Shopify நிர்வாகியில் செயல்பாட்டுப் பதிவுகள்

உங்கள் Shopify நிர்வாகியில் மாற்றங்களைத் தடமறியவும் பயனர் செயல்பாட்டைக் கண்காணிக்கவும் செயல்பாட்டுப் பதிவுகள் உதவுகின்றன. கடையின் உரிமையாளர்களும் பயனர்களும் மேற்கொண்ட சமீபத்திய செயல்களை ஸ்டோர் செயல்பாட்டுப் பதிவு உள்ளடக்கியிருக்கும். அதே சமயம், பல பயனர்கள் ஒரே நேரத்தில் ஒரே பக்கத்தைப் பார்க்கும்போது அல்லது திருத்தும்போது, பக்கச் செயல்பாட்டுக் பதிவு அதைக் காட்டும்.

ரத்துசெய்தல்கள், பணத்தைத் திரும்பப்பெறுதல்கள் மற்றும் மேனுவல் தள்ளுபடிகள் போன்ற Shopify POS-இல் மேற்கொள்ளப்பட்ட அதிக அபாயமுள்ள பதிவேட்டுச் செயல்களை மதிப்பாய்வு செய்ய, உங்கள் Shopify நிர்வாகியிலுள்ள Shopify POS-க்கான செயல்பாட்டுப் பதிவைப் பயன்படுத்தலாம்.

ஸ்டோர் செயல்பாட்டுப் பதிவு

உங்கள் Shopify நிர்வாகியில் கடையின் உரிமையாளர் அல்லது பயனர் மேற்கொண்ட சமீபத்திய செயல்பாடுகளின் தேதியையும் நேரத்தையும் ஸ்டோர் செயல்பாட்டுப் பதிவு காட்டுகிறது. ஒவ்வொரு நிகழ்விலும், அந்தச் செயலைச் செய்த நபர், செயலி அல்லது சேனலின் பெயர் இடம்பெறும்.

ஸ்டோர் செயல்பாட்டிற்கான சில எடுத்துக்காட்டுகளில் பின்வரும் செயல்கள் அடங்கலாம்:

  • தயாரிப்பை நீக்குதல்.
  • ஸ்டோர் அமைப்பை மாற்றுதல்.
  • ஒரு செயலிக்கு ஸ்டோர் அணுகலை வழங்குதல்.

ஸ்டோர் செயல்பாட்டுப் பதிவைப் பயன்படுத்தும்போது கவனிக்க வேண்டியவை

ஸ்டோர் செயல்பாட்டுப் பதிவைப் பயன்படுத்துவதற்கு முன், கவனிக்க வேண்டிய பின்வரும் விஷயங்களை மதிப்பாய்வு செய்யவும்:

  • ஸ்டோர் செயல்பாட்டுப் பதிவு பார்ப்பதற்கு மட்டுமேயானது. பட்டியலிடப்பட்டுள்ள தனிப்பட்ட நிகழ்வுகளை நீங்கள் விரிவாக்கவோ கிளிக் செய்யவோ முடியாது.
  • ஸ்டோர் செயல்பாட்டுப் பதிவிலிருந்து தகவலை ஏற்றுமதி செய்ய முடியாது.
  • ஸ்டோர் செயல்பாட்டுப் பதிவுப் பக்கத்தில் அதிகபட்சமாக 250 முடிவுகள் காட்டப்படலாம். அதிகபட்ச முடிவுகளின் எண்ணிக்கைக்கு உட்பட்ட முந்தைய செயல்பாடுகளை மட்டுமே இந்தப் பட்டியல் காட்டும்.
  • குறிப்பிட்ட நாள்களுக்கு முந்தைய Shopify நிர்வாகிச் செயல்பாடுகளைக் காட்ட ஸ்டோர் செயல்பாட்டுப் பதிவைப் பயன்படுத்த முடியாது.

