Shopify ஸ்கிரிப்டுகளின் தேவைகள் மற்றும் வரம்புகள்
பாதுகாப்பை மேம்படுத்தவும், ஒரே நேரத்தில் எத்தனை வாடிக்கையாளர்கள் உங்கள் ஸ்டோரைப் பயன்படுத்தினாலும் ஸ்கிரிப்டுகள் இயங்குவதை உறுதிசெய்யவும் சில Shopify ஸ்கிரிப்டுகளின் வரம்புகள் உள்ளன. உங்கள் Shopify ஸ்டோருக்கான ஸ்கிரிப்டுகளை நீங்கள் உருவாக்குகிறீர்கள் என்றால், பின்வரும் கட்டுப்பாடுகளை நினைவில் கொள்ளுங்கள்.
இந்தப் பக்கத்தில்
- ஆன்லைன் ஸ்டோர் மற்றும் Storefront API
- வெளியிடப்பட்ட ஸ்கிரிப்டுகள்
- அதிகபட்ச Shopify ஸ்கிரிப்டுகளின் எண்ணிக்கை
- வரைவு ஆர்டர்கள்
- மெட்டாஃபீல்டுகள்
- கார்ட்/செக்அவுட் பண்புக்கூறுகள்
- தள்ளுபடிக் குறியீடுகள்
- வரிசை உருப்படிகள்
- ஷிப்பிங் கட்டணங்கள்
- பல நாணயம்
- வழக்கமான வெளிப்பாடுகள்
- தீம்கள்
- வளங்கள்
- உள்ளீடு/வெளியீடு
- நேரம் மற்றும் சீரற்ற தன்மை
- ஸ்கிரிப்ட் எழுத்து வரம்பு
- சந்தா ஆர்டர்கள்
- விரைவான செக்அவுட்கள்
- Shopify விற்பனைப் புள்ளி (POS)
- கட்டண நுழைவாயில்களின் பெயரை மாற்றுதல்
- செக்அவுட்டில் பிரித்து அனுப்புதல்
ஆன்லைன் ஸ்டோர் மற்றும் Storefront API
நீங்கள் ஒரு ஸ்கிரிப்டை உருவாக்கும்போது அல்லது திருத்தும்போது, அது உங்கள் ஆன்லைன் ஸ்டோரில் மட்டும் இயங்குவதா அல்லது ஆன்லைன் ஸ்டோருடன்பின்வரும் செயலிகளிலும் சேர்த்து இயங்குவதா என்பதைத் தேர்ந்தெடுக்கலாம்:
- Storefront API, JavaScript Buy SDK அல்லது Mobile Buy SDKs (Android மற்றும் iOS) மூலம் உருவாக்கப்பட்ட தனிப்பயன் செயலிகள்
- செக்அவுட்களை உருவாக்கும் தனிப்பயன் செயலிகள்
- Tapcart மற்றும் Plobal Apps மொபைல் செயலி பில்டர்கள்
ஸ்கிரிப்டுகள் செயல்பட, உங்கள் இணையதளத்தில் உள்கட்டமைக்கப்பட்ட ஷாப்பிங் கார்ட் செயல்பாடு இருக்க வேண்டும், எனவே நீங்கள் வாங்கு பொத்தான்கள் அல்லது Facebook and Instagram by Meta விற்பனைச் சேனலுடன் ஸ்கிரிப்டுகளைப் பயன்படுத்த முடியாது.
வெளியிடப்பட்ட ஸ்கிரிப்டுகள்
ஒரு நேரத்தில் ஒரு ஸ்கிரிப்ட் வகைக்கு ஒரு ஸ்கிரிப்டை மட்டுமே வெளியிட முடியும். எடுத்துக்காட்டாக, நீங்கள் ஒரு வரிசை உருப்படிகள் ஸ்கிரிப்ட் மற்றும் ஒரு ஷிப்பிங் கட்டணங்கள் ஸ்கிரிப்டை வெளியிடலாம், ஆனால் ஒரே நேரத்தில் இரண்டு வரிசை உருப்படிகள் ஸ்கிரிப்டுகளை வெளியிட முடியாது.
