Shopify Partner திட்டத்தைத் தொடங்குதல்

Shopify Partner திட்டத்திற்கு உங்களை வரவேற்கிறோம்!

இந்த ஆவணம் Shopify Partner திட்டம் பற்றிய தகவல்களை உங்களுக்கு வழங்குவதோடு, உங்கள் கிளையண்டுகளுக்குத் தனிப்பயனாக்கப்பட்ட வணிகத் தீர்வுகளை வழங்கும் உலகத்தரம் வாய்ந்த தயாரிப்புடன் பணிபுரிய உங்களை அனுமதிக்கிறது. மில்லியன் கணக்கான வணிகர்கள் Shopify பிளாட்ஃபார்மைப் பயன்படுத்துவதால், Shopify மூலம் உங்கள் வணிகத்தை மேம்படுத்துவதற்கு எண்ணற்ற வாய்ப்புகள் உள்ளன. Shopify பார்ட்னராகத் தொடங்குவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதற்கான சரிபார்ப்புப் பட்டியலும் இதில் உள்ளது. Shopify பற்றி அறிந்துகொள்வது முதல், உங்களுக்குக் கிடைக்கும் கருவிகள் மற்றும் ஆதாரங்களை அணுகுவது வரை, இந்த ஆவணத்தில் பிளாட்ஃபார்மைப் புரிந்துகொள்ளவும் வெற்றிகரமாக அமைத்துக்கொள்ளவும் உதவும் மதிப்புமிக்க தகவல்கள் உள்ளன.

படி 1: திட்டம் பற்றி அறிந்துகொள்ளுங்கள்

Shopify Partner திட்டம் என்பது, இ-காமர்ஸ் இணையதளங்கள், தீம்கள் மற்றும் செயலிகளை உருவாக்க, Shopify பிளாட்ஃபார்மைப் பயன்படுத்தும் வடிவமைப்பாளர்கள், டெவலப்பர்கள், சந்தைப்படுத்துபவர்கள் மற்றும் அஃபிலியேட்டுகளின் பல்வேறுபட்ட குழுவாகும். Shopify பார்ட்னர் என்ற முறையில், உங்கள் வணிகத்தை மேம்படுத்த உதவும் பல்வேறு ஆதாரங்கள் மற்றும் ஆதரவிற்கான அணுகல் உங்களுக்கு இருக்கும். உங்களுக்குக் கிடைப்பவற்றை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள, Shopify Partner திட்டத்தின் பலன்களை மதிப்பாய்வு செய்யுங்கள்.

Shopify பார்ட்னர் என்ற முறையில் உங்களிடமிருந்து எதிர்பார்க்கப்படுபவற்றைப் புரிந்துகொள்வதும் முக்கியமானதாகும். Shopify பார்ட்னராக இருக்க என்னென்ன தேவை என்பது பற்றிய மதிப்புமிக்க தகவல்கள் எங்களின் Shopify Partner திட்ட ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ளன.

படி 2: வருவாய் ஈட்டுவது எப்படி என்று கண்டறியுங்கள்

Shopify இன் Partner திட்டம் மூலமாக நீங்கள் பல வெவ்வேறு வழிகளில் வருவாய் ஈட்டலாம். வணிகர்களுக்காக Shopify ஸ்டோர்களை உருவாக்குவதன் மூலமும் செயலிகள் மற்றும் தீம்களை விற்பனை செய்வதன் மூலமும் நீங்கள் வருவாய் ஈட்டலாம். Shopify இன் அஃபிலியேட் திட்டம் மூலமாகவும் நீங்கள் வருவாய் ஈட்டலாம். நீங்கள் அஃபிலியேட் திட்டத்திற்கு விண்ணப்பித்து ஒப்புதல் பெற்ற பிறகு, உங்களின் பிரத்தியேக அஃபிலியேட் இணைப்பைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்களை Shopify-க்குப் பரிந்துரைப்பதன் மூலம் வருவாய் ஈட்ட முடியும். உங்கள் இணைப்பு வழியாகக் கட்டணச் செலுத்தும் Shopify திட்டத்திற்குச் சந்தாதாரராகும் ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் உங்களுக்கு அஃபிலியேட் பரிந்துரை கமிஷன் வழங்கப்படும்.