ஸ்டோர் செயல்பாட்டுப் பதிவை அணுகுதல்

ஸ்டோர் செயல்பாட்டுப் பதிவை அணுக, பயனர்கள் முகப்பு மற்றும் ஸ்டோர் அமைப்புகள் > அமைப்புகளை நிர்வகி போன்ற ஸ்டோர் அனுமதிகளைக் கொண்டிருக்க வேண்டும்.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து அமைப்புகள் > பொது என்பதற்குச் செல்லவும்.

  2. வளங்கள் பிரிவில், ஸ்டோர் செயல்பாட்டுப் பதிவு என்பதைக் கிளிக் செய்யவும்.

செயல்பாட்டுப் பதிவு உள்ளீடுகளைப் புரிந்துகொள்ளுதல்

சில நேரங்களில் குறிப்பிட்ட பயனர் அல்லது செயலிக்குப் பதிலாக, செயல்பாட்டுப் பதிவானது ஒரு மாற்றத்தை மேற்கொண்டவராக Shopify ஐக் காட்டும். குறிப்பிட்ட சில சூழ்நிலைகளில் இது வழக்கமான ஒன்றுதான், இதற்காக அங்கீகரிக்கப்படாத அணுகல் நிகழ்ந்துள்ளது என்று பொருள் இல்லை.

மாற்றத்தை மேற்கொண்டவராக "Shopify" காட்டப்படுவதற்கான பொதுவான காரணங்கள்

உங்கள் செயல்பாட்டுப் பதிவில் மாற்றத்தை மேற்கொண்டவராக Shopify காட்டப்படக்கூடிய பொதுவான சூழ்நிலைகளைப் பின்வரும் அட்டவணை விளக்குகிறது:

செயல்பாட்டுப் பதிவில் "Shopify" காட்டப்படும் சூழ்நிலைகள்
சூழ்நிலைஎடுத்துக்காட்டுஏன் இவ்வாறு நிகழ்கிறது
சிஸ்டம் தானியக்கமாக்கல்ஆர்டர் நிலைப் புதுப்பிப்பு, சரக்கு இருப்பு ஒத்திசைவுமொத்தத் திருத்தங்கள் போன்ற நீங்கள் தொடங்கிய செயல்களைப் பின்னணிப் பணிகள் செயலாக்கும்
செயலி அல்லது சேனல் செயல்விற்பனைச் சேனலில் தயாரிப்பு வெளியிடப்பட்டதுமூன்றாம் தரப்புச் செயலிகள் அல்லது விற்பனைச் சேனல்கள் தரவைத் தானாகவே ஒத்திசைக்கும்
விற்பனைச் சேனல் செயல்பாடுகள்"ஆன்லைன் ஸ்டோர்" தீம் ஒன்றை மறைத்தது அல்லது வெளியிட்டதுதீம் எடிட்டர் அல்லது ஆன்லைன் ஸ்டோர் சேனல் மூலமாக எடுக்கப்பட்ட செயல்கள்
சந்தை மாற்றங்கள்ஆன்லைன் ஸ்டோரிலிருந்து தயாரிப்பு அகற்றப்பட்டதுஒரு சந்தையை முடக்குவது அல்லது நீக்குவது, அந்தச் சந்தையின் வெளியீட்டிலிருந்து தயாரிப்புகளை அகற்றிவிடும்
கட்டண வழங்குநர் புதுப்பிப்புகள்Shopify Payments முடக்கப்பட்டதுகணக்கு மதிப்பாய்வுகள் அல்லது இடமாற்றங்கள் போன்ற கட்டணக் கூட்டாளர்களின் பின்தளச் செயலாக்கங்கள்
பயனர் மேலாண்மைShopify பணியாளரை நீக்கியதுயார் அந்தச் செயலைச் செய்தார்கள் என்பதைக் காட்டுவதற்குப் பதிலாக, நிர்வாகி அல்லது POS செயலி மூலம் பணியாளர்கள் நீக்கப்படுவதானது "Shopify நீக்கியது" எனப் பதிவாகும்

