உங்கள் Shopify Flow பணிப்பாய்வுகளை உகந்ததாக்குதல்
ஒரு பணிப்பாய்வை உருவாக்கும்போது, அது முடிந்தவரைச் சிறப்பாக இயங்குவதை உறுதிசெய்ய வேண்டும். உங்கள் பணிப்பாய்வுகள் த்ராட்டில் செய்யப்படுவதற்கோ API வரம்புகள் தீர்ந்துபோவதற்கோ காரணமாக அமையக்கூடிய சூழ்நிலைகளையும், அந்தச் சிக்கல்களைத் தீர்ப்பதற்கான அல்லது மாற்றுவழிகளைக் கண்டறிவதற்கான உதவிக்குறிப்புகளையும் இந்த ஆவணம் விவரிக்கிறது.
இந்தப் பக்கத்தில்
பொதுவான செயல்திறன் சிக்கல்கள்
உங்கள் பணிப்பாய்வுகளில் செயல்திறன் சிக்கல்களை ஏற்படுத்தக்கூடிய பொதுவான சூழல்களை இந்தப் பிரிவு விவரிக்கிறது. ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட சூழல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது, இதனால் நீங்கள் செயல்திறன் சிக்கல்களைக் காண்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரிக்கும். எடிட்டர் உள்ளமைவு அல்லது விகித வரம்பிடல் தொடர்பான பிழைகளுக்கு, சிக்கல் தீர்க்கும் வழிகாட்டியைப் பயன்படுத்தவும்.
அதிக அளவிலான தூண்டுதல்கள்
அடிப்படையில் உள்ள நிகழ்வு அடிக்கடி நிகழக்கூடியவை அதிக அளவிலான தூண்டுதல்கள் ஆகும். எடுத்துக்காட்டாக, ஸ்டோரில் உள்ள ஒவ்வொரு சரக்கு இருப்பு மாற்றத்தின்போதும் Product variant inventory quantity changed தூண்டுதல் இயங்குகிறது. ஒரு தூண்டுதலின் அளவானது உங்கள் பணிப்பாய்வில் ஏதேனும் சிக்கல் இருந்தால் அதை பன்மடங்கு பெருக்குகிறது. எடுத்துக்காட்டாக, ஒரு பணிப்பாய்வு 100 தயாரிப்புகளைப் பெற்று ஒரு நிமிடத்திற்கு 1000 முறை இயங்கினால், அது ஒரு நிமிடத்திற்கு 100,000 தயாரிப்புகளைப் பெறும். இதனால் செயல்திறன் சிக்கல்கள் ஏற்படலாம்.
தீர்வு: குறைவான தரவைப் பயன்படுத்தி உங்கள் பணிப்பாய்வுகளை உகந்ததாக்கவும் அல்லது உங்கள் பணிப்பாய்வைப் பிரிக்கக் காத்திரு படிகளைப் பயன்படுத்தவும்.
ஒரே தூண்டுதலைப் பயன்படுத்தும் பல பணிப்பாய்வுகள்
Flow இல், நீங்கள் ஒரே தூண்டுதலைப் பயன்படுத்தி ஒன்றுக்கும் மேற்பட்ட பணிப்பாய்வுகளை உருவாக்கலாம். நிகழ்வு நடக்கும்போது இந்த பணிப்பாய்வுகள் ஒன்றுக்கொன்று இணையாக இயங்கும். பின்வரும் காரணங்களுக்காக ஒரே தூண்டுதலைப் பயன்படுத்தி பல பணிப்பாய்வுகளை நீங்கள் இயக்கினால் அது சிக்கலானதாக இருக்கலாம்:
- பணிப்பாய்வுகள் ஒன்றுக்கொன்று முரண்படலாம்.
- பணிப்பாய்வுகள் ஒரே நேரத்தில் தரவைப் பெறவும் APIகளை அழைக்கவும் முயற்சிக்கின்றன, மேலும் Shopify API வரம்புகளின்படி உங்கள் ஸ்டோர் ஒரே நேரத்தில் கையாளக்கூடிய கோரிக்கைகளின் எண்ணிக்கை வரம்பிற்குட்பட்டதாகும்.
தீர்வு: ஒரே தூண்டுதலைப் பயன்படுத்தும் பணிப்பாய்வுகளை ஒற்றைப் பணிப்பாய்வாக இணைக்கவும். ஒவ்வொன்றும் எப்போது செயல்படுத்தப்படும் என்பதைக் கட்டுப்படுத்தவும் இது உங்களை அனுமதிக்கிறது, இதன் மூலம் அவை ஒன்றுக்கொன்று முரண்படாது. பணிப்பாய்வுகள் அதிக தரவைப் பெறாதபோது அல்லது அவை பெறும் தரவு ஒரே மாதிரியாக இருக்கும்போது பணிப்பாய்வுகளை இணைப்பது பயனுள்ளதாக இருக்கும். பணிப்பாய்வுகள் நிறைய தனித்துவமான தரவுகளைப் பெற்றால், அவற்றை தனித்தனியாக வைத்திருப்பது சிறந்த செயல்திறனை வழங்கும்.
