ஆர்டர் மேலாண்மை, நிறைவேற்றம்

உங்கள் Shopify ஸ்டோரிலிருந்து வாடிக்கையாளர் ஆர்டர்களைச் செயல்படுத்துதல், நிர்வகித்தல், ஷிப்பிங் செய்தல் போன்றவற்றின் பணிப்பாய்வே ஆர்டர் நிறைவேற்றமாகும். ஷிப்பிங் உள்ளமைவை அமைத்தல், உள்வரும் ஆர்டர்களை நிர்வகித்தல், வாடிக்கையாளர்களுக்குப் பேக்கேஜ்களை அனுப்புதல் ஆகியவை இதில் அடங்கும்.

ஷிப்பிங் அமைப்புகளை உள்ளமைத்தல்

ஆர்டர்களை நிறைவேற்றுவதற்கு முன்பு, ஷிப்பிங் கட்டணங்கள், ஷிப்பிங் சுயவிவரங்கள், நிறைவேற்றும் இடங்கள் உள்ளிட்ட ஷிப்பிங் மற்றும் நிறைவேற்ற அமைப்புகளை நீங்கள் அமைக்க வேண்டும். செக்அவுட்டில் ஷிப்பிங் செலவுகள் எப்படிக் கணக்கிடப்படும் என்பதையும், எந்தெந்த இடங்கள் ஆர்டர்களை நிறைவேற்றலாம் என்பதையும் இந்த அமைப்புகளே தீர்மானிக்கின்றன.

வாடிக்கையாளர் ஆர்டர்களைச் செயல்படுத்துதல்

வாடிக்கையாளர்கள் ஆர்டர்களை அளித்த பிறகு, உங்களின் Shopify நிர்வாகியில் உள்ள ஆர்டர்கள் பக்கத்திலிருந்து நீங்கள் ஆர்டர்களை நிர்வகிக்கலாம். இதில் பேமெண்ட்களைப் பெறுதல், ஆர்டர் விவரங்களை மதிப்பாய்வு செய்தல், ஷிப்பிங் ஆவணங்களை அச்சிடுதல், உருப்படிகளை நிறைவேற்றத்திற்குத் தயார் செய்தல் ஆகியவை அடங்கும். தேவைப்படும்போது நீங்கள் ஆர்டர்களைத் திருத்தலாம், பணத்தைத் திரும்ப வழங்கலாம் அல்லது ஆர்டர்களை ரத்துசெய்யலாம்.

ஆர்டர்களை நிறைவேற்றுதல்

ஒரு ஆர்டரைத் தயார்செய்த பிறகு, உங்கள் வாடிக்கையாளருக்கு உருப்படிகளைத் தேர்வுசெய்து, பேக்கிங் செய்து, ஷிப்பிங் செய்வதன் மூலம் அதை நிறைவேற்றலாம். ஆர்டர்களை நீங்களே நிறைவேற்றலாம், ஒரு மூன்றாம் தரப்புச் செயலியைப் பயன்படுத்தலாம் அல்லது Shopify Fulfillment Network போன்ற ஒரு நிறைவேற்றச் சேவையைப் பயன்படுத்தலாம்.

ஒருங்கிணைக்கப்பட்ட ஷிப்பிங் கேரியர்கள் வாயிலாக, உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து நேரடியாக ஷிப்பிங் லேபிள்களை வாங்கலாம், அச்சிடலாம். உங்களின் நிறைவேற்றச் செயல்முறையை முறைப்படுத்தவும் வாடிக்கையாளர்களுக்குத் தடமறியும் தகவல்களை வழங்கவும் தபால் நிலையம் அல்லது ஷிப்பிங் வழங்குநரிடம் செல்வதைத் தவிர்த்து நேரத்தை மிச்சப்படுத்தவும் ஷிப்பிங் லேபிள்கள் உதவுகின்றன.

இந்தப் பிரிவில்