பொதுவான செயல்பாட்டுப் பதிவு உள்ளீடுகளும் விளக்கங்களும்

பொதுவான செயல்பாட்டுப் பதிவு உள்ளீடுகள் மற்றும் அவற்றின் பொருளுக்கான பின்வரும் எடுத்துக்காட்டுகளை மதிப்பாய்வு செய்யவும்:

சேனல் ஒத்திசைவிலிருந்து தயாரிப்புப் புதுப்பிப்புகள்

நீங்கள் ஒரு புதிய விற்பனைச் சேனலைச் சேர்க்கும்போது, முன்புள்ள அனைத்துத் தயாரிப்புகளும் அந்தச் சேனலுக்குத் தானாகவே கிடைக்கும்படி செய்யப்படும். தயாரிப்புகள் சேனல்களில் வெளியிடப்பட்டதாகவோ அல்லது வெளியிடப்படாததாகவோ காட்டப்பட்டால், பின்வரும் காரணிகளைச் சரிபார்க்கவும்:

  • நீங்கள் சமீபத்தில் புதிய விற்பனைச் சேனல் அல்லது செயலியை நிறுவியுள்ளீர்களா
  • தனிப்பயன் செயலிக்காக Storefront API ஐ நீங்கள் செயல்படுத்தியுள்ளீர்களா
  • ஸ்டோர் அணுகலைக் கொண்ட வேறொரு பயனர் தயாரிப்புக் கிடைக்கும் தன்மையில் மாற்றங்களைச் செய்துள்ளாரா
"ஆன்லைன் ஸ்டோர்" எனத் தோன்றும் தீம் மாற்றங்கள்

தீம் செயல்பாடுகள் மாற்றத்தை மேற்கொண்டவராக "ஆன்லைன் ஸ்டோர்" என்பதைக் காட்டினால், தீம் எடிட்டர் அல்லது ஆன்லைன் ஸ்டோர் சேனல் மூலம் பயனர் ஒருவர் மாற்றங்களைச் செய்துள்ளார் என்று அர்த்தம். ஒரு பயனரால் அந்தச் செயல் தொடங்கப்பட்டிருந்தாலும், செயல்பாட்டுப் பதிவானது தனிநபருக்குப் பதிலாகச் சேனலின் பெயரைக் காட்டும்.

ஆன்லைன் ஸ்டோரிலிருந்து அகற்றப்பட்ட தயாரிப்புகள்

உங்கள் ஆன்லைன் ஸ்டோரிலிருந்து தயாரிப்புகள் அகற்றப்பட்டிருப்பதை நீங்கள் கவனித்தால், சமீபத்தில் நீங்கள் பின்வருவனவற்றைச் செய்தீர்களா எனச் சரிபார்க்கவும்:

  • சந்தையை முடக்கியது அல்லது நீக்கியது
  • ஷிப்பிங் அமைப்புகளில் மாற்றங்களைச் செய்தது
  • தயாரிப்பின் விற்பனைச் சேனல்கள் மற்றும் செயலிகள் பிரிவில் தயாரிப்புக் கிடைக்கும் தன்மையை மாற்றியது

சந்தை மாற்றங்கள், தயாரிப்புக் கிடைக்கும் தன்மையில் தானியங்குப் புதுப்பிப்புகளைத் தூண்டலாம்.

Shopify ஆல் தானாகவே நிறைவேற்றப்பட்ட ஆர்டர்கள்

எதிர்பாராதவிதமாக Shopify மூலம் நிறைவேற்றப்பட்டதாக ஆர்டர்கள் காட்டப்பட்டால், உங்கள் ஆர்டர் செயலாக்க அமைப்புகளைச் சரிபார்க்கவும். அமைப்புகள் > செக்அவுட் என்பதற்குச் சென்று, ஆர்டருக்குப் பணம் செலுத்திய பிறகு என்ற பிரிவை மதிப்பாய்வு செய்யவும். இதை ஆர்டரின் வரிசை உருப்படிகளைத் தானாகவே நிறைவேற்று என அமைத்திருந்தால், ஆர்டர்கள் கைமுறைத் தலையீடு இல்லாமல் நிறைவேற்றப்பட்டதாகக் குறிக்கப்படும்.

