Shopify Scripts மற்றும் Script Editor செயலி
Shopify ஸ்கிரிப்டுகள் என்பது வாடிக்கையாளர்களின் கார்ட்டிலும் செக்அவுட்டிலும் அவர்களுக்குத் தனிப்பயனாக்கப்பட்ட அனுபவங்களை உருவாக்க உதவும் சிறிய குறியீட்டுத் தொகுப்புகளாகும்.
நீங்கள் ஒரு ஸ்கிரிப்ட்டை உருவாக்கும்போதோ திருத்தும்போதோ, அது உங்கள் ஆன்லைன் ஸ்டோரில் மட்டும் இயங்க வேண்டுமா அல்லது உங்கள் ஆன்லைன் ஸ்டோர் மற்றும் பின்வரும் செயலிகளிலும் இயங்க வேண்டுமா என்பதைத் தேர்வுசெய்யலாம்:
- Storefront API, JavaScript Buy SDK, Mobile Buy SDKs (Android மற்றும் iOS) ஆகியவற்றைக் கொண்டு உருவாக்கப்பட்ட தனிப்பயன் செயலிகள்
- செக்அவுட்டுகளை உருவாக்கும் தனிப்பயன் செயலிகள்
- Tapcart, Plobal Apps மற்றும் Vajro மொபைல் செயலி பில்டர்கள்
ஸ்கிரிப்டுகள் வேலை செய்வதற்கு, இணையதளத்தில் உள்ளமைக்கப்பட்ட ஷாப்பிங் கார்ட் செயல்பாடு இருக்க வேண்டும், எனவே Buy பொத்தான் அல்லது Facebook விற்பனைச் சேனலுடன் ஸ்கிரிப்டுகளைப் பயன்படுத்த முடியாது.
கார்ட்டில் உள்ள உருப்படிகள் மற்றும் அதன் பிற பண்புகளின் அடிப்படையில் கார்ட்டுக்குப் பயன்படுத்தப்படும் தள்ளுபடிகளையும் உருவாக்க, ஸ்கிரிப்டுகளைப் பயன்படுத்தலாம். மேலும் உங்கள் வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கும் ஷிப்பிங் மற்றும் கட்டண முறைகளைத் தனிப்பயனாக்கவும் ஸ்கிரிப்டுகளைப் பயன்படுத்தலாம்.
Ruby நிரலாக்க மொழியின் வரம்பிற்குட்பட்ட பதிப்பைப் பயன்படுத்தும் Shopify Scripts API மூலம் நீங்கள் ஸ்கிரிப்டுகளை எழுதலாம். Script Editor செயலியைப் பயன்படுத்தி நீங்கள் ஸ்கிரிப்டுகளை எழுதலாம், திருத்தலாம், நிர்வகிக்கலாம் மற்றும் வெளியிடலாம். ஸ்கிரிப்டுகளை எழுத உதவும் வார்ப்புருக்களையும் அவற்றைச் சோதிக்க உதவும் ஒரு debugger-ஐயும் Script Editor செயலி வழங்குகிறது.
ஸ்கிரிப்டை வெளியிட்ட பிறகு, உங்கள் ஸ்கிரிப்டுகள் செய்யும் மாற்றங்களுக்கு ஏற்ப உங்கள் ஆன்லைன் ஸ்டோர் செயல்படும் வகையில் உங்கள் Liquid டெம்ப்ளேட் கோப்புகளைப் புதுப்பிக்கலாம்.
