தொடங்குதல்
என்ன தயாரிப்புகளை நீங்கள் விற்கப் போகிறீர்கள் என்பதும் உங்கள் ஸ்டோர் எப்படிக் காட்சியளிக்கப்போகிறது என்பதும் நீங்கள் உங்கள் ஸ்டோருக்காக எடுக்கப்போகும் இரண்டு மிக முக்கியமான முடிவுகளாகும். தொடங்க, உங்கள் முதல் தயாரிப்பைச் சேர்க்கவும், எது சிறப்பாகத் தோன்றுகிறது என்பதைத் தீர்மானிக்கச் சில வித்தியாசமான தீம்களை முயன்று பார்க்கவும், பின்னர் உங்கள் ஸ்டோருக்கான டொமைனை அமைக்கவும்.
இந்தப் பக்கத்தில்
உங்கள் முதல் தயாரிப்பைச் சேர்க்கவும்
உங்கள் Shopify நிர்வாகியில் உள்ள தயாரிப்புகள் பக்கத்திலிருந்து நேரடியாக தயாரிப்புகளைச் சேர்க்கலாம் மற்றும் புதுப்பிக்கலாம். என்ன தயாரிப்புகளை விற்பது என்பது குறித்த யோசனைகளை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால், Shopify வலைப்பதிவைப் பார்க்கலாம்.
படிகள்:
டெஸ்க்டாப்
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, தயாரிப்புகள் என்பதற்குச் செல்லவும்.
தயாரிப்புகள் பக்கத்திலிருந்து, தயாரிப்பைச் சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.
உங்கள் தயாரிப்பிற்கான தலைப்புடன், கூடுதல் விவரங்களையும் உள்ளிடவும்.
சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
மொபைல்
- Shopify செயலியில்,
ஐகானைத் தட்டவும் .
ஐகானைத் தட்டவும்.
- உங்கள் தயாரிப்பிற்கான தலைப்புடன், கூடுதல் விவரங்களையும் உள்ளிடவும்.
- சேமி அல்லது ✓ என்பதைத் தட்டவும்.
தீம் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்
நீங்கள் தொடங்குவதற்கு உதவும் வகையில், நீங்கள் Shopify இல் கணக்கைத் திறக்கும்போது உங்கள் நிர்வாகியின் தீம்கள் பக்கத்தில் ஒரு இயல்புநிலை தீம் அமைக்கப்பட்டிருக்கும். உங்கள் ஆன்லைன் ஸ்டோருக்கு வேறொரு தீமைத் தனிப்பயனாக்க விரும்பினால், அதை உங்கள் நிர்வாகியில் சேர்க்க வேண்டும்.
உங்கள் ஆன்லைன் ஸ்டோருக்கான தீமைச் சேர்க்க:
- நிர்வாகியிலிருந்தே இலவச தீமைச் சேர்க்கலாம்.
- Shopify Theme Store இலிருந்து கட்டண தீமை நீங்கள் வாங்கலாம். கட்டண தீம்களை உங்கள் ஆன்லைன் ஸ்டோரில் வெளியிடுவதற்கு முன்பு அவற்றை வாங்க வேண்டும் என்றாலும், வாங்குவதற்கு முன்பு கட்டண தீமை நீங்கள் சோதித்துப் பார்க்கலாம்.
நிர்வாகியிலிருந்து இலவச தீமைச் சேர்க்கவும்
இலவச தீம்கள் Shopify ஆல் உருவாக்கப்படுகின்றன. இலவச தீம்களைத் தனிப்பயனாக்குவது தொடர்பான உதவிகள் Shopify ஆல் வழங்கப்படுகின்றன.
படிகள்:
டெஸ்க்டாப்
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, ஆன்லைன் ஸ்டோர் என்பதற்குச் செல்லவும்.
பக்கத்தின் கீழ்ப்பகுதியில் உள்ள இலவச தீம்கள் பிரிவில், இலவச தீம்களை ஆராய் என்பதைக் கிளிக் செய்யவும். அனைத்து இலவச தீம்களையும் கொண்ட சாளரம் தோன்றும்.
எந்தவொரு தீமின் அம்சங்களைப் பற்றிப் படிக்கவும், கிடைக்கக்கூடிய தீம் பாணிகளை முன்பார்வை பார்க்கவும் அதைக் கிளிக் செய்யவும்.
தீமிற்கான சேர் பொத்தானைக் கிளிக் செய்யவும். உங்கள் நிர்வாகியின் தீம்கள் பக்கத்தில் அந்தத் தீம் சேர்க்கப்படும்.
மொபைல்
Shopify செயலியில்,
ஐகானைத் தட்டவும்.