நீங்கள் ஈட்டும் வருவாய் என்பது நீங்கள் என்ன உருவாக்குகிறீர்கள், கிளையண்டுகளை எப்படிப் பரிந்துரைக்கிறீர்கள் மற்றும் எந்த வகையான வணிகர்களை Shopify-க்குப் பரிந்துரைக்கிறீர்கள் என்பதைப் பொறுத்து அமையும். வருவாய் ஈட்டப்படும், கணக்கிடப்படும் மற்றும் வழங்கப்படும் பல்வேறு வழிகளின் விவரங்களுக்கு, Shopify பார்ட்னராக வருவாய் ஈட்டுவது எப்படி என்பதை மதிப்பாய்வு செய்வதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.

படி 3: சமூகத்தில் சேருங்கள்

Shopify Partner திட்டத்தில், நீங்கள் ஈடுபடுவதற்கு ஆதரவான மற்றும் செயலில் உள்ள சமூகம் உள்ளது. வணிக வளர்ச்சியின் அனைத்துக் கட்டங்களிலும் உள்ள கூட்டாளர்களிடமிருந்து கற்றுக்கொள்வதற்கும், தொழில்நுட்ப ஆலோசனைகள் மற்றும் உதவியைப் பெறுவதற்கும், உலகம் முழுவதும் உள்ள உங்களுடன் பணியாற்றுபவர்களோடு ஈகாமர்ஸின் சமீபத்திய ட்ரெண்டுகள் குறித்துக் கலந்துரையாடுவதற்கும் இந்தச் சமூகம் சிறந்த இடமாகும். கூட்டாளர்கள் மற்றும் டெவலப்பர்களுக்கான Shopify சமூகம் மூலம் Shopify மற்றும் கூட்டாளர் சமூகத்துடன் இணைவதற்கான வழிகள் பற்றி நீங்கள் மேலும் அறிந்துகொள்ளலாம்.

கூட்டாளர்கள் மற்றும் டெவலப்பர்களுக்கான Shopify சமூகம் என்பது ஒரு ஆன்லைன் கருத்துக்களமாகும், இதில் பிற Shopify பார்ட்னர்கள் எப்போதும் உதவத் தயாராக இருப்பார்கள். உங்கள் துறை சார்ந்த மேலும் பல நிபுணர்களைச் சந்திப்பதற்கும், உங்கள் சக பணியாளர்களிடமிருந்து கற்றுக்கொள்வதற்கும், Shopify Partners குழுவின் உறுப்பினர்களுடன் நேரடியாக இணைவதற்கும் இது சிறந்த சேனலாகச் செயல்படும்.

இந்தச் சேனல்கள் மூலமாக நீங்கள் பிற Shopify பார்ட்னர்களுடன் இணைக்கலாம்:

படி 4: உங்கள் இணையதளத்தில் Shopify பார்ட்னர் பிராண்டிங்கைச் சேருங்கள்

இப்போது நீங்கள் Shopify பார்ட்னர் என்பதால், அதை உங்கள் கிளையண்டுகளுக்குத் தெரியப்படுத்தலாம். சாத்தியமான கிளையண்டுகளிடம் உங்களின் இணைப்பைக் காட்டவும், நம்பகத்தன்மை மற்றும் நம்பிக்கையை வளர்க்கவும் உங்கள் இணையதளத்தில் Shopify பிராண்டிங்கைச் சேருங்கள்.