பட்டியல்கள் அல்லது தவறான தரவைப் பயன்படுத்துதல்
நீங்கள் ஒரு பணிப்பாய்வை உருவாக்கும்போது, தயாரிப்புகள் அல்லது ஆர்டர்கள் போன்ற ஆப்ஜெக்ட்களின் பட்டியலைப் பயன்படுத்தலாம். நீங்கள் ஆப்ஜெக்ட்களின் பட்டியலைப் பயன்படுத்தினால், Flow பட்டியலில் உள்ள அனைத்து ஆப்ஜெக்ட்களையும் பெறும். பட்டியலில் நிறைய தரவு இருக்கும்போது இது சிக்கலாக மாறலாம்.
தவறுதலாக பிழையான தரவைத் தேர்ந்தெடுப்பது மற்றொரு பொதுவான சிக்கலாகும். எடுத்துக்காட்டாக, ஒரு ஆர்டரில் உள்ள தயாரிப்புத் தரவைச் சரிபார்க்க, நீங்கள் order / line items / product / tags என்பதற்குப் பதிலாக order / publication / products / tags என்பதைத் தேர்ந்தெடுத்திருக்கலாம். ஆர்டரில் உள்ள தயாரிப்புகளைச் சரிபார்ப்பதே நோக்கமென்றாலும், அது வெளியீட்டிற்கான அனைத்து தயாரிப்புகளையும் பெறுவதால், முதல் முடிவு பெரும்பாலும் தவறாகவே இருக்கும். இவ்வளவு பெரிய பட்டியலைத் தேர்ந்தெடுப்பது செயல்திறன் சிக்கல்களை ஏற்படுத்தலாம் மற்றும் தவறான பட்டியலைத் தேர்ந்தெடுப்பது உங்கள் தானியக்கமாக்கல் தவறாகச் செயல்பட வழிவகுக்கும்.
தீர்வு: உங்களுக்குத் தேவையான தரவை கவனமாகத் தேர்ந்தெடுக்கவும் மற்றும் தேவையில்லாதபோது பட்டியல்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். உங்கள் பணிப்பாய்வுகள் நீங்கள் எதிர்பார்ப்பதைச் செய்கிறதா என்பதை உறுதிப்படுத்த அவற்றைச் சோதிக்கவும்.
மெட்டாஃபீல்டுகள்
தனிப்பட்ட மெட்டாஃபீல்டு அல்லது மெட்டாஆப்ஜெக்ட் தரவைப் பெறுவது செயல்திறன் சிக்கல்களை ஏற்படுத்தாது. இருப்பினும், metafields பட்டியலைத் தேர்ந்தெடுப்பதும் ரிசோர்ஸில் உள்ள அனைத்து மெட்டாஃபீல்டுகளையும் மீண்டும் மீண்டும் இயக்குவதும் பொதுவான சிக்கலாகும். ஒரு value புலத்தில் நிறைய தரவு இருந்தால், எடுத்துக்காட்டாக, HTML ஆப்ஜெக்ட்கள் பயன்படுத்தப்படும்போது, நிறைய தரவுகள் செயலாக்கப்படலாம், மேலும் இது செயல்திறன் சிக்கல்களை ஏற்படுத்தலாம்.
தீர்வு: metafields என்பதற்குப் பதிலாக metafield ஆப்ஜெக்ட்டைப் பயன்படுத்தவும்.
தரவைப் பெறு (Get data) செயல்களை அதிகமாகப் பயன்படுத்துதல்
Get order data போன்ற தரவைப் பெறு செயலைப் பயன்படுத்தும் பணிப்பாய்வுகள், தரவைப் பெறு செயல்களிலிருந்து ஒரு பணிப்பாய்வுக்கு அதிகபட்சம் 100 ஆப்ஜெக்ட்களை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளன. 100 ஆப்ஜெக்ட்களுக்கு மேல் சென்றால் செயல்திறன் சிக்கல்கள் ஏற்படலாம்.
தீர்வு: உங்கள் வினவல் 100 முடிவுகளுக்கு மேல் வழங்கத் தேவையில்லாதவாறு பணிப்பாய்வை அடிக்கடி இயக்கவும். வினவல்களைத் திரும்பத் திரும்பச் செய்வதற்குப் பதிலாக அதே தரவைப் பெறு செயலை மீண்டும் பயன்படுத்தவும்.
தரவைப் பெறு செயல்களில் வினவல் வடிப்பான்கள் இல்லை
தரவைப் பெறு செயல்கள் Shopify API ஐ அழைக்கும். எந்த வினவலும் இல்லை என்றால், API அனைத்து ரிசோர்ஸ்களையும் வழங்கும் அல்லது எதையுமே வழங்காது. இது செயல்திறன் சிக்கல்களை ஏற்படுத்தலாம், ஆனால் பணிப்பாய்வில் பின்னர் வழங்கப்படும் தரவை நீங்கள் பயன்படுத்தும்போது உங்கள் ஸ்டோரில் தவறான செயல்கள் எடுக்கப்படவும் இது காரணமாகலாம்.