விற்பனைச் சேனல்கள் பிரிவில், ஆன்லைன் ஸ்டோர் > அனைத்துத் தீம்களையும் நிர்வகி என்பதைத் தட்டவும்.
பக்கத்தின் கீழ்ப்பகுதியில் உள்ள இலவச தீம்கள் பிரிவில், இலவச தீம்களை ஆராய் என்பதைத் தட்டவும். அனைத்து இலவச தீம்களையும் கொண்ட சாளரம் தோன்றும்.
எந்தவொரு தீமின் அம்சங்களைப் பற்றிப் படிக்கவும், கிடைக்கக்கூடிய தீம் பாணிகளை முன்பார்வை பார்க்கவும் அதைத் தட்டவும்.
தீமிற்கான சேர் பொத்தானைத் தட்டவும். உங்கள் நிர்வாகியின் தீம்கள் பக்கத்தில் அந்தத் தீம் சேர்க்கப்படும்.
Theme Store இலிருந்து ஒரு தீமைச் சேர்க்கவும்
கட்டண தீம்கள் மூன்றாம் தரப்பு வடிவமைப்பாளர்களால் உருவாக்கப்படுகின்றன. மூன்றாம் தரப்பு தீம்களைத் தனிப்பயனாக்குவது தொடர்பான உதவிகள் தீம் வடிவமைப்பாளரால் வழங்கப்படுகின்றன.
படிகள்:
- Shopify Theme Store க்குச் சென்று ஒரு தீமைத் தேர்ந்தெடுக்கவும். நீங்கள் இன்னும் இலவசச் சோதனைக் காலத்தில்தான் இருக்கிறீர்கள் என்றால், கட்டணம் செலுத்துவதைத் தவிர்க்க ஒரு இலவச தீமைத் தேர்ந்தெடுக்கவும்.
- நீங்கள் இலவச தீமைத் தேர்ந்தெடுத்திருந்தால், தீமைச் சேர் அல்லது இந்தத் தீமுடன் தொடங்கு என்பதைக் கிளிக் செய்யவும். நீங்கள் கட்டண தீமைத் தேர்ந்தெடுத்திருந்தால், அதை வாங்க தீமை வாங்கு என்பதைக் கிளிக் செய்யவும். கட்டண தீம்கள் திரும்பப் பெற முடியாதவை. உங்கள் தேவைகளுக்கு ஏற்ப அது பொருந்துமா என்பதை உறுதிசெய்ய, வாங்குவதற்கு முன்பு கட்டண தீமை நீங்கள் சோதித்துப் பார்க்கலாம்.
- கட்டண தீம்களுக்கு, பேமெண்ட்டுக்கு ஒப்புதலளிக்க கட்டணத்திற்கு ஒப்புதலளி என்பதைக் கிளிக் செய்யவும். உங்கள் நிர்வாகியின் தீம்கள் பக்கத்தில் அந்தத் தீம் சேர்க்கப்படும்.
உங்கள் ஸ்டோரில் ஒரு கட்டண தீமைச் சோதித்துப் பார்க்கவும்
தீமை வாங்குவதற்கு முன்பாக, அது உங்கள் தயாரிப்புகள், பிராண்ட் நிறங்கள் மற்றும் பாணியுடன் எப்படிக் காட்சியளிக்கும் என்பதை முன்பார்வை பார்க்க ஒரு கட்டண தீமை நீங்கள் சோதித்துப் பார்க்கலாம். தீமை முன்பார்வை பார்க்கும்போது, தீம் எடிட்டரைப் பயன்படுத்தி நீங்கள் தனிப்பயனாக்கங்களைச் செய்யலாம். நீங்கள் செய்யும் மாற்றங்கள் ஏதேனுமிருந்தால் தீமை வாங்கும்போது அவை சேமிக்கப்படும். வாங்குவதற்கு முன்பு வெவ்வேறு தீம்களை ஒப்பிட்டுப் பார்க்க உங்களை அனுமதிக்கும் வகையில், நீங்கள் 19 கட்டண தீம்கள் வரை முன்பார்வை பார்க்கலாம்.
படிகள்:
- Shopify Theme Store க்குச் சென்று ஒரு கட்டண தீமைத் தேர்ந்தெடுக்கவும்.
- தீமைச் சோதித்துப் பார் என்பதைக் கிளிக் செய்யவும். உங்கள் ஆன்லைன் ஸ்டோருக்கான தீமின் முன்பார்வை ஏற்றப்படும். பக்கத்தின் கீழ்ப்பகுதியில் உள்ள கருவிப்பட்டியில் மூன்று பொத்தான்கள் இருக்கும்: முன்பார்வையை மூடு, தீமை வாங்கு மற்றும் தீமைத் திருத்து.
- பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யவும்:
- தீமை முன்பார்வை பார்ப்பதை நிறுத்த, முன்பார்வையை மூடு என்பதைக் கிளிக் செய்யவும்.
- தீமை வாங்க, தீமை வாங்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
- தீம் எடிட்டரைப் பயன்படுத்தி தீம் அமைப்புகளை மாற்றியமைக்க, தீமைத் திருத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
கட்டண தீமை வாங்க வேண்டாம் என நீங்கள் முடிவுசெய்தாலும், உங்கள் நிர்வாகியின் தீம்கள் பக்கத்தில் அது சேர்க்கப்படும். நீங்கள் சோதித்துப் பார்க்கும் கட்டண தீம்களில் தீம் சோதனை என்ற லேபிள் இருக்கும்.
உங்கள் ஸ்டோருக்கான டொமைனை அமைக்கவும்
உங்கள் ஸ்டோரின் டொமைன் என்பது உங்கள் வாடிக்கையாளர்கள் உங்கள் ஆன்லைன் ஸ்டோரைக் கண்டறியச் செல்லும் URL அல்லது இணையதள முகவரியாகும். உங்கள் ஸ்டோருக்குப் புதிய டொமைனை நீங்கள் வாங்கலாம் அல்லது ஏற்கனவே உள்ள டொமைனை இடமாற்றலாம்.
Shopify இலிருந்து புதிய டொமைனை வாங்கவும்
- Shopify மூலம் உங்கள் டொமைனைக் கொள்முதல் செய்யவும்.
- தவறுதலாக உங்கள் டொமைன் பதிவு காலாவதியாகாமல் இருக்க, தானியங்குப் புதுப்பித்தலைச் செயல்படுத்தவும்.
- வாடிக்கையாளர்களின் உலாவி, தேடல் முடிவுகள் மற்றும் சமூக ஊடகங்களில் உங்கள் டொமைனே காட்டப்படுவதை உறுதிசெய்ய, உங்கள் Shopify டொமைனை உங்கள் முதன்மை டொமைனாக அமைக்கவும்.
- உங்கள் வாடிக்கையாளர்கள் உங்களின்
@mycustomdomain.comமுகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பும் வகையில், மின்னஞ்சல் பகிர்தலை அமைக்கவும். - வாடிக்கையாளர் விசாரணைகளை உங்களால் பெற முடிகிறதா என்பதை உறுதிசெய்ய, உங்களுக்கு நீங்களே சில சோதனை மின்னஞ்சல்களை அனுப்பிப் பார்க்கவும்.
மூன்றாம் தரப்பு வழங்குநரிடமிருந்து புதிய டொமைனை வாங்குதல்
- மூன்றாம் தரப்பு வழங்குநரிடமிருந்து உங்கள் தனிப்பயன் டொமைனைக் கொள்முதல் செய்யவும்.
- தனிப்பயன் டொமைன்களுக்கான வழிமுறைகளைப் பின்பற்றி, உங்கள் ரூட் டொமைன் மற்றும் துணை டொமைன்களை அமைக்கவும்.
- Google Domains, GoDaddy அல்லது IONOS ஆகியவற்றிலிருந்து உங்கள் டொமைனை நீங்கள் வாங்கியிருந்தால், உங்கள் டொமைனைத் தானாகவே இணைக்கவும்.
- வேறு டொமைன் வழங்குநரிடமிருந்து டொமைனை வாங்கியிருந்து, உங்களிடம் அவர்களின் தேவைகள் இருந்தால், உங்கள் டொமைனைக் கைமுறையாக இணைக்கவும்.
- வாடிக்கையாளர்களின் உலாவி, தேடல் முடிவுகள் மற்றும் சமூக ஊடகங்களில் உங்கள் டொமைனே காட்டப்படுவதை உறுதிசெய்ய, உங்கள் முதன்மை டொமைனை அமைக்கவும்.
- உங்கள் வாடிக்கையாளர்கள் உங்கள் தனிப்பயன் டொமைன் மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பும் வகையில், மின்னஞ்சல் ஹோஸ்டிங்கை அமைக்கவும்.
ஏற்கனவே உள்ள டொமைனை இடமாற்றுதல்
உங்கள் Shopify ஸ்டோருடன் பயன்படுத்த, ஏற்கனவே உள்ள டொமைனை நீங்கள் இடமாற்ற விரும்பினால், இந்தப் படிகளைப் பின்பற்றவும்.
அடுத்த படிகள்
உங்களின் முதல் தயாரிப்புகளைச் சேர்த்து, தீம் ஒன்றைத் தேர்வுசெய்து, டொமைனை அமைத்த பிறகு, உங்கள் ஸ்டோரை அமைப்பதைத் தொடரலாம்.