தயாரிப்புகள்

அடிப்படையான தயாரிப்பு அமைப்பிலிருந்து மேம்பட்ட தனிப்பயனாக்கம் வரை, உங்கள் ஸ்டோரின் ஒட்டுமொத்தத் தயாரிப்பு அட்டவணையை நிர்வகிக்க, உங்கள் Shopify நிர்வாகியில் உள்ள தயாரிப்புகள் பிரிவு உதவுகிறது. உங்கள் வணிகத்தின் தயாரிப்பு வழங்கல்களில் பணிபுரியும்போது நேரத்தைச் சேமிக்க உதவும் தானியக்கமாக்கல், AI மற்றும் மொத்த மேலாண்மைக் கருவிகளும் இதில் உள்ளன.

தயாரிப்புகள் பிரிவின் அம்சங்கள்

Shopify-இல் குறைந்தபட்சமாக ஒரு தயாரிப்பு இரண்டு விஷயங்களை மட்டுமே கொண்டிருக்க வேண்டும்: ஒரு தலைப்பு மற்றும் விலை. அதன்பிறகு, உங்கள் தயாரிப்புகளைக் காட்டவும் விற்கவும் உதவும் விளக்கங்கள், படங்கள், வீடியோக்கள், ஒப்பீட்டு விலைகள், சரக்கு இருப்பு நிலைகள், மாறுபாடுகள், டேக்குகள், மெட்டாஃபீல்டுகள் மற்றும் பல விவரங்களைச் சேர்க்கலாம்.

தயாரிப்பு விவரங்கள்

Shopify-இல் ஒரு தயாரிப்பைச் சேர்க்கும்போது, உங்கள் தயாரிப்பிற்கான தொடர்புடைய அனைத்து அமைப்புகளையும் உள்ளமைக்கலாம்:

  • தலைப்பு மற்றும் விளக்கம்: ரிச் டெக்ஸ்ட் வடிவமைப்பைப் பயன்படுத்தி SEO-க்கு ஏற்ற தயாரிப்புப் பெயர்களையும் விளக்கங்களையும் உருவாக்கலாம். தேடலில் சிறப்பாகக் காட்டப்படுவதற்கு, நகல் உற்பத்தியாளர் விளக்கங்களைத் தவிர்க்கவும்.
  • மீடியா: தயாரிப்புகளைக் காட்டப் படங்கள், 3D மாடல்கள் அல்லது வீடியோக்களைப் பதிவேற்றலாம். இது டெஸ்க்டாப் மற்றும் மொபைல் தளவமைப்பு மாற்றங்களையும் பெரிதாக்கும் செயல்பாட்டையும் ஆதரிக்கிறது.
  • விலை நிர்ணயம் மற்றும் சரக்கு இருப்பு: அடிப்படை விலைகளை அமைக்கலாம், இருப்பிலுள்ள அளவுகளைத் தடமறியலாம் மற்றும் மாறுபாடு சார்ந்த சரக்கு இருப்பை நிர்வகிக்கலாம்.

விவரங்கள் மற்றும் படிப்படியான வழிமுறைகளின் முழுமையான பட்டியலுக்கு, தயாரிப்பு விவரங்கள் ஆவணத்தைப் பார்க்கவும்.

தயாரிப்பு மேலாண்மை

உங்கள் தயாரிப்புகளைச் சேர்த்த பிறகு, அவற்றை தனித்தனியாகவோ மொத்தச் செயல்கள் மூலமாகவோ நிர்வகிக்கலாம். தயாரிப்புகளின் குழுக்களுக்குக் குறிப்பிட்ட அமைப்புகளைப் பயன்படுத்த அல்லது உங்கள் ஆன்லைன் ஸ்டோரில் அவற்றை ஒன்றாகக் காட்ட உதவும் வகையில், அவற்றைச் சேகரிப்புகளாக ஒழுங்கமைக்கலாம்.

மேலும் விவரங்கள் மற்றும் வழிமுறைகளுக்கு, பின்வரும் தயாரிப்பு மேலாண்மைச் செயல்களை மதிப்பாய்வு செய்யவும்:

மொத்தத் திருத்தியைப் பயன்படுத்தி விலைகளைச் சரிசெய்தல் அல்லது விற்பனைச் சேனல் தெரிவுநிலையை மாற்றுதல் போன்ற குறிப்பிட்ட மாற்றங்களை ஒரே நேரத்தில் பல தயாரிப்புகளுக்குப் பயன்படுத்தலாம். CSV கோப்புகளைப் பயன்படுத்தியும் உங்கள் தயாரிப்பு அட்டவணையில் மாற்றங்களைச் செய்யலாம்.

பிற Shopify நிர்வாகிப் பிரிவுகளுக்கான இணைப்புகள்

உங்கள் தயாரிப்பு அட்டவணை அமைக்கப்பட்டதும், உங்கள் ஸ்டோரின் மற்ற பகுதிகளை அமைக்க உதவ, இந்தத் தயாரிப்புகளைக் குறிப்பிடக்கூடிய பிற பகுதிகள் உங்கள் Shopify நிர்வாகியில் உள்ளன:

உங்கள் Shopify ஸ்டோருக்கான தயாரிப்புகளைப் பெறுதல்

பிற வணிகங்களிடமிருந்து தயாரிப்புகளைப் பெற்று, அவற்றை உங்கள் ஸ்டோரில் விற்க, பின்வரும் விருப்பத்தேர்வுகளைப் பரிசீலிக்கவும்:

  • Shopify Collective: நீங்கள் சப்ளையர்களைத் தேர்ந்தெடுத்துக் குறிப்பிட்ட பிராண்டுகளையும் தயாரிப்புகளையும் உங்கள் அட்டவணையில் இறக்குமதி செய்யலாம். அத்துடன் முன்கூட்டிய சரக்கு இருப்புச் செலவுகள் ஏதுமின்றி ஒவ்வொரு விற்பனையிலும் லாபத்தைப் பெறலாம். நீங்கள் விற்க விரும்புவதைத் தொகுத்து வழங்கலாம்.
  • டிராப்ஷிப்பிங் செயலிகள்: ஆர்டர்களை உங்கள் வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக நிறைவேற்றும் மூன்றாம் தரப்புச் சப்ளையர்களை, Shopify App Store-இல் கண்டறியலாம்.
  • தேவைக்கேற்ப அச்சிடுதல் செயலிகள்: செயலி வழங்குநரால் அச்சிடப்பட்டு ஷிப்பிங் செய்யப்படும் தனிப்பயனாக அச்சிடப்பட்ட தயாரிப்புகளை விற்கலாம்.

இந்தப் பிரிவில்