தீர்வு: எப்போதும் உங்கள் தரவைப் பெறு செயல்களில் வினவல் வடிப்பான்களைச் சேர்க்கவும்.
தரவைப் பெறு செயல்களில் உள்ள தவறான வினவல் வடிப்பான்கள்
தரவைப் பெறு வினவல்கள் குறைந்த அளவிலான வினவல் வடிப்பான்கள், ஒரு குறிப்பிட்ட தொடரியல் மற்றும் வடிப்பான்களில் பயன்படுத்தக்கூடிய குறிப்பிட்ட மதிப்புகளை ஆதரிக்கின்றன. தவறான வடிப்பான், வடிப்பான் மதிப்பு அல்லது தொடரியலை உள்ளிடுவது ஒட்டுமொத்த வினவலும் புறக்கணிக்கப்படக் காரணமாகலாம், இது வினவல் வடிப்பான் இல்லாதபோது ஏற்படும் சிக்கல்களைப் போலவே அமையலாம்.
தீர்வு: கிடைக்கும் வினவல் வடிப்பான்களின் பட்டியலைக் கண்டறிய Flow இல் உள்ள செயலால் வழங்கப்படும் ஆவணங்களைப் பயன்படுத்தவும். உங்கள் வினவல் வடிப்பான்கள் எதிர்பார்த்த தரவை வழங்குகின்றனவா என்பதை உறுதிப்படுத்த அவற்றை எப்போதும் சோதிக்கவும். வழங்கப்பட்ட தரவை மதிப்பாய்வு செய்ய, Flow இல் Log Output செயலைப் பயன்படுத்தலாம் அல்லது Postman போன்ற API கிளையண்ட் மூலமாகவோ GraphiQL செயலி மூலமாகவோ நேரடியாக Shopify Admin API ஐ அழைக்கலாம்.
பொதுவான செயல்திறன் சிக்கல்களுக்கான கூடுதல் தீர்வுகள்
தரவு பெறுதலைத் தாமதப்படுத்த காத்திரு படிகளைப் பயன்படுத்தவும்
ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குப் பணிப்பாய்வை இடைநிறுத்த காத்திரு படிகள் உங்களை அனுமதிக்கின்றன, ஆனால் உங்கள் பணிப்பாய்வுகளை உகந்ததாக்கவும் காத்திரு படிகளைப் பயன்படுத்தலாம். ஒவ்வொரு காத்திரு படியும் உங்கள் பணிப்பாய்வை செயல்படுத்துவதைத் தனித்தனி கட்டங்களாகப் பிரிக்கிறது. பணிப்பாய்வு இயங்கும்போது, அது தானாகவே முதல் காத்திரு படி வரை தேவைப்படும் தரவைப் பெறுகிறது (மேலும் மீதமுள்ள பணிப்பாய்விற்குக் காத்திரு படிக்குப் பிறகு மீண்டும் தரவைப் பெறுகிறது).
ஒரு பணிப்பாய்வு அதிக அளவிலான தூண்டுதலைப் பயன்படுத்தி நிறைய தரவைப் பெறுகிறது, ஆனால் எப்போதாவது மட்டுமே செயல்படும் என்றால், நிபந்தனை மற்றும் காத்திரு படி இணைக்குப் பிறகு ஏதேனும் சிக்கலான தரவு அல்லது லாஜிக்கை நீங்கள் வைக்கலாம். எடுத்துக்காட்டாக:
- தூண்டுதல்: தயாரிப்பு மாறுபாட்டின் சரக்கு இருப்பு அளவு மாற்றப்பட்டது.
- நிபந்தனை: தயாரிப்பு ஒரு சேகரிப்பில் உள்ளதா எனச் சரிபார்க்கவும்.
- உண்மை என்றால், செயல்: 2 வினாடிகள் காத்திருக்கவும்.
- செயல்: வாடிக்கையாளருக்கு மின்னஞ்சல் அனுப்பவும் (நிறைய தரவுடன்).
இந்த எடுத்துக்காட்டில், 4 ஆவது படிக்குத் தேவையான தரவானது காத்திரு படி முடிந்த பின்னரே வினவப்படும். நிபந்தனை வழக்கமாக தவறாகவே இருந்தால், பணிப்பாய்வு வேகமாகவும் திறமையாகவும் இயங்கும் என்று அர்த்தம்.
எவற்றை உகந்ததாக்கக் கூடாது
ஒரே தரவைப் பல செயல்களில் பயன்படுத்துதல்
பல படிகளில் நீங்கள் ஒரே புலத்தைப் பயன்படுத்தும்போது, Flow அந்தப் புலங்களின் பயன்பாட்டைப் பகுப்பாய்வு செய்து ஒருமுறை மட்டுமே அந்தத் தரவைப் பெறும். அதாவது செயல்திறனைப் பற்றி கவலைப்படாமல் நீங்கள் அந்தத் தரவை எத்தனை முறை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.