படி 5: Shopify பார்ட்னராக இருப்பதன் பலன்களை அணுகுங்கள்

Shopify பார்ட்னராக இருப்பது, உங்கள் வணிகத்தை மேம்படுத்தவும் வெற்றி பெறவும் உதவும் அனைத்து வகையான பலன்களுக்குமான அணுகலை உங்களுக்கு வழங்குகிறது. நீங்கள் இப்போது பயன்படுத்தக்கூடிய சில ஆதாரங்களின் தொகுப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

டெவ் ஸ்டோர்கள்

டெவ் ஸ்டோர் என்பது கட்டணமில்லா Shopify ஸ்டோர் ஆகும், இதை நீங்கள் உருவாக்கும் செயலிகள் அல்லது தீம்களுக்கான பரிசோதனைக் களமாகப் பயன்படுத்தலாம். டெவ் ஸ்டோர்கள் Dev Dashboard ஐப் பயன்படுத்தி உருவாக்கப்படுகின்றன.

டெவ் ஸ்டோர்களைப் பயன்படுத்துவது பற்றி மேலும் அறிக.

கிளையண்ட் பரிமாற்ற ஸ்டோர்கள்

கிளையண்ட் பரிமாற்ற ஸ்டோர் என்பது கட்டணமில்லா Shopify கணக்காகும், இது Advanced திட்டத்தின் அனைத்து அம்சங்களுடனும் எங்களின் Shopify Plus திட்டத்தின் சில அம்சங்களுடனும் சேர்ந்து, வரம்பற்ற சோதனைக் காலங்களுடன் வருகிறது. கிளையண்டிற்கான ஒரு ஸ்டோரை அமைக்க, நீங்கள் கிளையண்ட் பரிமாற்ற ஸ்டோரைப் பயன்படுத்தலாம்.

கிளையண்ட் பரிமாற்ற ஸ்டோர்களைப் பயன்படுத்துவது பற்றி மேலும் அறிக.

கூட்டுப்பணியாளர் கணக்குகள்

வணிகரின் பணியாளர் வரம்பைப் பாதிக்காமல், வணிகரின் ஸ்டோரில் நீங்கள் பணியாற்றும் பகுதிகளை அணுக கூட்டுப்பணியாளர் கணக்குகள் உங்களை அனுமதிக்கின்றன. ஸ்டோர் முழுவதற்கும் அணுகலைப் பெற வேண்டிய அவசியமின்றி, உங்களுக்குத் தேவையான ஸ்டோரின் பகுதிகளை மட்டுமே மாற்றியமைக்க கூட்டுப்பணியாளர் கணக்குகள் அனுமதிக்கின்றன.

கூட்டுப்பணியாளர் கணக்குகள் மற்றும் உங்கள் கிளையண்டுகளின் தற்போதைய ஸ்டோர்களை அணுகுவது பற்றி மேலும் அறிக.

உங்களுக்குத் தேவைப்படும்போது உதவியைப் பெறுங்கள்

Shopify பார்ட்னராக உங்களின் பயணத்தில் நீங்கள் எப்போதாவது சிக்கிக்கொண்டதாக உணர்ந்தால், உடனே எளிதாக உதவி பெற்றுக்கொள்ளலாம். கேள்விகளைக் கேட்கவும் பதில்களைப் பெறவும் சில வெவ்வேறு வழிகள் உள்ளன:

