Sidekick

வழிகாட்டுதலைப் பெறவும், சிக்கலான, தொழில்நுட்பப் பணிகளை அன்றாட மொழியில் முடிக்கவும், Shopify-இன் AI-ஆல் இயக்கப்படும் வணிக உதவியாளரான Sidekick-ஐ நீங்கள் பயன்படுத்தலாம். Sidekick உங்கள் ஸ்டோரின் தரவுடன் இணைந்து செயல்படுவதோடு, மாற்றங்களைப் பயன்படுத்துவதற்கு முன்பு அவற்றை உங்கள் மதிப்பாய்வுக்காகக் காண்பிக்கும்.

முன்பு Pulse என அழைக்கப்பட்ட Sidekick பரிந்துரைகளையும் Shopify முகப்பில் Sidekick காட்ட முடியும்.

Sidekick எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் புரிந்துகொள்ளுதல்

பல படிகளைக் கொண்ட பணிகளுக்கு, Sidekick அந்தப் படிகளைத் திட்டமிட்டு அதன் பின்பு அவற்றைச் செயல்படுத்துகிறது. நீங்கள் அரட்டையை மூடிவிட்டாலோ அல்லது வேறு பக்கத்திற்குச் சென்றாலோ, அதிக நேரமெடுக்கும் பணிகள் பின்புலத்தில் தொடர்ந்து நடைபெறும், மேலும் அவை மதிப்பாய்வுக்குத் தயாரானதும் Sidekick உங்களுக்குத் தெரிவிக்கும்.

Sidekick பின்வரும் திறன்களையும் கொண்டுள்ளது:

  • பணிகளைத் தானியங்குபடுத்துதல்: உங்களுக்காகத் திரும்பத் திரும்பச் செய்யப்படும் வேலைகளைச் செய்யும் Shopify Flow பணிப்பாய்வுகளை Sidekick மூலம் உருவாக்க முடியும்.
  • குறியீடு மூலம் கணக்கிடுதல்: உங்கள் ஸ்டோர் தரவைக் கணிக்க, ஒப்பிட அல்லது சுருக்கமாக வழங்க, Sidekick அதன் சொந்தக் குறியீட்டை எழுதி இயக்க முடியும்.
  • நீங்கள் கற்றுக்கொடுப்பதை நினைவில் கொள்ளுதல்: திறன்களாக நீங்கள் சேமிக்கின்ற வழிமுறைகளை Sidekick பின்பற்றுவதோடு உங்கள் விருப்பங்களையும் கற்றுக்கொள்கிறது, எனவே ஒரே பணியை நீங்கள் மீண்டும் விளக்க வேண்டியதில்லை.
  • இணையத்தில் தேடுதல்: சந்தைப் போக்குகள், போட்டியாளர்கள் அல்லது விதிமுறைகள் போன்றவை குறித்த சமீபத்திய தகவல்களை Shopify-க்கு வெளியே பொதுவில் கிடைக்கும் ஆதாரங்களில் Sidekick இணையம் வழியாகத் தேட முடியும். அது பயன்படுத்தும் ஆதாரங்களையும் மேற்கோள் காட்டும்.

Sidekick உடன் உரையாடலைத் தொடங்குதல்

டெஸ்க்டாப்பில் உள்ள உங்கள் Shopify நிர்வாகியில் அல்லது Shopify செயலியில் எந்தப் பக்கத்திலிருந்தும் நீங்கள் Sidekick உடன் அரட்டையடிக்கலாம் அல்லது குரல் பயன்முறை மற்றும் திரைப் பகிர்வைப் பயன்படுத்தலாம்.

உதவி பெறுதல் மற்றும் உள்ளடக்கத்தை உருவாக்குதல்

ஆர்டர்களைத் திருத்துவது போன்ற பணிகளைக் கையாளவும், தயாரிப்பு விளக்கங்கள் மற்றும் படங்கள் போன்ற உள்ளடக்கத்தை உருவாக்கவும் Sidekick-ஐ நீங்கள் கேட்கலாம். Sidekick மூலமாகத் தனிப்பயன் செயலிகளையும் உருவாக்க முடியும்.

இந்தப் பிரிவில்