன் பிராண்ட் வழிகாட்டுதல்கள் யாவை?
Shopify-இன் பிராண்ட் வழிகாட்டுதல்களைப் பார்த்து, நீங்கள் பிராண்டிங் வழிகாட்டுதல்களைச் சரியாகப் பயன்படுத்துகிறீர்களா என்பதை உறுதிசெய்துகொள்ளவும். எங்கள் பிராண்ட் அசெட்களைப் பயன்படுத்துவதன் மூலம், Shopify-இன் வர்த்தக முத்திரைப் பயன்பாட்டு வழிகாட்டுதல்களை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்கள் என்பதையும், இந்த வழிகாட்டுதல்களை மீறுவது உங்கள் Impact கணக்கு வாயிலாக Shopify உடனான உங்கள் ஒப்பந்தம் முடிவுறுத்தப்படுவதற்கு வழிவகுக்கும் என்பதைப் புரிந்துகொள்கிறீர்கள் என்பதையும் வெளிப்படுத்துகிறீர்கள்.