மெட்டாஆப்ஜெக்ட்டுகள்
உங்கள் தரவு பல புலங்கள் மூலம் சிறப்பாகக் குறிப்பிடப்படும் எனில், பல புலங்களைக் கொண்ட ஒரு ஆப்ஜெக்டை உருவாக்க நீங்கள் மெட்டாஆப்ஜெக்ட்டைப் பயன்படுத்தலாம். உங்கள் மெட்டாஆப்ஜெக்ட்டை மெட்டாஃபீல்டுகள் மூலம் குறிப்பிடலாம் அல்லது தனியாகவும் பயன்படுத்தலாம்.
இப்பக்கத்தில்
மெட்டாஆப்ஜெக்ட்டுகளை ஏன் பயன்படுத்த வேண்டும்
உங்கள் ஸ்டோரில் மெட்டாஆப்ஜெக்ட்டுகளைப் பயன்படுத்துவதற்கான இந்த எடுத்துக்காட்டுகளைக் கவனியுங்கள்:
- உங்கள் தயாரிப்புகளின் முக்கிய அம்சங்களை முன்னிலைப்படுத்த நீங்கள் விரும்பினால், தயாரிப்பு முன்னிலைப்படுத்தல் எனப்படும் மெட்டாஆப்ஜெக்ட்டை உருவாக்கலாம். பின்னர் ஐகான், தலைப்பு மற்றும் விளக்கத்திற்கான ஃபீல்டுகளைச் சேர்த்து, உங்கள் தீமில் ஒவ்வொரு தயாரிப்புக்குமான தனித்துவமான சிறப்பம்சங்களைக் காட்டலாம்.
- நீங்கள் ஒரு அழகு மற்றும் சருமப் பராமரிப்பு ஸ்டோரை வைத்திருந்து, உங்களின் முன்னணி இன்ஃப்ளூயன்சர்கள் பற்றிய தகவல்களைப் பெற்று காட்ட விரும்பினால், இன்ஃப்ளூயன்சர் சுயவிவரம் எனப்படும் மெட்டாஆப்ஜெக்ட்டை நீங்கள் உருவாக்கலாம். பின்னர் தலைப்பு, படம், விளக்கம் மற்றும் சுயவிவர இணைப்பிற்கான ஃபீல்டுகளைச் சேர்த்து, ஒவ்வொரு இன்ஃப்ளூயன்சருக்கும் ஒரு உள்ளீட்டை உருவாக்கலாம். உங்கள் தீமில் இன்ஃப்ளூயன்சரின் சுயவிவர மெட்டாஆப்ஜெக்ட்டைக் காட்டலாம் அல்லது உங்கள் Shopify நிர்வாகியில் அதைப் பயன்படுத்தலாம்.
- உங்கள் தயாரிப்புகள் அல்லது கொள்கைகள் பற்றிய பொதுவான கேள்விகளுக்குப் பதிலளிக்க நீங்கள் விரும்பினால், FAQ எனப்படும் மெட்டாஆப்ஜெக்ட்டை உருவாக்கலாம். பின்னர் கேள்வி மற்றும் பதிலுக்கான ஃபீல்டுகளைச் சேர்த்து, அடிக்கடி கேட்கப்படும் ஒவ்வொரு கேள்விக்கும் ஒரு உள்ளீட்டை உருவாக்கி, அவற்றை உங்கள் தீமின் பிரத்யேகப் பிரிவில் காட்டலாம்.
- நீங்கள் வர்த்தகக் கண்காட்சிகள் அல்லது நேரலை நிகழ்வுகளில் பங்கேற்று, உங்கள் நிகழ்வு வரலாற்றைக் காட்ட விரும்பினால், நிகழ்வுத் தோற்றம் எனப்படும் மெட்டாஆப்ஜெக்ட்டை நீங்கள் உருவாக்கலாம். பின்னர் நிகழ்வின் பெயர், இடம், ஆண்டு மற்றும் விளக்கத்திற்கான ஃபீல்டுகளைச் சேர்த்து, ஒவ்வொரு நிகழ்விற்கும் ஒரு உள்ளீட்டை உருவாக்கலாம். உங்களுக்கு விரிவான அளவிலான அனுபவம் இருப்பதை வாடிக்கையாளர்களுக்கும் ஒருங்கிணைப்பாளர்களுக்கும் காட்ட, உங்கள் நிகழ்வு வரலாற்றை உங்கள் ஸ்டோர்ஃபிரண்டில் காட்டலாம்.
