Shopify Flow-இல் பணிப்பாய்வுகளை உருவாக்குதல்

Shopify Flow-ஐப் பயன்படுத்த, ஒரு பணிப்பாய்வை உருவாக்கவும். நீங்கள் புதிய பணிப்பாய்வை மேனுவலாக அல்லது ஏற்கெனவே உருவாக்கப்பட்ட வார்ப்புருவைப் பயன்படுத்தி உருவாக்கலாம். தொடங்குவதற்குச் சில எடுத்துக்காட்டுகளைப் பார்க்கவும்.

Shopify Flow-இல் நீங்கள் உருவாக்கும் பணிப்பாய்வுகள் பின்வரும் முக்கியக் கூறுகளைக் கொண்டிருக்கலாம்:

பணிப்பாய்வில் உள்ள கூறுகள், அவற்றின் பொருள் அல்லது செயல்பாடு மற்றும் அவற்றைப் பயன்படுத்துவதற்கான எடுத்துக்காட்டுகளின் பட்டியல்.
பணிப்பாய்வுக் கூறுவிளக்கம்எடுத்துக்காட்டு
தூண்டுதல்கள்தூண்டுதல் என்பது ஒரு பணிப்பாய்வைத் தொடங்கும் நிகழ்வாகும், இது உங்கள் ஸ்டோரிலோ அல்லது ஒரு செயலியிலோ நடக்கும் விஷயமாக இருக்கலாம். தூண்டுதல் என்பது Shopify-இல் உள்ள ஒரு உள் நிகழ்வாகவோ, குறிப்பிட்ட நேரம் மற்றும் தேதியாகவோ அல்லது மூன்றாம் தரப்புச் செயலியிலுள்ள ஒரு வெளி நிகழ்வாகவோ இருக்கலாம். ஒவ்வொரு தூண்டுதலுக்கும், உங்கள் பணிப்பாய்வில் பயன்படுத்தக்கூடிய தொடர்புடைய செயல்களின் பட்டியல் உள்ளது.உங்கள் ஸ்டோரில் புதிய ஆர்டர் உருவாக்கப்படும்போது, ஒரு பணிப்பாய்வு தூண்டப்படும்.
நிபந்தனைகள்நீங்கள் அமைக்கும் அளவுகோல்களின் அடிப்படையில், ஒரு செயல் மேற்கொள்ளப்பட வேண்டுமா என்பதை நிபந்தனை தீர்மானிக்கிறது. தூண்டுதல் நிகழ்வின் பண்புகளையும், ஆர்டர்கள், தயாரிப்புகள், வாடிக்கையாளர்கள் போன்ற நிகழ்வில் தொடர்புடைய பொருட்களின் பண்புகளையும் அவை சரிபார்க்க முடியும்.ஆர்டருக்குச் செலுத்தப்பட்ட மொத்தத் தொகை $200 USD-க்கு அதிகமாக உள்ளதா என்பதைச் சரிபார்க்கும் வகையில் நிபந்தனை அமைக்கப்படுகிறது.
செயல்கள்ஒரு செயலால் உங்கள் ஸ்டோரில் மாற்றங்களைச் செய்ய முடியும், பணிப்பாய்வில் உள்ள தரவைப் பாதிக்க முடியும் அல்லது வெளிப்புறச் செயலி அல்லது சேவையுடன் ஏதேனும் ஒன்றைச் செய்ய முடியும். செயல்களால் ஆர்டர் டேக்குகளைச் சேர்க்கலாம், வாடிக்கையாளர் டேக்குகளை அகற்றலாம் அல்லது நிறைவேற்ற ஆர்டர்களை நிறுத்தி வைக்கலாம். செயல்களால் மின்னஞ்சல்களை அனுப்பவும் அல்லது வெளிச் சேவைகளுக்கு HTTP கோரிக்கைகளை அனுப்பவும் முடியும்.
கனெக்டர்கள்கனெக்டர்கள் என்பவை Slack அல்லது Google Sheets போன்ற மூன்றாம் தரப்புச் சேவைகளின் அம்சங்களை ஆதரிக்கும் Flow வழங்கும் செயல்களாகும்.கனெக்டர்கள் Slack மெசேஜ்களை அனுப்பலாம் அல்லது Google Sheets-இல் ஒரு வரிசையைச் சேர்க்கலாம்.

ஒரு பணிப்பாய்வில் ஒரே நேரத்தில் 1 தூண்டுதல் மட்டுமே இருக்க முடியும், ஆனால் அந்தத் தூண்டுதலுக்குப் பிறகு நிகழும் நிபந்தனைகள் அல்லது செயல்கள் எத்தனை வேண்டுமானாலும் இருக்கலாம். ஒரு செயல் நடைபெறுவதற்கு முன்பு உங்களுக்குப் பல நிபந்தனைகள் தேவைப்படலாம், எந்தெந்த நிபந்தனைகள் பூர்த்தியாகின்றன என்பதைப் பொறுத்து வெவ்வேறு செயல்கள் நடைபெறுமாறு நீங்கள் அமைக்கலாம்.

சில சமயங்களில், நீங்கள் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் பணிப்பாய்வை இயக்க வேண்டியிருக்கலாம் அல்லது அட்டவணைகள், தரவைப் பெறுதல் மற்றும் லூப்பிங் ஆகியவற்றைப் பயன்படுத்தித் தரவுகளின் பட்டியலைக் கையாள வேண்டியிருக்கலாம்.

பணிப்பாய்வை உருவாக்கும்போது, பெரும்பாலும் GraphQL Admin API அடிப்படையிலான புலம் பெயர்கள் மற்றும் விளக்கங்களை நீங்கள் காண நேரிடும், ஆனால் API மூலம் எந்தத் தரவு வெளியீடாகக் கிடைக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள, நீங்கள் தரவை முன்னோட்டமிட வேண்டியிருக்கலாம்.

பணிப்பாய்வைத் திருத்தும்போது அல்லது இயக்கும்போது பிழைகள் ஏற்பட்டால், அந்தப் பிழைகளைத் தீர்க்கப் பல வழிகள் உள்ளன.

இந்தப் பிரிவில்