கட்டண வழங்குநர் மாற்றங்கள்

உங்கள் செயல்பாட்டுப் பதிவில் Shopify Payments முடக்கப்பட்டதாகக் காட்டப்பட்டு, ஆனால் நீங்கள் அந்த மாற்றத்தைச் செய்யவில்லை என்றால், எங்கள் வங்கிக் கூட்டாளர்களின் பின்தள மதிப்பாய்வு அல்லது இடமாற்றச் செயலாக்கமே அதற்குக் காரணமாக இருக்கலாம். இந்தச் செயலாக்கங்கள் வழக்கமானவை, நீங்கள் கட்டணங்களை ஏற்பதை இவை பாதிக்காது. உங்களுக்கு இதுகுறித்துச் சந்தேகம் இருந்தால், Shopify ஆதரவைத் தொடர்புகொள்ளவும்.

சந்தேகத்திற்குரிய செயல்பாடுகளுக்கான செயல்பாட்டுப் பதிவு உள்ளீடுகளை மதிப்பிடுதல்

செயல்பாட்டுப் பதிவு உள்ளீடுகளுக்கு மேலும் விசாரணை தேவையா என்பதைத் தீர்மானிக்க, பின்வரும் வழிகாட்டுதல்களைப் பயன்படுத்தவும்:

எந்தவொரு செயலும் தேவையில்லாத சாதாரண செயல்பாடு:

  • மொத்தத் திருத்தங்கள் போன்ற நீங்கள் சமீபத்தில் எடுத்த செயல்களுடன் தொடர்புடைய மாற்றங்கள்
  • செயலி அல்லது விற்பனைச் சேனல் ஒத்திசைவுச் செயல்பாடு
  • வழக்கமான சிஸ்டம் புதுப்பிப்புகள் மற்றும் இடமாற்றங்கள்
  • நீங்கள் தொடங்கிய சந்தை அல்லது ஷிப்பிங் அமைப்பு மாற்றங்கள்

விசாரணை தேவைப்படக்கூடிய செயல்பாடு:

  • யாரும் வேலை செய்யாத வழக்கத்திற்கு மாறான நேரங்களில் ஏற்படும் மாற்றங்கள்
  • அறிமுகமில்லாத பயனர்கள் அல்லது செயலிகளிடமிருந்து வரும் செயல்கள்
  • உணர்திறன்மிக்க அமைப்புகளில் மீண்டும் மீண்டும் செய்யப்படும் அங்கீகாரமற்ற மாற்றங்கள்
  • எதிர்பாராத பணியாளர் நீக்கங்கள் அல்லது அனுமதி மாற்றங்கள்

சந்தேகத்திற்குரிய செயல்பாட்டைக் கவனித்தால், மூலத்தைக் கண்டறிய உங்கள் பயனர் அனுமதிகள் மற்றும் நிறுவப்பட்ட செயலிகளை மதிப்பாய்வு செய்யவும். உங்கள் ஸ்டோரைப் பாதுகாப்பாக வைத்திருக்க, கணக்குப் பாதுகாப்புக்கான சிறந்த நடைமுறைகளைப் பின்பற்றவும்.

பக்கச் செயல்பாடு

உங்கள் Shopify நிர்வாகியில் பிற பணியாளர்கள் அதே பக்கத்தைப் பார்க்கிறார்களா அல்லது திருத்துகிறார்களா என்பதைப் பக்கச் செயல்பாடு உங்களுக்குத் தெரிவிக்கும். முரண்பாடான மாற்றங்களை உங்கள் பணியாளர்கள் தவிர்க்க இந்த அம்சம் உதவுகிறது.

