Liquid மாறிகள் என்பவை Liquid-இல் வரையறுக்கப்பட்டுள்ள இடநிரப்பிகளாகும். அவை பணிப்பாய்வு இயங்கும்போது GraphQL Admin API-இல் உள்ள மதிப்புகளால் மாற்றியமைக்கப்படும். ஆர்டர் எண், ஆர்டர் விலை அல்லது வாடிக்கையாளர் பெயர் போன்று உங்கள் பணிப்பாய்வுகளில் ஈடுபட்டுள்ள வாடிக்கையாளர்கள், ஆர்டர்கள் மற்றும் தயாரிப்புகளின் பண்புக்கூறுகளை மாறிகள் விவரிக்கலாம். உங்கள் பணிப்பாய்வில் உள்ள தர்க்கத்தைக் கட்டுப்படுத்த நிபந்தனைகளில் அல்லது ஒரு செயலில் இருந்து தரவை வெளியிட மாறிகளைப் பயன்படுத்தலாம்.
மாறியைச் சேர் (Add a variable) இணைப்பைக் கொண்டுள்ள எந்தவொரு உரைப் புலத்திலும் Liquid-ஐப் பயன்படுத்தி நீங்கள் மாறிகளைச் சேர்க்கலாம். தொடர்புடைய புலத்திற்குக் கீழே உள்ள மாறியைச் சேர் இணைப்பைக் கிளிக் செய்து, பட்டியலிலிருந்து ஒரு மாறியைத் தேர்வுசெய்யவும்.
மாறியைச் சேர் பட்டியலில் உள்ள மாறிகள் வடிகட்டப்படுவதால், நடப்புப் படிக்கு முந்தைய படிகளால் (எ.கா. தூண்டுதல்கள்) வழங்கப்படும் மாறிகளை மட்டுமே நீங்கள் பயன்படுத்த முடியும். எடுத்துக்காட்டாக, ஆர்டர் உருவாக்கப்பட்டது தூண்டுதலானது, மாறிகளாகச் செருகக்கூடிய ஆர்டர் மற்றும் கடை ஆதாரங்களை Admin API இலிருந்து வழங்குகிறது. பட்டியலிலிருந்து ஒரு மாறியைத் தேர்ந்தெடுத்த பிறகு, அது சரியாக வடிவமைக்கப்பட்ட Liquid ஆக உரைப் பெட்டியில் சேர்க்கப்படும்.
நீங்கள் உரைப் புலத்தில் நேரடியாகவும் Liquid ஐ எழுதலாம். எடுத்துக்காட்டாக, Shopify நிர்வாகியிடமிருந்து order-123 என்பது போன்ற ஆர்டர் சரத்தைக் காட்ட, {{ order.name }} என்ற மாறியைப் பயன்படுத்தலாம்.
Liquid-க்குப் பயன்படுத்தப்படும் தரவை மீட்டெடுக்க Admin API-ஐ Flow பயன்படுத்துவதால், மாறியின் தொடரியல் camel case முறையைப் பயன்படுத்துகிறது. Camel case மாறிகளில் முதல் சொல் சிற்றெழுத்தில் தொடங்கும்; அடுத்தடுத்த சொற்கள் firstName அல்லது canMarkAsPaid என்பது போல் பேரெழுத்தில் தொடங்கும். எடுத்துக்காட்டாக, ஒரு தயாரிப்பு உருவாக்கப்பட்ட தேதியை அணுக, {{ product.createdAt }} என உள்ளிடவும். camel case முறையைப் பயன்படுத்தாத Shopify தீமில் நீங்கள் Liquid தொடரியலைப் பயன்படுத்தினால், {{ product.created_at }} என உள்ளிடுவீர்கள்.
நிபந்தனை மற்றும் சுழற்சி Liquid டேக்குகள்
பின்வரும் செயல்பாடுகளைச் செய்ய, மாறிகளுடன் Liquid டேக்குகளைப் பயன்படுத்தலாம்:
ஆர்டர் மொத்தம் $100 ஐ விட அதிகமாக உள்ளதா என்பதைத் தீர்மானிப்பது போன்ற நிபந்தனை அறிக்கைகளை எழுதுதல்.
ஆர்டரில் உள்ள ஒவ்வொரு வரிசை உருப்படிக்கும் தரவை வெளியிடுவது போல், பொருள்களின் பட்டியலைச் சுழற்றுதல்.