அதிகபட்ச Shopify ஸ்கிரிப்டுகளின் எண்ணிக்கை
நீங்கள் 200 Shopify ஸ்கிரிப்டுகள் வரை உருவாக்கலாம்.
வரைவு ஆர்டர்கள்
வரிசை உருப்படிகளின் ஸ்கிரிப்டுகள், ஷிப்பிங் கட்டணங்களின் ஸ்கிரிப்டுகள் மற்றும் பேமெண்ட்களின் ஸ்கிரிப்டுகள் வரைவு ஆர்டர்கள் அல்லது வரைவு ஆர்டர்களின் செக்அவுட்டுடன் செயல்படாது.
மெட்டாஃபீல்டுகள்
Shopify ஸ்கிரிப்டுகளால் மெட்டாஃபீல்டுகளை அணுக முடியாது.
கார்ட்/செக்அவுட் பண்புக்கூறுகள்
Shopify ஸ்கிரிப்டுகளால் Shopify Liquid கார்ட் பண்புக்கூறுகளை அணுக முடியாது. உங்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து கூடுதல் தகவல்களைச் சேகரிக்க இந்தப் பண்புக்கூறுகளை உங்களின் கார்ட் பக்கங்களில் சேர்க்கலாம், ஆனால் அவற்றைப் பயன்படுத்தும் ஸ்கிரிப்ட் எதையும் உங்களால் உருவாக்க முடியாது.
தள்ளுபடிக் குறியீடுகள்
தள்ளுபடிக் குறியீடு பயன்படுத்தப்பட்டுள்ளதா, தள்ளுபடித் தொகை மற்றும் நிலையான தொகை, சதவீதம் அல்லது ஷிப்பிங் போன்ற தள்ளுபடி வகை ஆகியவற்றை ஸ்கிரிப்டுகளால் அணுக முடியும். தள்ளுபடிக் குறியீடு எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதை ஸ்கிரிப்டுகளால் அணுக முடியாது, எடுத்துக்காட்டாக இது கார்ட்-சார்ந்ததா அல்லது வரிசை உருப்படி சார்ந்ததா போன்றவற்றை அறிய முடியாது. அதாவது தள்ளுபடிக்குப் பிந்தைய மொத்தத் தொகைகள் அல்லது தானியங்கு தள்ளுபடிகளுக்கு ஸ்கிரிப்டுகளால் அணுகல் பெற முடியாது.
கார்ட்டில் பயன்படுத்தப்பட்டுள்ள தள்ளுபதிகளை அணுகும் வரிசை உருப்படி மற்றும் ஷிப்பிங் ஸ்கிரிப்டுகள், தள்ளுபடி சேர்க்கைகளுடன் இணக்கமாகச் செயல்படாது. .discount_code முறையால் ஒற்றைத் தள்ளுபடிக் குறியீட்டை மட்டுமே வழங்க முடியும். தள்ளுபடி சேர்க்கைகளைப் பயன்படுத்தி பல தள்ளுபடிக் குறியீடுகளை உள்ளடக்கிய கார்ட்டுகளுக்கு ஆதரவளிக்கப்படாது.
வரிசை உருப்படிகள்
கார்ட்டில் உருப்படிகளைச் சேர்க்கவோ உருப்படியின் விலையை அதிகரிக்கவோ ஸ்கிரிப்டுகளால் முடியாது.
ஷிப்பிங் கட்டணங்கள்
ஸ்கிரிப்டுகளால் ஷிப்பிங் கட்டணத்தின் விலையை அதிகரிக்க முடியாது.