பக்கச் செயல்பாட்டைப் பயன்படுத்துவதற்கான கவனத்தில் கொள்ள வேண்டியவை

பக்கச் செயல்பாட்டைப் பயன்படுத்துவதற்கு முன், பின்வருவனவற்றைக் கவனத்தில் கொள்ளவும்:

  • பக்கச் செயல்பாடு கனடாவில் கிடைக்கவில்லை.
  • ஒரு பக்கத்தில் ஒரே நேரத்தில் 250 பயனர்கள் வரை நீங்கள் பார்க்கலாம்.
  • இந்த அம்சம் இணைய உலாவியில் மட்டுமே வேலை செய்யும், Shopify மொபைல் செயலியில் இல்லை.

பக்கச் செயல்பாட்டைப் பயன்படுத்துதல்

Shopify நிர்வாகியின் பின்வரும் பிரிவுகளில் பக்கச் செயல்பாட்டை நீங்கள் பயன்படுத்தலாம்:

  • தயாரிப்பு விவரங்கள்
  • சந்தைப்படுத்தல்
  • வாடிக்கையாளர் விவரங்கள்
  • சேகரிப்பு விவரங்கள்
  • தள்ளுபடி விவரங்கள்

இந்தப் பக்கங்களில் ஒன்றைப் பிற பயனர் திருத்துகிறார் எனில், அவர் பெயருக்கு அருகில் ஒரு Edit ஐகானைப் பார்ப்பீர்கள்.

பக்கச் செயல்பாடு பின்வரும் வழிகளில் செயல்படுகிறது:

  • அதே பக்கத்தைப் பிற பயனர் பார்க்கிறார் அல்லது திருத்துகிறார் எனில், அவருடைய பெயர் காட்டப்படும். அவர் தீவிரமாகத் திருத்திக் கொண்டிருக்கிறார் எனில், அவர் பெயருக்கு அருகில் ஒரு Edit ஐகான் காட்டப்படும்.
  • ஏற்கனவே திருத்தப்படும் ஒரு பக்கத்தை நீங்கள் திருத்த முயன்றால், அது குறித்து உங்களுக்குத் தெரிவிக்கும் ஒரு எச்சரிக்கையைப் பெறுவீர்கள். எச்சரிக்கையைப் புறக்கணித்துவிட்டு எப்படியும் திருத்துவதென நீங்கள் தேர்வுசெய்யலாம், ஆனால் இது முரண்பாடான மாற்றங்களுக்கு வழிவகுக்கலாம்.

செயல்பாட்டுப் பதிவுச் சிக்கல்களைத் தீர்த்தல்

பின்வரும் பொதுவான சிக்கல்களையும் அவற்றைத் தீர்ப்பதற்கான படிகளையும் மதிப்பாய்வு செய்யவும்:

செயல்பாட்டுப் பதிவின் விடுபட்ட உள்ளீடுகளுக்கான சிக்கலைத் தீர்த்தல்

ஸ்டோர் செயல்பாட்டுப் பதிவு எத்தனை நிகழ்வுகளைக் காண்பிக்க முடியும் மற்றும் எவ்வளவு காலத்திற்கு முந்தையதைக் காண்பிக்க முடியும் என்பதில் வரம்புகளைக் கொண்டுள்ளது.

படிகள்:

  1. மாற்றம் தக்கவைப்புக் காலத்திற்குள் நிகழ்ந்ததா என்பதை உறுதிப்படுத்தவும். செயல்பாட்டுப் பதிவு அதிகபட்சமாக 250 முடிவுகளைக் காண்பிக்கும்.
  2. ஆர்டர் காலவரிசை அல்லது பயனர் நிர்வாகச் செயல்பாட்டுப் பதிவு போன்ற வேறொரு இடத்தில் இந்தச் செயல் கண்காணிக்கப்படுகிறதா எனச் சரிபார்க்கவும்.
  3. ஒரு செயலி மாற்றத்தைச் செய்திருக்கக்கூடுமா என்பதைச் சரிபார்க்க, நீங்கள் நிறுவிய செயலிகளை மதிப்பாய்வு செய்யவும். அமைப்புகள் > செயலிகள் மற்றும் விற்பனைச் சேனல்கள் என்பதில் செயலியை நிறுவிய மற்றும் நிறுவல் நீக்கிய தேதிகள் காட்டப்படும்.
செயல்பாட்டுப் பதிவு அணுகல் சிக்கல்களைத் தீர்த்தல்

ஸ்டோர் செயல்பாட்டுப் பதிவை அணுகுவதற்குக் குறிப்பிட்ட அனுமதிகள் தேவை.