இந்த அறிக்கைகளை எழுதவும் பொருள்களைச் சுழற்றவும் நீங்கள் Liquid டேக்குகளைப் பயன்படுத்தலாம்.
எடுத்துக்காட்டாக, ஆர்டர் மொத்தம் $100 ஐ விட அதிகமாக இருந்தால் பின்வரும் Liquid ஆர்டர் எண்ணைக் காண்பிக்கும்:
{% if order.totalPriceSet.shopMoney.amount > 100 %}
Order number: {{ order.name }}
{% endif %}
ஆர்டருக்கான வரிசை உருப்படிகள் போன்ற பொருள்களின் பட்டியலைச் சுழற்ற, நீங்கள் for லூப்-ஐயும் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டாக, பின்வரும் Liquid ஒரு ஆர்டரில் உள்ள ஒவ்வொரு வரிசை உருப்படியின் பெயரையும் காண்பிக்கும்:
{% for li in order.lineItems %}
{{ li.title }}
{% endfor %}
பின்வரும் Liquid நிபந்தனை (அல்லது கட்டுப்பாட்டு ஓட்ட) டேக்குகளை Flow ஆதரிக்கிறது:
வடிப்பான்களைப் பயன்படுத்தி Liquid-இல் உள்ள மாறித் தரவை நீங்கள் மாற்றலாம். அனைத்து ஓப்பன் சோர்ஸ் Liquid வடிப்பான்களையும் Flow ஆதரிக்கிறது.
எடுத்துக்காட்டாக, பின்வரும் Liquid ஒரு ஆர்டர் பெயரிலிருந்து முன்னொட்டை அகற்றி மீதமுள்ளதை வெளியிடுகிறது: {{ order.name | remove: "Order-" }}
வடிப்பான்களில் Liquid மாறிகளைப் பயன்படுத்தும் போது கருத்தில் கொள்ள வேண்டியவை
வடிப்பான்களைப் பயன்படுத்தி மாறிகளை மாற்றுவதற்கு முன், பின்வரும் கருத்தில்கொள்ள வேண்டியவைகளை மதிப்பாய்வு செய்யவும்:
சில வடிப்பான்களுக்குக் கிடைக்கும் புள்ளிக்குறி முறையை (dot notation) Flow ஆதரிக்காது. எடுத்துக்காட்டாக, Flow {{ order.lineItems | size }} ஐ ஆதரிக்கும், ஆனால் {{ order.lineItems.size }} ஐ ஆதரிக்காது.
மெட்டாஃபீல்டுகளுக்கான புள்ளிக்குறி முறையை Flow ஆதரிக்காது. எடுத்துக்காட்டாக, நீங்கள் {{ order.metafields.custom.hold_note }} ஐப் பயன்படுத்த முடியாது. அதற்குப் பதிலாக, எடுத்துக்காட்டுகளில் குறிப்பிட்டுள்ளபடி நீங்கள் மெட்டாஃபீல்டுகளை லூப் செய்ய வேண்டும்.
ஒரு பட்டியலில் உள்ள உருப்படிகளை அணுகுவதற்குக் குறியீடுகளைப் பயன்படுத்துவதை Flow ஆதரிக்காது. எடுத்துக்காட்டாக, நீங்கள் {{ order.lineItems[0].title }} ஐப் பயன்படுத்த முடியாது. அதற்குப் பதிலாக, எடுத்துக்காட்டுகளில் குறிப்பிட்டுள்ளபடி நீங்கள் வரிசை உருப்படிகளை லூப் செய்ய வேண்டும்.