மெட்டாஆப்ஜெக்ட்டுகளை எப்படிப் பயன்படுத்துவது
Shopify நிர்வாகியிலிருந்து மெட்டாஆப்ஜெக்ட்டுகளில் சேமிக்கப்பட்டுள்ள தரவை நீங்கள் மீட்டெடுக்கலாம் மற்றும் திருத்தலாம். மெட்டாஆப்ஜெக்ட் API மூலம் செயலிகள் மெட்டாஆப்ஜெக்ட்டுகளை அணுக முடியும். Liquid-ஐப் பயன்படுத்தி தீம்களிலும் Storefront API மூலமாகவும் நீங்கள் மெட்டாஆப்ஜெக்ட்டுகளை அணுகலாம். மெட்டாஆப்ஜெக்ட் API பற்றி மேலும் அறிக.
மெட்டாஆப்ஜெக்ட்டுகளில் இரண்டு முக்கியக் கூறுகள் உள்ளன:
- வரையறை: ஆப்ஜெக்ட்டின் கட்டமைப்பை வரையறுக்கும் ஃபீல்டுகளின் குழு. இது உங்கள் Shopify நிர்வாகியில் உள்ள அமைப்புகள் > தனிப்பயன் தரவு என்பதில் நிர்வகிக்கப்படும்.
- உள்ளீடுகள்: மெட்டாஆப்ஜெக்ட்டிற்கான உள்ளடக்கம் அல்லது தரவு. உள்ளீடுகள் உங்கள் Shopify நிர்வாகியில் உள்ள உள்ளடக்கம் > மெட்டாஆப்ஜெக்ட்டுகள் என்பதில் உருவாக்கப்பட்டு நிர்வகிக்கப்படும்.
நீங்கள் ஒரு மெட்டா ஆப்ஜெக்ட் வரையறையை உருவாக்கும்போது, பின்வரும் தகவலைக் குறிப்பிடுவீர்கள்:
- பெயர்: உங்கள் Shopify நிர்வாகியில் உள்ள மெட்டாஆப்ஜெக்ட்டை அடையாளங்காணப் பயன்படுத்தப்படும் (எ.கா.
ஆசிரியர்கள்). - வகை: பெயரிலிருந்து தானாகவே உருவாக்கப்படும் மெட்டாஆப்ஜெக்ட்டிற்கான தனித்துவமான அடையாளங்காட்டி. சேமிப்பதற்கு முன்பு வகை அடையாளங்காட்டியை நீங்கள் திருத்தலாம்.
- ஃபீல்டுகள்: மெட்டாஆப்ஜெக்ட்டில் நீங்கள் சேமிக்க விரும்பும் உள்ளடக்கத்தை வரையறுக்கும்.
- ஒவ்வொரு ஃபீல்டிலும் ஒரு பெயர் (தேவை), விளக்கம் மற்றும் வகை ஆகியவை இருக்கும். உரை, கோப்பு அல்லது URL போன்ற தேடக்கூடிய வகைகளின் பட்டியல் மற்றும் முன்னமைவுகளிலிருந்து நீங்கள் ஃபீல்டு வகையைத் தேர்ந்தெடுப்பீர்கள்.
- விருப்பத்திற்குரியது: எழுத்து வரம்புகள், குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச மதிப்புகள் அல்லது முன்னமைக்கப்பட்ட மதிப்புகள் போன்ற சரிபார்ப்பு விதிகளை நீங்கள் சேர்க்கலாம்.