படிகள்:

  1. உங்கள் பயனர் கணக்கில் முகப்பு மற்றும் ஸ்டோர் அமைப்புகள் > அமைப்புகளை நிர்வகித்தல் அனுமதிகள் உள்ளதா என்பதை உறுதிப்படுத்தவும்.
  2. உங்கள் அனுமதிகளைப் புதுப்பிக்க, கடையின் உரிமையாளர் அல்லது அனுமதி நிர்வாக அணுகல் கொண்ட ஒரு பயனரைக் கேட்கவும்.
  3. நீங்கள் கடையின் உரிமையாளராக இருந்து, இன்னமும் செயல்பாட்டுப் பதிவை அணுக முடியவில்லை எனில், Shopify ஆதரவைத் தொடர்புகொள்ளவும்.
நீக்கப்பட்ட பயனர்கள் இன்னமும் ஒரு பக்கத்தைப் பார்ப்பதாகக் காட்டப்படும் சிக்கலைத் தீர்த்தல்

உங்கள் ஸ்டோரிலிருந்து ஒரு பயனர் அகற்றப்பட்ட பிறகும், அவர் ஒரு பக்கத்தைப் பார்ப்பதாகச் சிறிது நேரம் காட்டப்படலாம்.

படிகள்:

  1. சிஸ்டம் புதுப்பிக்கப்படும் வரை சில நிமிடங்கள் காத்திருக்கவும்.
  2. உங்கள் உலாவிப் பக்கத்தைப் புதுப்பிக்கவும்.
  3. 24 மணிநேரத்திற்குப் பிறகும் சிக்கல் தொடர்ந்தால், Shopify ஆதரவைத் தொடர்புகொள்ளவும்.
செயல்பாட்டுப் பதிவில் அறியப்படாத நபர்களின் சிக்கலைத் தீர்த்தல்

செயல்பாட்டுப் பதிவில் செயல்பட்டவராக "Shopify" எனக் காட்டப்பட்டால் அல்லது மாற்றத்தை யார் செய்தது என்று உங்களால் கண்டறிய முடியவில்லை எனில், பின்வரும் படிகளை முயன்று பார்க்கவும்.

படிகள்:

  1. இது எதிர்பார்க்கப்படும் நடத்தைதானா என்பதைத் தீர்மானிக்க, செயல்பாட்டுப் பதிவு உள்ளீடுகளைப் புரிந்துகொள்ளுதல் பிரிவை மதிப்பாய்வு செய்யவும்.
  2. பயனர் தொடர்பான மாற்றங்களுக்கு உங்கள் பயனர் நிர்வாகச் செயல்பாட்டுப் பதிவைச் சரிபார்க்கவும்.
  3. ஒரு செயலியால் இது ஏற்பட்டிருக்கக்கூடுமா எனக் கண்டறிய, நீங்கள் நிறுவிய செயலிகள் மற்றும் அவற்றின் அனுமதிகளை மதிப்பாய்வு செய்யவும்.
  4. ஒரு குறிப்பிட்ட மாற்றத்தை யார் செய்தது என்பது குறித்த விரிவான தகவல் உங்களுக்குத் தேவைப்பட்டால், குறிப்பிட்ட நேர முத்திரை மற்றும் செயலுடன் Shopify ஆதரவைத் தொடர்புகொள்ளவும்.

FAQ

இந்த மாற்றத்தை நான் செய்யவில்லை—நான் கவலைப்பட வேண்டுமா?