தேதி வடிப்பான்கள்
நிலையான Liquid வடிப்பான்களுக்குக் கூடுதலாக, திட்டமிடப்பட்ட நேரம் (Scheduled time) தூண்டுதல் மற்றும் தரவைப் பெறு (Get data) அம்சங்களை ஆதரிக்க, மற்றொரு தேதியைப் பொறுத்து ஒரு தேதியைப் பெறுவதற்கான தேதி வடிப்பான்களை Flow வழங்குகிறது. இந்த வடிப்பான்கள்: date_minus மற்றும் date_plus. எடுத்துக்காட்டாக:
எதிர்காலத்தில் ஒரு நாள் கழித்து வரும் தேதியைப் பெற: {{ "now" | date_plus: "1 day" }}
கடந்த காலத்தில் ஒரு நாளுக்கு முந்தைய தேதியைப் பெற: {{ "now" | date_minus: "1 day" }}
இந்த வடிப்பான்கள், கால அளவு அலகாக second, minute, day, week, month, மற்றும் year ஆகியவற்றை ஒருமையிலும் (உதாரணமாக second), பன்மையிலும் (உதாரணமாக seconds) ஏற்கும். நீங்கள் பின்வரும் வகையான தனிப்பயனாக்கக்கூடிய அலகுகளையும் வழங்கலாம்:
வினாடிகளின் எண்ணிக்கையைக் குறிக்கும் ஒரு முழு எண்: {{ "now" | date_minus: 3600 }}, இதில் 3600 என்பது 1 மணிநேரத்திற்குச் சமம்.
ஒரு ISO8601 கால அளவுச் சரம்: {{ "now" | date_minus: "P1Y2D" }}, இதில் P1Y2D என்பது 1 ஆண்டு மற்றும் 2 நாட்களைக் குறிக்கும்.
கிரிப்டோகிராஃபிக் வடிப்பான்கள்
ஹாஷிங் செய்வதற்கும் ஹாஷ் அடிப்படையிலான செய்தி அங்கீகாரக் குறியீடுகளை (HMACs) உருவாக்குவதற்கும் கிரிப்டோகிராஃபிக் வடிப்பான்களை Flow வழங்குகிறது. தனிப்பட்ட அடையாளங்காட்டிகளை உருவாக்கவோ செக்சம்களை உருவாக்கவோ அல்லது குறிப்பிட்ட ஹாஷ் வடிவங்கள் தேவைப்படும் மூன்றாம் தரப்பு அமைப்புகளுடன் ஒருங்கிணைக்கவோ இந்த வடிப்பான்கள் பயனுள்ளதாக இருக்கும்.
ஹாஷிங் வடிப்பான்கள்
Shopify Flow பின்வரும் வகையான ஹாஷிங் வடிப்பான்களை ஆதரிக்கிறது:
blake3 - இது ஒரு BLAKE3 ஹாஷை உருவாக்குகிறது (பொதுவான பயன்பாட்டிற்குப் பரிந்துரைக்கப்படுகிறது).
பொதுவான ஹாஷிங் நோக்கங்களுக்கும் புதிய செயலாக்கங்களுக்கும் நீங்கள் blake3 என்பதைப் பயன்படுத்த வேண்டும், ஏனெனில் பழைய அல்காரிதம்களைக் காட்டிலும் இது சிறந்த செயல்திறனையும் பாதுகாப்பையும் வழங்குகிறது. இருப்பினும், மூன்றாம் தரப்பு சிஸ்டம்களுடனான இணக்கத்தன்மைக்காக sha256, sha1 மற்றும் md5 ஆகியவை கிடைக்கின்றன.
பயன்பாட்டுக்கான உதாரணம்:
{{ "hello world" | blake3 }} என்பது "hello world" இன் BLAKE3 ஹாஷை வழங்கும்.
HMAC வடிப்பான்கள்
ஒரு ரகசிய விசையுடன் HMAC ஐ உருவாக்க, பின்வரும் ஆதரிக்கப்படும் வடிப்பான்களில் ஒன்றைப் பயன்படுத்தவும்:
ஒரு பணிப்பாய்வில் ஈடுபட்டுள்ள வாடிக்கையாளர், ஆர்டர் மற்றும் தயாரிப்புக்கான URLகளை நீங்கள் வெளியிட விரும்பலாம்.
