அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
வடிவமைப்பாளர்கள், டெவலப்பர்கள், சந்தைப்படுத்துபவர்கள் மற்றும் இன்ஃப்ளூயன்சர்கள் உள்ளிட்ட எங்கள் உலகளாவிய பார்ட்னர் வலையமைப்புக்கு, Shopify உடன் இணைந்து வெற்றிகரமான வணிகங்களை உருவாக்குவதற்குத் தேவையான கருவிகளை Shopify Partner திட்டம் வழங்குகிறது. ஒரு பார்ட்னராக, நீங்கள் பின்வருபவை உள்ளிட்ட பல பலன்களைப் பெறுவீர்கள்:
- டெவலப்மெண்ட் ஸ்டோர்கள்: செயலிகள் மற்றும் தீம்களை உருவாக்குவதற்கான ஸ்டோர்கள் அல்லது கிளையண்ட் கட்டமைப்புக்கான ஸ்டோர்களை உருவாக்கலாம்.
- விரிவான ஆவணங்கள்: Shopify பிளாட்ஃபார்மைப் புரிந்துகொள்ளவும் திறம்படப் பயன்படுத்தவும் உதவும் ஆழமான ஆதாரங்களை அணுகலாம்.
- பல வருவாய் ஆதாரங்கள்: வெவ்வேறு சேவைகள் மற்றும் தயாரிப்பு வழங்கல்கள் மூலம் வருமானம் ஈட்டுவதற்கான பல்வேறு வழிகளை ஆராயலாம்.
- உள்நிலை நுண்ணறிவுகள்: எங்களின் தயாரிப்பு மேம்பாட்டுத் திட்டம் மற்றும் வரவிருக்கும் அம்ச வெளியீடுகள் குறித்து அறிந்துகொள்ளலாம்.
- 24/7 ஆதரவு: இரவோ பகலோ, உங்களுக்குத் தேவைப்படும்போதெல்லாம் உதவியைப் பெறலாம்.
- இலவசமாகத் தேவைக்கேற்பப் பயிற்சி: உங்கள் Shopify அறிவை மேம்படுத்தவும் உங்கள் வணிகத்தை வளர்க்கவும் பயிற்சி ஆதாரங்களைப் பயன்படுத்தலாம்.
Shopify Partner சமூகத்தில் சேருவது அல்லது தொடங்குவது குறித்து ஏதேனும் கேள்விகள் இருந்தால், அடிக்கடி கேட்கப்படும் பின்வரும் கேள்விகளைப் பார்க்கவும்:
- Shopify Partner திட்டம்: Shopify Partner திட்டத்தின் அடிப்படைகளைக் கண்டறிந்து, பொதுவான கேள்விகளுக்கான பதில்களைப் பெறலாம்.
- Shopify Partner வருவாய் ஈட்டும் மாதிரி குறித்த FAQ: பரிந்துரைக்கான பேஅவுட்கள், வருவாய் பகிர்வு மற்றும் Shopify POS, Shopify B2B ஊக்கத்தொகைகள் போன்ற பொதுவான கேள்விகளுக்கான பதில்களைக் கண்டறியலாம்.
- பார்ட்னர் திட்ட ஒப்பந்தப் புதுப்பிப்புகள்: பார்ட்னர் திட்ட ஒப்பந்தத்தில் செய்யப்பட்ட சமீபத்திய புதுப்பிப்புகள் மற்றும் உங்கள் வணிகத்தில் அவை ஏற்படுத்தும் தாக்கங்கள் பற்றிப் புரிந்துகொள்ளலாம்.
- செயலி மற்றும் பார்ட்னர் கணக்கு அகற்றுதல்: பிளாட்ஃபார்மில் இருந்து உங்கள் செயலி அல்லது பார்ட்னர் கணக்கு ஏன் அகற்றப்படலாம் என்பதையும் அடுத்து என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும் அறிந்துகொள்ளலாம்.
- Shopify App மற்றும் Theme ஸ்டோர்களில் உள்ள மதிப்பாய்வுகளுக்கான கொள்கைகள்: மதிப்பாய்வுக் கொள்கைகள் மற்றும் விதிமீறல்களை Shopify எப்படிக் கையாள்கிறது என்பதை அறிந்துகொள்ளலாம்.
மேலும் உதவி தேவையா?
நீங்கள் தேடும் பதில்களைக் கண்டறிய முடியவில்லை எனில், Shopify ஆதரவைத் தொடர்புகொள்ளலாம். தொடர்புகொள்ள, உதவி மையத்தில் இருந்து உங்கள் பார்ட்னர் கணக்கில் உள்நுழைந்து, அரட்டை அல்லது மின்னஞ்சல் ஆதரவைத் தேர்வுசெய்யவும். உள்நுழையும்போது, உங்கள் பார்ட்னர் கணக்குத் தொடர்பான கேள்விகளுக்கு உங்கள் பார்ட்னர் நிறுவனத்தைத் தேர்ந்தெடுக்கவும் அல்லது Shopify ஸ்டோர்கள் தொடர்பான விசாரணைகளுக்கு டெவலப்மெண்ட் ஸ்டோரைத் தேர்வுசெய்யவும். பார்ட்னர் திட்டத்தில் செல்லவும், கிளையண்ட் சிக்கல்களைத் தீர்க்கவும் உங்கள் பார்ட்னர் வணிகத்தை வளர்க்கவும் Shopify ஆதரவு உங்களுக்கு உதவும்.