அவசியமில்லை. நீங்கள் செய்ததாக நினைவில் இல்லாத மாற்றங்கள் உங்கள் செயல்பாட்டுப் பதிவில் காட்டப்படுவதற்குச் சில சரியான காரணங்கள் உள்ளன:

  • பின்னணிப் பணிகள்: பல தயாரிப்புகளைத் திருத்துவது போன்ற மொத்தச் செயல்களை நீங்கள் செய்யும்போது, தனிப்பட்ட மாற்றங்கள் பின்னணிப் பணிகளால் செயலாக்கப்படும், அவை "Shopify" எனப் பதிவாகும்.
  • செயலிகளும் ஒருங்கிணைப்புகளும்: நிறுவப்பட்ட செயலிகள் அவற்றின் அனுமதிகளின் அடிப்படையில் தானியங்கு மாற்றங்களைச் செய்ய முடியும்.
  • பிற பயனர்கள்: உங்களுக்குப் பணியாளர்கள் அல்லது கூட்டுப்பணியாளர்கள் இருந்தால், அவர்கள் இந்த மாற்றத்தைச் செய்திருக்கலாம்.
  • திட்டமிடப்பட்ட செயல்கள்: Shopify Flow தானியக்கமாக்கல்கள் போன்ற சில அம்சங்கள், மாற்றங்களைத் தானாகவே தூண்ட முடியும்.

நேர முத்திரையை மதிப்பாய்வு செய்து, நீங்களோ உங்கள் குழுவினரோ செய்திருக்கக்கூடிய ஏதேனும் செயல்களுடன் அதைத் தொடர்புபடுத்திப் பார்க்கவும். இன்னமும் உங்களுக்குக் கவலையாக இருந்தால், உங்கள் பாதுகாப்பு அமைப்புகளை மதிப்பாய்வு செய்து, கடவுச்சொல்லை மீட்டமைப்பது குறித்துப் பரிசீலிக்கவும்.

எனது செயல்பாட்டுப் பதிவை என்னால் ஏற்றுமதி செய்ய அல்லது பதிவிறக்க முடியுமா?

இல்லை, ஸ்டோர் செயல்பாட்டுப் பதிவை ஏற்றுமதி செய்யவோ பதிவிறக்கவோ முடியாது. இணக்கம் அல்லது தணிக்கை நோக்கங்களுக்காகக் குறிப்பிட்ட நிகழ்வுகளின் பதிவு உங்களுக்குத் தேவைப்பட்டால், நீங்கள் திரைப்பிடிப்புகளை எடுக்கலாம் அல்லது உள்ளீடுகளை நீங்களே ஆவணப்படுத்தலாம்.

பயனர் தொடர்பான செயல்பாட்டுக்கு, விரிவான நிகழ்வுத் தகவலை வழங்கும் பயனர் நிர்வாகச் செயல்பாட்டுப் பதிவை நீங்கள் மதிப்பாய்வு செய்யலாம்.

செயல்பாட்டுப் பதிவு உள்ளீடுகள் எவ்வளவு காலம் தக்கவைக்கப்படும்?

ஸ்டோர் செயல்பாட்டுப் பதிவு அதிகபட்சமாக 250 முடிவுகளைக் காண்பிக்கும். இது உள்ளடக்கும் கால அளவானது, உங்கள் ஸ்டோர் எவ்வளவு தீவிரமாகச் செயல்படுகிறது என்பதைப் பொறுத்தது. குறைவான செயல்பாட்டைக் கொண்ட ஸ்டோர்களை விட, அடிக்கடி மாற்றங்களைச் செய்யும் ஸ்டோர்களுக்குக் குறுகிய வரலாற்றுப் பார்டையே கிடைக்கும்.

பணியாளர் ஒருவரை யார் நீக்கியது என்று என்னால் கண்டறிய முடியுமா?