# Output the base Admin URL for your store
https://admin.shopify.com/store/{{ shop.myShopifyDomain | replace: ".myshopify.com", "" }}
# Assign the base Admin url to a variable named base_url:
{%- capture base_url -%}https://admin.shopify.com/store/{{ shop.myShopifyDomain | replace: ".myshopify.com", "" }}{%- endcapture -%}
# Customer from a Customer trigger:
{{ base_url }}/customers/{{ customer.legacyResourceId }}
# Customer without the base_url:
https://admin.shopify.com/store/{{ shop.myShopifyDomain | replace: ".myshopify.com", "" }}/customers/{{ customer.legacyResourceId }}
# Customer from an Order trigger:
{{ base_url }}/customers/{{ order.customer.legacyResourceId }}
# Order:
{{ base_url }}/orders/{{ order.legacyResourceId }}
# Product:
{{ base_url }}/products/{{ product.legacyResourceId }}
# Product Variant:
{{ base_url }}/products/{{ product.legacyResourceId }}/variants/{{ productVariant.legacyResourceId }}
# Example showing a clickable link in HTML, making use of the URL:
<a href="{{ base_url }}/products/{{ product.legacyResourceId }}">{{ product.title }}</a>
டேக்குகளின் பட்டியலை ஒரு மெட்டாஃபீல்டாக மாற்றுதல்
ஒற்றை வரி உரைப்புலங்களின் பட்டியல் ஆக உள்ள ஒரு மெட்டாஃபீல்டாக டேக்குகளின் தொகுப்பை நீங்கள் மாற்ற விரும்புகிறீர்கள். Product added to store தூண்டுதலைப் பயன்படுத்தி ஒரு பணிப்பாய்வை உருவாக்கி, Update product metafield செயலைப் பயன்படுத்துகிறீர்கள். Update product metafield செயலின் Value பிரிவில், பின்வரும் liquid குறியீட்டைச் சேர்க்கிறீர்கள். தயாரிப்பு உருவாக்கப்படும்போது மதிப்புகளை ஒருமுறை அமைத்தால் மட்டுமே போதும் என்றும், தயாரிப்பில் color:red மற்றும் color:orange ஆகிய இரு தொடர்புடைய டேக்குகள் இருப்பதாகவும் இந்த உதாரணம் கருதுகிறது.
ஒற்றை வரி உரைப்புலங்களின் பட்டியலை அமைப்பதற்கான liquid உதாரணம்.
ஒரு ஆர்டருக்காக இயங்குநிலை மின்னஞ்சல் செய்தியை எழுதுதல்
ஒரு ஆர்டரில் வாடிக்கையாளர் $500-க்கும் அதிகமாகச் செலவிடும்போது, ஒரு பணியாளருக்கு மின்னஞ்சலை அனுப்பும் பணிப்பாய்வை நீங்கள் உருவாக்க விரும்புகிறீர்கள். Order created தூண்டுதலைப் பயன்படுத்தி ஒரு பணிப்பாய்வை உருவாக்கி, ஆர்டரின் மொத்த மதிப்பு $500-க்கும் அதிகமாக இருந்தால் true என ஆகக்கூடிய ஒரு நிபந்தனையை அமைத்து, Send internal email செயலைப் பயன்படுத்துகிறீர்கள். Send internal email செயலின் Message பிரிவில், பின்வரும் மாறிகளைப் பயன்படுத்துகிறீர்கள்.
வாடிக்கையாளர் விவரங்களை வழங்கப் பயன்படும் மாறியின் உதாரணம்.
உள்ளீடு
வெளியீடு
Please send a personal thank you note to {{ order.customer.firstName }} {{ order.customer.lastName }}({{ order.customer.email }}) for placing an order for $ {{ order.totalPriceSet.shopMoney.amount }}.
$763.42 மதிப்பில் ஆர்டர் செய்தமைக்காக, Jeanne Dupont-க்கு (jeanne@example.com) தனிப்பட்ட நன்றிக் குறிப்பை அனுப்பவும்.
சரக்கு இருப்புக் குறைவாக உள்ள தயாரிப்புக்காக இயங்குநிலை மின்னஞ்சல் செய்தியை எழுதுதல்
தயாரிப்புச் சரக்கு இருப்பு குறையும்போது ஒரு பணியாளருக்குத் தெரிவிக்க வேண்டும் மற்றும் கூடுதல் ஸ்டாக்கிற்கு ஒரு ஆர்டர் செய்யப்பட வேண்டும் என நீங்கள் தீர்மானிக்கிறீர்கள். Inventory quantity changed தூண்டுதலுடன் தொடங்கும் ஒரு பணிப்பாய்வை உருவாக்கி, முந்தைய சரக்கு இருப்பு அளவு 10-ஐ விடக் குறைவாகவோ சமமாகவோ இருந்தால் true என ஆகக்கூடிய ஒரு நிபந்தனையை அமைக்கிறீர்கள். Send internal email செயலின் Message பிரிவில், பின்வரும் மாறிகளைப் பயன்படுத்துகிறீர்கள்.