இந்தப் பக்கத்தில்
ஸ்கிரிப்ட் எடுத்துக்காட்டுகள்
ஸ்கிரிப்டுகள் மூலம் நீங்கள் செய்யக்கூடிய தள்ளுபடிகள் மற்றும் தனிப்பயனாக்கங்கள் குறித்த எடுத்துக்காட்டுகள் பின்வரும் பட்டியலில் உள்ளன:
- சதவீதம் (%) அல்லது நிலையான ($) தள்ளுபடிகளை அல்லது இரண்டையும் சேர்த்தோ வழங்குவதற்குக் குறிப்பிட்ட குறிச்சொற்கள் கொண்ட தயாரிப்புகளுக்குத் தள்ளுபடி அளித்தல்
- எளிய அல்லது சிக்கலான தர்க்கத்துடன் விளம்பரங்களை இயக்குதல் (ஒன்றை வாங்கினால் மற்றொன்று இலவசம் (BOGO); இரண்டை வாங்கினால் 10% தள்ளுபடி, நான்கை வாங்கினால் 20% தள்ளுபடி)
- அளவு அடிப்படையிலான விலைக் குறைப்புகளுடன் மாறும் விலை நிர்ணயத்தை வழங்குதல்
- ஷிப்பிங் விருப்பங்கள் மற்றும் விலைகளை மாற்றியமைத்தல், மறைத்தல் அல்லது மறுவரிசைப்படுத்துதல்
- கட்டண நுழைவாயில் முறைகளை மாற்றியமைத்தல், மறைத்தல் அல்லது மறுவரிசைப்படுத்துதல்
நீங்கள் பின்வரும் வகையிலான ஸ்கிரிப்டுகளை உருவாக்கலாம்:
- வரிசை உருப்படி ஸ்கிரிப்டுகள்—இந்த ஸ்கிரிப்டுகள் கார்ட்டில் உள்ள வரிசை உருப்படிகளைப் பாதிக்கும், அத்துடன் விலைகளை மாற்றவும் தள்ளுபடிகளை வழங்கவும் இவற்றால் முடியும். உங்கள் கார்ட்டில் உருப்படி சேர்க்கப்படும்போதோ அகற்றப்படும்போதோ மாற்றப்படும்போதோ ஒவ்வொரு முறையும் இந்த ஸ்கிரிப்டுகள் இயங்கும்.
- ஷிப்பிங் ஸ்கிரிப்டுகள்—இந்த ஸ்கிரிப்டுகள் ஷிப்பிங்குடன் தொடர்புகொண்டு செயல்படும், அத்துடன் ஷிப்பிங் முறைகளை மாற்றவும் ஷிப்பிங் கட்டணங்களில் தள்ளுபடிகளை வழங்கவும் இவற்றால் முடியும். செக்அவுட்டின்போது உங்கள் வாடிக்கையாளர் ஷிப்பிங் விருப்பங்கள் பக்கத்தை அணுகும் ஒவ்வொரு முறையும் இந்த ஸ்கிரிப்டுகள் இயங்கும்.
- கட்டண ஸ்கிரிப்டுகள்—இந்த ஸ்கிரிப்டுகள் கட்டணங்களுடன் தொடர்புகொண்டு செயல்படும், அத்துடன் கட்டண நுழைவாயில்களை மறுபெயரிடவும், மறைக்கவும், மறுவரிசைப்படுத்தவும் இவற்றால் முடியும். செக்அவுட்டின்போது உங்கள் வாடிக்கையாளர் கட்டண முறைப் பக்கத்தை அணுகும் ஒவ்வொரு முறையும் இந்த ஸ்கிரிப்டுகள் இயங்கும். செக்அவுட்டிற்கு முன்பு உங்கள் வாடிக்கையாளருக்குக் காட்டப்படும் PayPal Express அல்லது Apple Pay போன்ற கட்டண நுழைவாயில்களுடன் கட்டண ஸ்கிரிப்டுகள் தொடர்புகொள்ளாது.
ஸ்கிரிப்ட் வார்ப்புருக்கள்
Script Editor செயலியில் பொதுவான ஸ்கிரிப்ட் வார்ப்புருக்கள் உள்ளன. நீங்கள் ஒரு ஸ்கிரிப்டை உருவாக்கும்போது, ஒரு வார்ப்புருவைத் தேர்ந்தெடுத்து உங்கள் ஸ்டோரின் தேவைகளுக்கு ஏற்ப அதைத் திருத்திக் கொள்ளலாம். நீங்கள் தனிப்பயனாக்கக்கூடிய வார்ப்புருக்களின் எடுத்துக்காட்டுகள் பின்வரும் பட்டியலில் இடம்பெற்றுள்ளன:
- தயாரிப்பில் சதவீத (%) தள்ளுபடி
- தயாரிப்பில் தொகை ($) தள்ளுபடி
- தயாரிப்பில் சதவீதம் (%) மற்றும் தொகை ($) தள்ளுபடி
- மொத்தத் தள்ளுபடிகள்
- ஒன்றை வாங்கினால் ஒன்று இலவசம் (BOGO)
- ஷிப்பிங் கட்டண விலையை மாற்றுதல்
- ஷிப்பிங் கட்டணத்தின் பெயரை மாற்றுதல்
- ஷிப்பிங் கட்டணங்களை மறைத்தல்
- ஷிப்பிங் கட்டணங்களை மறுவரிசைப்படுத்துதல்
- கட்டண நுழைவாயிலின் பெயரை மாற்றுதல்
- கட்டண நுழைவாயிலை மறைத்தல்
- கட்டண நுழைவாயில்களை மறுவரிசைப்படுத்துதல்