Shopify நிர்வாகி அல்லது Shopify POS செயலி மூலம் பணியாளர்கள் நீக்கப்படும்போது, செயலைச் செய்தவர் யார் என்பதைக் காண்பிப்பதற்குப் பதிலாக "Shopify deleted [பணியாளரின் பெயர்]" எனச் செயல்பாட்டுப் பதிவு காண்பிக்கலாம்.

ஒரு பணியாளரை நீக்கியது யார் என்பதை விசாரிக்க, அமைப்புகள் > பயனர்கள் > பாதுகாப்பு என்பதில் உள்ள பயனர் நிர்வாகச் செயல்பாட்டுப் பதிவை மதிப்பாய்வு செய்யவும். உங்களுக்கு மேலும் தகவல் தேவைப்பட்டால், Shopify ஆதரவைத் தொடர்புகொள்ளவும்.

விசாரணை கோருதல்

நீங்கள் செயல்பாட்டுப் பதிவை மதிப்பாய்வு செய்த பிறகும் குறிப்பிட்ட உள்ளீடுகள் குறித்து உங்களுக்குக் கவலைகள் இருந்தால், அதுகுறித்து மேலும் விசாரிக்குமாறு நீங்கள் Shopify ஆதரவிடம் கோரலாம்.

விசாரணைக் கோரிக்கையைத் தயார் செய்தல்

திறம்பட விசாரிக்க Shopify ஆதரவுக்கு உதவ, பின்வரும் தகவல்களைச் சேகரிக்கவும்:

  • குறிப்பிட்ட நேர முத்திரை: நீங்கள் கருத்தில் கொள்ளும் பதிவு உள்ளீட்டின் சரியான தேதியும் நேரமும்.
  • பதியப்பட்ட செயல்: "Shopify செக்அவுட் அமைப்புகளை மாற்றியது" என்பது போல, செயல்பாட்டுப் பதிவில் என்ன நடந்தது எனக் கூறப்பட்டுள்ளது.
  • நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்: இந்த மாற்றம் ஏன் எதிர்பாராதது அல்லது சிக்கலானது என்பதற்கான சுருக்கமான விளக்கம்.
  • சமீபத்திய மாற்றங்கள்: அந்த நேரத்தில் நீங்கள் அல்லது உங்கள் குழுவினர் மேற்கொண்ட தொடர்புடைய ஏதேனும் செயல்கள்.

செயல்பாட்டுப் பதிவு உள்ளீடுகள் குறித்து நீங்கள் Shopify ஆதரவைத் தொடர்புகொள்வதற்கு முன்

Shopify ஆதரவைத் தொடர்புகொள்வதற்கு முன், உங்கள் சிக்கலை விரைவாகத் தீர்க்க உதவும் பின்வரும் தகவல்களைச் சேகரிக்கவும்:

  • நீங்கள் கேட்கும் செயல்பாட்டுப் பதிவு உள்ளீட்டின் சரியான தேதி, நேரம் மற்றும் நேர மண்டலம்
  • குறிப்பிட்ட செயல்பாட்டுப் பதிவு உள்ளீட்டின் திரைப்பிடிப்பு
  • பதியப்பட்டதோடு ஒப்பிடும்போது, நீங்கள் எதிர்பார்க்கும் செயல் என்ன
  • அந்த நேரத்தில் நீங்கள் அல்லது உங்கள் குழுவில் உள்ள எவரும் தொடர்புடைய ஏதேனும் நடவடிக்கைகளை எடுத்தீர்களா
  • பதியப்பட்ட செயலுடன் தொடர்புடைய அனுமதிகளைக் கொண்டிருக்கக்கூடிய செயலிகளின் பட்டியல்
  • மேலே உள்ள சிக்கல் தீர்த்தல் பிரிவில் நீங்கள் ஏற்கனவே முயன்ற படிகள்

இந்தத் தகவல்களைத் தயாராக வைத்திருப்பது, Shopify ஆதரவு உங்களுக்கு இன்னும் திறம்பட உதவ வழிகோலும்.