பல நாணயம்
உங்கள் ஸ்கிரிப்டுகள் எதிர்பார்த்தபடி பல நாணயத்துடன் வேலை செய்யாமல் போகலாம். உங்கள் ஸ்டோரின் முதன்மை நாணயத்தைத் தவிர வேறு எந்த நாணயத்திலும் உள்ள கார்ட்டுகள் அல்லது செக்அவுட்டுகளுக்கு உங்கள் ஸ்கிரிப்டுகள் வேலை செய்வதை உறுதிசெய்ய, நீங்கள் உங்கள் ஸ்கிரிப்டுகளை Shopify Functions என்பதற்கு இடமாற்ற வேண்டும்.
வழக்கமான கோவைகள்
வழக்கமான கோவை பொருத்துதல் ஆதரிக்கப்படாது. நீங்கள் வரிசை உருப்படி ஸ்கிரிப்டை உருவாக்குகிறீர்கள் எனில், மாற்றுவழியாகப் பின்வரும் முறைகளில் ஒன்றைப் பயன்படுத்தலாம்:
splitமுறைstart_withமற்றும்end_withமுறைகள்includeமுறை
தீம்கள்
உங்கள் ஸ்கிரிப்டுகளை ஆதரிக்கவும் உங்கள் வாடிக்கையாளர்கள் குழப்பமடைவதைத் தவிர்க்கவும், உங்கள் Liquid தீமைப் புதுப்பிக்க வேண்டியிருக்கலாம். உதாரணமாக, அனைத்துத் தீம்களும் கார்ட்டில் வரிசை உருப்படித் தள்ளுபடிகளைக் காட்டாது. இது உங்கள் நிலையாக இருந்தால், கார்ட்டில் வரிசை உருப்படித் தள்ளுபடிகளைக் காட்ட உங்கள் தீமைத் திருத்த வேண்டும். உங்கள் Liquid தீம்களில் நீங்கள் செய்யக்கூடிய மாற்றங்களின் வகைகள் குறித்து மேலும் அறிக.
வளங்கள்
ஒரு ஸ்கிரிப்டிற்குக் கிடைக்கும் CPU மற்றும் நினைவகத்தின் அளவு வரம்பிற்குட்பட்டது. ஸ்கிரிப்டிற்காக ஒதுக்கப்படும் வளங்களானவை, கார்ட்டின் அளவு மற்றும் ஸ்கிரிப்டுக்குத் தேவைப்படும் கணக்கீடுகளின் அளவைப் பொறுத்தது. உங்கள் ஸ்கிரிப்ட் திட்டமிட்டபடி செயல்படுவதை இந்த வள வரம்புகள் தடுக்காமல் இருப்பதை உறுதிசெய்ய, Shopify அவற்றை கவனமாகக் கண்காணிக்கிறது.
நீங்கள் ஒரு ஸ்கிரிப்டைச் சோதிக்கும்போது, ஸ்கிரிப்ட் பயன்படுத்தும் ஒதுக்கப்பட்ட வளங்களின் சதவீதத்தை Script Editor கன்சோல் அச்சிடும்.
உள்ளீடு/வெளியீடு
சில விதிவிலக்குகளைத் தவிர, Shopify ஸ்கிரிப்டுகளால் உள்ளீடு/வெளியீட்டைச் செய்ய முடியாது. அதாவது ஸ்கிரிப்டுகளால் இணையக் கோரிக்கைகள் அல்லது தரவுத்தள அழைப்புகளைச் செயல்படுத்த முடியாது மற்றும் பயனரிடமிருந்து உள்ளீட்டைப் பெற முடியாது என்பதாகும்.
Script Editor செயலியில் உள்ள கன்சோலில் உரை அச்சிடுவதற்கு puts முறையைப் பயன்படுத்தலாம்.
நேரம் மற்றும் சீரற்ற தன்மை
ஸ்கிரிப்டுகள் சீரற்ற அல்லது நேரம் சார்ந்த கணக்கீடுகளை உட்படுத்த முடியாது. Time ஆப்ஜெக்ட் மற்றும் rand முறையை Shopify ஸ்கிரிப்டுகளால் அணுக முடியாது.