உருப்படி விவரங்களை வழங்கப் பயன்படும் மாறியின் உதாரணம்.
உள்ளீடு
வெளியீடு
Please reorder {{ product.title }}. Email owner@store.com to verify that they've received the purchase order.
High Waist Leggings - Black உருப்படியை மீண்டும் ஆர்டர் செய்யவும். கொள்முதல் ஆர்டரை அவர்கள் பெற்றுவிட்டார்களா என்பதைச் சரிபார்க்க owner@example.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.
ஒரு மோசடியான ஆர்டர் குறித்துப் பணியாளர்களுக்குத் தெரிவிக்க இயங்குநிலை மின்னஞ்சல் செய்தியை எழுதுதல்
அதிக அபாய நிலையைக் கொண்ட ஆர்டர்களை ரத்து செய்ய நீங்கள் விரும்புகிறீர்கள், ஆனால் உங்கள் பணியாளர்கள் ஆர்டரை மேனுவலாக ரத்து செய்யவே விரும்புகிறீர்கள். Order created தூண்டுதலுடன் தொடங்கும் ஒரு பணிப்பாய்வை உருவாக்கி, ஆர்டரின் அபாய நிலை அதிகமாக இருந்தால் true என ஆகக்கூடிய ஒரு நிபந்தனையை அமைக்கிறீர்கள். Send internal email செயலின் Message பிரிவில், பின்வரும் மாறிகளைப் பயன்படுத்துகிறீர்கள்.
மோசடியான ஆர்டர் பற்றிய தகவலை வழங்கப் பயன்படும் மாறியின் உதாரணம்.
உள்ளீடு
வெளியீடு
Our Shopify store has received an order with a high risk of fraud. We would like to cancel this order right away, before it is sent to production:
{{ order.name }}
{{ order.billingAddress.lastName }}, {{ order.billingAddress.firstName }}
{{ order.email }}
Please confirm the new order status. Thanks!
எங்கள் Shopify ஸ்டோருக்கு மோசடிக்கான அதிக அபாயம் உள்ள ஒரு ஆர்டர் வந்துள்ளது. இந்த ஆர்டர் தயாரிப்புக்கு அனுப்பப்படுவதற்கு முன் உடனடியாக இதை ரத்து செய்ய விரும்புகிறோம்:
#1001
Dupont, Jeanne
jeanne@example.com
புதிய ஆர்டர் நிலையை உறுதிப்படுத்தவும். நன்றி!
for லூப்பைப் பயன்படுத்தி, ஒரு ஆர்டருக்கான வரிசை உருப்படிகளை வெளியிடுதல்
ஒரு ஆர்டர் பெறப்படும்போது, ஆர்டர் செய்யப்பட்ட தயாரிப்புகளைக் கொண்ட ஒரு செய்தியை அனுப்புவது பயனுள்ளதாக இருக்கும். இதைச் செய்ய நீங்கள் for loop ஐப் பயன்படுத்தலாம், இது ஒரு குறியீட்டுத் தொகுதியைத் திரும்பத் திரும்பச் செயல்படுத்தும். மாறிகளை ஆதரிக்கும் உரைப்புலங்கள் for லூப்கள் மற்றும் forloop ஆப்ஜெக்ட் ஆகியவற்றையும் ஆதரிக்கின்றன.
உதாரணத்துக்கு, ஒரு ஆர்டரில் உள்ள அனைத்து SKUகள் மற்றும் அளவுகளின் பட்டியலை வழங்கும் ஒரு பணிப்பாய்வை நீங்கள் உருவாக்க விரும்புகிறீர்கள். Send internal email செயலின் Message பிரிவில், பின்வரும் மாறிகளைப் பயன்படுத்துகிறீர்கள்.
ஆர்டர் தகவலை வழங்கப் பயன்படும் for லூப்பின் உதாரணம்.
உள்ளீடு
வெளியீடு
Order summary:
{% for a in order.lineItems %}
{{a.sku}} ( {{a.quantity}} )
{% endfor %}
கூடுதல் தகவலுடன் ஒரு for லூப்பைப் பயன்படுத்தி, ஒரு ஆர்டருக்கான வரிசை உருப்படிகளை வெளியிடுதல்
தயாரிப்புப் பெயர், SKUகள், உருப்படிக்கான விலை மற்றும் வாடிக்கையாளரின் ஷிப்பிங் தகவல் உட்பட மேலும் பல தகவல்களை மின்னஞ்சலில் சேர்க்க முடிவு செய்கிறீர்கள். Send internal email செயலின் Message பிரிவில், பின்வரும் மாறிகளைப் பயன்படுத்துகிறீர்கள்.