- காட்சிப் பெயர் என்பது ஒற்றை ஃபீல்டு பெயருக்கு ஒதுக்கப்பட்டு, தனிப்பட்ட மெட்டாஆப்ஜெக்ட் உள்ளீட்டை அடையாளங்காணப் பயன்படுத்தப்படும். காட்சிப் பெயர் ஒதுக்கப்பட்டுள்ள ஃபீல்டை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் மாற்றலாம். மெட்டாஆப்ஜெக்ட் உள்ளீட்டிலுள்ள முதல் உரை ஃபீல்டிற்குக் காட்சிப் பெயர் தானாகவே ஒதுக்கப்படும் அல்லது மெட்டா ஆப்ஜெக்ட் வரையறையில் உரை ஃபீல்டுகள் எதுவும் இல்லை எனில், தானாகவே உருவாக்கப்படும்.
- எடுத்துக்காட்டாக, நீங்கள் உரைக்கான ஃபீல்டைச் சேர்த்து அதைக் காட்சிப் பெயராகக் குறிப்பிடலாம். அத்துடன், படத்திற்கான ஃபீல்டையும் நிறத்திற்கான ஃபீல்டையும் சேர்க்கலாம்.
- விருப்பங்கள்: மெட்டாஆப்ஜெக்ட் எங்குப் பயன்படுத்தக் கிடைக்கும் என்பது. தனிப்பயன் தரவிற்கான விருப்பங்கள் பற்றி மேலும் அறிக.
உங்களின் மெட்டா ஆப்ஜெக்ட் வரையறையிலுள்ள ஃபீல்டுகளே உங்கள் மெட்டாஆப்ஜெக்ட் உள்ளீடுகளிலுள்ள ஃபீல்டுகளைத் தீர்மானிக்கும். எடுத்துக்காட்டாக, அம்பாசிடர் திட்டச் சுயவிவரங்களுக்காகப் பெயர், வாழ்க்கை வரலாறு, படம் ஆகியவற்றுக்கான ஃபீல்டுகளுடன் நீங்கள் ஒரு மெட்டாஆப்ஜெக்ட்டை உருவாக்கினால், பெயர் மற்றும் வாழ்க்கை வரலாற்றை உள்ளிடுவதற்கும் படத்தைப் பதிவேற்றுவதற்கும் உங்கள் மெட்டாஆப்ஜெக்ட் உள்ளீடுகளில் ஒரு ஃபீல்டு இருக்கும். இந்த எடுத்துக்காட்டிலுள்ள ஒவ்வொரு உள்ளீடும் ஒற்றை அம்பாசிடர் திட்டச் சுயவிவரமாக இருக்கும்.
Shopify-இன் நிலையான தயாரிப்பு வகைப்பாடு மற்றும் நிலையான வகைகள் மெட்டாஆப்ஜெக்ட்டுகளைப் பயன்படுத்துகின்றன. நீங்கள் ஒரு தயாரிப்பில் தயாரிப்பு வகையைச் சேர்க்கும்போது, அந்தத் தயாரிப்புக்குக் குறிப்பிட்ட வகை மெட்டாஃபீல்டுகளை நீங்கள் சேர்க்கலாம். ஒவ்வொரு வகை மெட்டாஃபீல்டும் மெட்டா ஆப்ஜெக்ட் வரையறைகளுடன் உருவாக்கப்பட்ட இயல்புநிலை உள்ளீடுகளைக் கொண்டிருக்கும். எடுத்துக்காட்டாக, நீங்கள் ஆடைகள் & துணைக் கருவிகள் > உடைகள் > மேலாடைகள் > சட்டைகள் போன்ற தயாரிப்பு வகையைச் சேர்த்தால், அளவு, கழுத்து அமைப்பு, கைநீள வகை, மேலாடை நீள வகை, வயதுக் குழு, துணி, இலக்குப் பாலினம், ஆடை அம்சங்கள் மற்றும் நிறம் ஆகியவற்றிற்கான வகை மெட்டாஃபீல்டுகளை நீங்கள் சேர்க்கலாம்.