கார்ட்டின் மொத்தம் மீண்டும் கணக்கிடப்படும் ஒவ்வொரு முறையும் ஸ்கிரிப்டுகள் இயங்குவதால், வாடிக்கையாளர் கார்ட்டை அடிக்கடி மாற்றினால், நேரத்தையோ அல்லது சீரற்ற எண் உருவாக்கத்தையோ அடிப்படையாகக் கொண்ட ஸ்கிரிப்டுகள் கணிக்க முடியாத அல்லது குழப்பமான முடிவுகளைத் தரக்கூடும். இருப்பினும், Launchpad செயலியைப் பயன்படுத்தி நிகழ்வுகளின்போது ஸ்கிரிப்டுகளை இயங்குமாறு நீங்கள் திட்டமிடலாம்.
ஸ்கிரிப்ட் எழுத்து வரம்பு
நீங்கள் அதிகபட்சமாக 40,960 எழுத்துகள் வரை ஸ்கிரிப்டுகளை உருவாக்கலாம்.
சந்தா ஆர்டர்கள்
உங்கள் வரிசை உருப்படி மற்றும் ஷிப்பிங் ஸ்கிரிப்டுகள், ஒரு சந்தாத் தயாரிப்புக்குத் தள்ளுபடியை உருவாக்கினால், பின்வரும் பேமெண்ட்டுகளுக்குத் தள்ளுபடி பொருந்தும்:
- திட்டமிடப்பட்ட ஆர்டர்களுக்குப் பொருந்தாமல், டெலிவரிக்குப் பணம் செலுத்துதலின் முதல் பேமெண்ட்டுக்கு மட்டும்
- முன்கூட்டியே செலுத்திய சந்தா ஆர்டரின் முழுத் தொகைக்கு
சந்தாக்கள் மற்றும் ஸ்கிரிப்டுகள் குறித்து மேலும் அறிக.
விரைவான செக்அவுட்டுகள்
நீங்கள் விரைவான செக்அவுட்டுகளுடன் Shopify ஸ்கிரிப்டுகளைப் பயன்படுத்தும்போது, உங்கள் வாடிக்கையாளர் ஒரு விரைவான கட்டண முறையைத் தேர்ந்தெடுத்த பிறகு ஷிப்பிங் தள்ளுபடிகள் பயன்படுத்தப்படும். இதனால், ஆர்டர் விலையில் ஏற்படும் மாற்றங்கள் வாடிக்கையாளரின் சாதனம் அல்லது உலாவியில் காட்டப்படாது. வாடிக்கையாளர்கள் தங்கள் விரைவான செக்அவுட்டில் அசல் விலையைப் பார்க்கலாம், ஆனால் சரியான தள்ளுபடி செய்யப்பட்ட விலையே அவர்களிடம் வசூலிக்கப்படும்.
Shopify விற்பனைப் புள்ளி (POS)
Shopify விற்பனைப் புள்ளியுடன் (POS) Shopify ஸ்கிரிப்டுகள் வேலை செய்யாது.
கட்டண நுழைவாயில்களை மறுபெயரிடுதல்
நுழைவாயிலின் பெயராகப் படங்களையோ லோகோக்களையோ காட்டும் கட்டண நுழைவாயில்களை நீங்கள் மறுபெயரிட முடியாது. பெயர்களுக்கு அடுத்ததாக லோகோப் படங்களைக் கொண்ட கட்டண நுழைவாயில்களை மறுபெயரிட முடியும்.
செக்அவுட்டில் பிரித்து அனுப்புதல்
ஷிப்பிங் ஸ்கிரிப்டுகள் Shopify Checkout என்பதில் உள்ள பிரித்து அனுப்புதல் அம்சத்துடன் இணக்கமாக இல்லை. நீங்கள் ஷிப்பிங் ஸ்கிரிப்டுகளைப் பயன்படுத்திப் பிரித்து அனுப்புதலைச் செயல்படுத்தினால், செக்அவுட்டின் போது வாடிக்கையாளர்களுக்குப் பிரிக்கப்பட்ட ஷிப்மென்ட்கள் காட்டப்படாது.