  • Shopify உதவி மையம் பெரும்பாலான கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியும்: தேடல் பட்டியில் உங்கள் சிக்கலை டைப் செய்து, தொழில்நுட்பச் சிக்கல்கள் முதல் உங்கள் டாஷ்போர்டுக்குச் செல்வது வரையிலான அனைத்திற்கும் உதவக்கூடிய ஆதாரங்களைக் கண்டறியலாம். Shopify பற்றி அறிந்துகொள்ளவும் தீமை உருவாக்கவும் உதவும் ஆவணங்களும் உள்ளன
  • Shopify இன் APIகளுடன் நீங்கள் தொடங்க shopify.dev உதவும்.
  • Shopify பார்ட்னராக, உதவி மையத்திலிருந்து உங்கள் கூட்டாளர் கணக்கில் உள்நுழைந்து, பின்னர் அரட்டை அல்லது மின்னஞ்சல் ஆதரவை இரண்டுலொன்றைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் Shopify ஆதரவைத் தொடர்புகொள்ளலாம். நீங்கள் உள்நுழையும்போது, உங்கள் கூட்டாளர் கணக்கு தொடர்பான கேள்விகளுக்கு உங்கள் கூட்டாளர் நிறுவனப் பெயரையோ ஸ்டோர்கள் தொடர்பான கேள்விகளுக்கு டெவலப்மெண்ட் ஸ்டோரையோ தேர்ந்தெடுக்கலாம். Partner திட்டத்திற்குச் செல்லவும், உங்கள் கிளையண்டுகளின் சிக்கல்களைத் தீர்க்கவும், உங்களின் பார்ட்னர் வணிகத்தை மேம்படுத்தவும் Shopify ஆதரவு உதவலாம்.
  • கூட்டாளர்கள் மற்றும் டெவலப்பர்களுக்கான Shopify சமூகத்தில் உங்களின் கேள்வியைக் கேட்கலாம். மேலும் உங்களைப் போன்றே பயணத்தில் உள்ள பிற Shopify பார்ட்னர்கள் மற்றும் டெவலப்பர்களிடமிருந்து உதவி மற்றும் வழிகாட்டுதலைப் பெறலாம்.
  • Shopify சமூகக் கருத்துக்களங்களில் நீங்கள் உங்களின் கேள்வியைக் கேட்கலாம், பிற Shopify பயனர்களிடமிருந்து உதவியும் வழிகாட்டுதலும் பெறலாம்.

படி 6: உங்கள் போர்ட்ஃபோலியோவைப் புதுப்பியுங்கள்

சாத்தியமான கிளையண்டுகளுடன் நம்பிக்கையை உருவாக்குவது என்பது, நீங்கள் எந்த வகையான பணிகளைச் செய்ய முடியும் என்பதை அவர்களுக்கு நிரூபிப்பதையும் குறிக்கும். Shopify பார்ட்னராக, கிளையண்டுகளுடன் பகிர, புதுப்பிக்கப்பட்ட மற்றும் முன்மாதிரியான போர்ட்ஃபோலியோவை வைத்திருப்பது உண்மையில் மதிப்புமிக்கதாகும். உங்கள் போர்ட்ஃபோலியோவில் உங்களின் மிகச்சிறந்த பணிகள் இடம்பெற்றிருக்க வேண்டும். மேலும், கிளையண்டுகளுக்கு நீங்கள் தொடர்ந்து வழங்கும் பணிகளின் தரத்தை அது குறிக்க வேண்டும்.

கீழே உள்ள ஆதாரங்கள் சிறப்பான போர்ட்ஃபோலியோவை உருவாக்க உங்களுக்கு உதவும்:

படி 7: இன்றே தொடங்குங்கள்

Shopify பார்ட்னராகத் தொடங்குவதற்கான சிறந்த வழி, ஒரு கிளையண்ட் பரிமாற்ற ஸ்டோரை உருவாக்கி, அதன் செயல்பாடுகளைப் பற்றி அறிந்துகொள்வதாகும். உங்கள் கிளையண்டுகள் Shopify-ஐ எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் மற்றும் Shopify பார்ட்னராக உங்களால் என்ன செய்ய முடியும் ஆகிய இரண்டையும் பற்றி நன்கு தெரிந்துகொள்ள இது உதவும்.

உங்கள் Dev Dashboard-இலிருந்தே கிளையண்ட் பரிமாற்ற ஸ்டோரை நீங்கள் உருவாக்கலாம். இதுபற்றி அறிய, கிளையண்ட் பரிமாற்ற ஸ்டோர்கள் என்பதைப் பார்க்கவும்.