மேலும் விரிவான ஆர்டர் தகவலை வழங்க for loop பயன்படுத்துவதற்கான உதாரணம்.
உள்ளீடு
வெளியீடு
Order summary:
{% for a in order.lineItems %}
Product: {{a.title}}
SKU: {{a.sku}}
Price (per unit): ${{a.originalUnitPriceSet.shopMoney.amount}}
Quantity: {{a.quantity}}
{% endfor %}
ஆர்டர் சுருக்கம்:
தயாரிப்பு: High Waist Leggings - Black
SKU: 8987097979
விலை (ஒரு யூனிட்டிற்கு): $8.49
அளவு: 5
தயாரிப்பு: Athletic Socks - Blue
SKU: 888998898B
விலை (ஒரு யூனிட்டிற்கு): $5.61
அளவு: 2
for loop மற்றும் if statement-ஐ இணைப்பதன் மூலம் சில வரிசை உருப்படிகளை வெளியிடவும்
ஒரு குறிப்பிட்ட விற்பனையாளரால் வழங்கப்பட்ட, விற்கப்பட்ட உருப்படிகளை நீங்கள் தடமறிய வேண்டும். Send internal email செயலின் செய்தி பிரிவில், பின்வரும் மாறிகளைப் பயன்படுத்தி, உங்கள் for loop இல் if கூற்றைச் சேர்க்கவும்.
குறிப்பிட்ட விற்பனையாளர்களுக்கான ஆர்டர் தகவலை வழங்குவதற்கு for loop மற்றும் if statement ஆகியவற்றைப் பயன்படுத்துவதற்கான உதாரணம்.
உள்ளீடு
வெளியீடு
Acme product sold:
{% for x in order.lineItems %}
{% if x.vendor == 'acme-vendor' %}
Product name: {{x.title}}
SKU: {{x.sku}}
{% endif %}
{% endfor %}
விற்கப்பட்ட Acme தயாரிப்பு:
தயாரிப்பின் பெயர்: High Waist Leggings - Black
SKU: 8987097979
Shopify Flow-இல் உள்ள சிக்கலான தரவு ஆப்ஜெக்ட்டுகள்
GraphQL Admin API இல் உள்ள ஏறக்குறைய எந்தவொரு தரவையும் அணுக Flow உங்களை அனுமதிக்கிறது. பட்டியல்கள் மற்றும் ஆப்ஜெக்ட்டுகள் போன்ற சிக்கலான தரவு ஆப்ஜெக்ட்டுகளும் இதில் அடங்கும். இருப்பினும், இந்த ஆப்ஜெக்ட்டுகளைக் கொண்டு உங்களால் என்ன செய்ய முடியும் என்பதில் சில வரம்புகள் உள்ளன. இந்தப் பிரிவு இந்த வரம்புகளைக் கோடிட்டுக் காட்டுவதோடு, அவற்றைக் கொண்டு எவ்வாறு வேலை செய்வது என்பதற்கான உதாரணங்களையும் வழங்குகிறது.
பட்டியல்கள் மற்றும் ஆப்ஜெக்ட்டுகளை நேரடியாக அழைப்பதற்குப் பதிலாக, பட்டியலின் மீது லூப் செய்து உங்களுக்குத் தேவையான புலங்களை மட்டுமே நீங்கள் சேர்க்க வேண்டும்.
உதாரணமாக, {{ order.lineItems }} என்பதை நேரடியாக அழைப்பதற்குப் பதிலாக, குறிப்பிட்ட புலங்களை அழைக்கப் பின்வரும் வடிவமைப்பைப் பயன்படுத்தவும். பட்டியல் அல்லது ஆப்ஜெக்ட்டை நேரடியாக அழைப்பதன் மூலம் சேர்க்கப்படும் அனைத்துப் புலங்களும் இந்த உதாரணங்களில் அடங்கும். உங்களுக்குத் தேவையான புலங்களை நகலெடுத்து ஒட்டவும்.
உரை
{% for li in order.lineItems %}
{% comment %}li.contract - omitted{% endcomment %}